#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 ஜூலை, 2011

பெண் உருவில் காய் காய்க்கும் அதிசய மரம்!







                                  பெண் உருவில் காய் காய்க்கும் அதிசய மரம்!(காணொளி இணைப்பு)

Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது.  இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது. இருப்பினும் இது ஒரு கிரப்பிக் வேலை என சிலர் கூறிவருவதும் குறிப்படத்தக்கது.
                                                                                                                                                   

30 ஜூலை, 2011

தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரம் இல்லாதது : ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா

 
திண்டுக்கல் : ""தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமற்றது,'' என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமற்றது. அதில் முஸ்லிம்கள் நிர்வகிக்கும் ஒரியண்டல் பள்ளிகளில் உள்ள உருது மொழி படிக்க வாய்ப்பு இல்லாமல் செய்தது. இதை, தமிழக அரசு ஒராண்டு நிறுத்தி வைக்கும் முடிவு வரவேற்க தக்கதாகும்.

29 ஜூலை, 2011

லிபியாவில் கிளர்ச்சியாளர் படை கமாண்டர் சுட்டுக்கொலை

பெங்காசி, ஜூலை. 29-
 
லிபியாவில் கிளர்ச்சியாளர் படை கமாண்டர் சுட்டுக்கொலைலிபியாவில் அதிபர் கடாபியின் ராணுவத்தின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ஜெனரல் அப்துல் பதாயூனஸ். தற்போது இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களின் படை கமாண்டராக இருந்து வந்தார்.
 
இந்த நிலையில் நேற்று அவர் பெங்காசி நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். எனவே அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

நெருப்பை பயன்படுத்தி முடிதிருத்தும் வினோதம்

கத்திரிக்கோல்.. அல்லது முடிதிருத்தும் பிரத்தியோகமான உபகரணங்கள் மூலம்தான் முடிதிருத்துவது வழமை. இதைவிட அருவா கத்தியாலும் முடி திருத்துபவர்கள் பற்றி கேள்வியூற்றிருப்பீர்கள்.

ரமழானை வரவேற்போம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
Articleபுகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

கொள்ளுமேட்டில் இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பில் ரமலான் வசந்தம்


சென்ற புதன்(27/07/2011) இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை மார்க்க சொற்பொழிவு  நடைப்பெற்றது.F.ரிபாய் தலைமையில் ,சிறப்பு அழைப்பாளராக கோவை.செய்யது வருகை தந்தார்.ரமளானில் எதிர்பார்ப்பது என்ன என்ற தலைப்பில் கோவை.செய்யதும்,மனிதனை புனிதமாக்கும் ரமலான் என்ற தலைப்பில் மொவ்லவி.சைபுத்தின் ஹஜ்ரத் அவர்களும் மேலும் மொவ்லவி.இஸ்மாயில் ,ஜாமியா மஸ்ஜித் இமாம் இம்தாதுல்லாஹ் ,மதினா ஜாமியா பள்ளி இமாம்.முகமத் ஆதம்,அவர்களும் மிகவும் சிறப்பாகவும் .வரும் ரமலானை வரவேற்ப்பு விதமாகவும் பயன்னுள்ள சொற்பொழிவு என்று பொதுமக்கள் அனைவரும் பாரட்டுதக்க விதமாக அமைந்தது என்று அனைவரும் கூறினர்.பெண்களும் ,அண்களும்  பெரும்திரளாக கலந்துக்கொண்டனர் ..எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே''

27 ஜூலை, 2011

பிச்சாவரம் சுற்றுலா மையம்: அமைச்சர் ஆய்வு

 சிதம்பரம், ஜூலை 26: சிதம்பரம் அருகே சுரபுண்ணைக் காடுகள் அடங்கிய பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

26 ஜூலை, 2011

இந்தியாவில் முதன் முறையாக ‘டாடாவின்’ அடுத்த அதிரடி – வெறும் 32,000 ரூபாகளில் தரமான வீடு – முன்கூட்டி புனையப்பட்ட (Pre-Fabricated) வீடுகள் !!!

டாடாவின்-அடுத்த-அதிரடி-குறைந்தவிலை-வீடுகள்
டாடாவின் குறைந்த விலை வீடுகள் அதிரடியாக ரூ.32,000/- கிடைக்கும்!!


புது டில்லி ஜூலை 20 – பல்வேறு துறைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும்  ‘டாட்டா’ நிறுவனமானது, தங்களது அலட்டலில்லாத பயங்கர அதிரடிகளுக்கு பெயர் போனது யாவரும் அறிந்ததே.
முன்னதாக, உலகின் அதி விலை குறைவான நானோ காரை மிக குறைந்த விலையில் அதிரடியாக வெளியிட்ட ‘டாட்டா’ நிறுவனம், இப்போது தொட்டிருப்பது உலகின் மிக குறைவான விலையில் தரமான வீடுகளை கட்டி தரும் திட்டமாகும்.

‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் ‘உயர்நீதிமன்ற’ தீர்ப்புக்கு தடை விதிக்க ”உச்சநீதிமன்றம்’ மறுத்து – சமச்சீர் கல்வி புத்தகங்ககளை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் விநியோகிக்கமாறு தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு!!!

சமச்சீர்-கல்வி-உச்சநீதிமன்றம்-உத்தரவு-சமச்சீர்-கல்வி-புத்தகங்கள்
'சமச்சீர் ' - நீதிக்கு வெற்றி - பண இன வெறி ஆணவத்திற்கு கிடைத்த அடி


டெல்லி ஜூலை 21 -  சமச்சீர் விடயத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த ‘தமிழக அரசுக்கு’ சவுக்கடியாக உச்சநீதிமன்ற,  சென்னை அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க இயலாது என்று கூறி தீர்பளித்துள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வரும் 2-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் பாடப் புத்தகங்களை தமிழக அரசு வினியோகிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

சுரங்க ஊழல், நண்பனின் மனைவியை கரிபழிக்கும் அமைச்சர், சட்டமன்றத்தில் ஆதரவில்லாமல் ஆட்சி, ஜனநாயகத்தை கேலிசெய்து படுகொலை – இவற்றின் மொத்த உருவம் பாஜக வின் எடியூரப்பா!!

-கர்நாடக-ஊழல்-ஜனநாயகப- படுகொலை-கற்பழிப்பு-அமைச்சர்கள்
பாஜக வின் எடியூரப்பா : கிரிமினல் செயல்பாடுகளும் ஜனநாயக படுகொலையும்!!!



பெங்களூர், ஜூலை.25: கர்நாடகாவில் இன்று நடக்கும் ஜனநாயக படுகொலை, லட்சம் கோடி ரூபாய்கள் பெருமான சுரங்க ஊழல், கற்பழிப்பு பேர்வழிகளை அமைச்சராக்கி வைத்தது போன்ற கிரிமினல் குற்றங்களின் தலைவனாக செல்யல்பட்டு ‘முதலமைச்சர்’ பதவிக்கு இழுக்கு தேடி தருபவர் பாஜக வின் எடியூரப்பா.

25 ஜூலை, 2011

கொள்ளுமேடில் ரமலான் வசந்தம் .

                                      அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
வரும் புதன் கிழமை மாலை (27.07.11 ) கொள்ளுமேடு இஸ்லாமிய பிரச்சார பேரவை நடத்தும் ரமலான் வசந்தம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறது கொள்ளுமேடு இஸ்லாமிய பிரச்சார பேரவை 


கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க., ஆட்சி: திருமாவளவன்


பரங்கிப்பேட்டை : ""தி.மு.க., ஆட்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வைத்த எந்த கோரிக்கையையும் நிறைவேற்றித் தரவில்லை,'' என, திருமாவளவன் பேசினார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: இப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

24 ஜூலை, 2011

தேவ்பந்த் பல்கலை. துணைவேந்தர் நீக்கம்

                                                       துணைவேந்தராக பொறுப்பு வகித்த குலாம் முகமத் வஸ்தான்வி 

 

தேவ்பந்த் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தரூல் உலூம் மெüலானா தேவ்பந்த் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து குலாம் முகமத் வஸ்தான்வி நீக்கப்பட்டுள்ளார்.  அவருக்குப் பதிலாக 60 வயதான முஃப்தி அப்துல் காசிம் நுமானி நியமிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் கமிட்டி கூட்டத்தில் வாக்கெடுப்பு .நடத்தப்பட்டது.  இதில் வஸ்தான்விக்கு எதிராக 9 ஓட்டுகளும், ஆதரவாக 4-ம் கிடைத்தன. குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் முஸ்லிம் மாணவர்களும் பயனடைந்துள்ளதாக கடந்த ஜனவரி மாதம் வஸ்தான்வி கருத்து தெரிவித்திருந்தார்.  இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக அவர் அப்பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார்.  இந்த நிலையில் அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

23 ஜூலை, 2011

நகர வாழ்க்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில் தகவல்


கிராமப்புறத்தில் வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது.

கொள்ளுமேடு மத்ரஸா அன்வாருல் ஹீதா பட்டமளிப்புவிழா


 கொள்ளுமேடு ஜாமியா பள்ளி வழக்கத்தின் மதராஸ் அன்வாருல் ஹுதா பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைப்பெற்றது.லால்பேட்டை மதராஸ் தலைமை பேராசிரியர் மொவ்லவி நுருல் அமின் ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி முபல்லிஹா  ஸனதை வழங்கினார்கள். விழாவில் ஜமாத்தார்கள், உலமாக்கள் ,பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பறக்கும் காருக்கு அமெரிக்க அரசு அனுமதி

அமெரிக்க அரசாங்கம் டெரபியூஜியா என்ற பெயர் கொண்ட பறக்கும் காருக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த கார் விமானம் போன்று வானில் பறக்கும். காராக பயணிக்கும் பொழுது இதன் உச்ச வேகம் மணிக்கு 65 மைல்கள் மற்றும் பறக்கும் பொழுது மணிக்கு 115 மைல்கள் வேகத்தில் செல்ல கூடியதாகும். இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் இரு இறக்கைகளும் சேர்ந்து அதன் நீளம் 28 அடி 6 இஞ்ச் ஆக உள்ளது. மேலும், இறக்கைகளை 15 வினாடிகளில் மடித்து பழைய நிலைக்கு கொண்டு வர இயலும். சுமார் 20 மணி நேர பயிற்சியில் இதனை சுலபமாக இயக்க முடியும். 5 வருடங்களில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படும் அதே வேளையில் இதற்கு அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
நன்றி.தினத்தந்தி

முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் சுப்ரமணியம் சுவாமிக்கு ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பா?


15swamyபுதுடெல்லி:அமெரிக்க கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

22 ஜூலை, 2011

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

 

பெங்களூரை சேர்ந்த 92 வயது பாட்டி 78 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ்கிறார். தினமும் இரண்டு கப் காபி மட்டும் போதும் என்கிறார்.

காய்கறிகள் தரும் அழகு

 

நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.

கரட்: விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.

கொள்ளுமேடு த.மு.மு.க. மற்றும் நெய்வேலி அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

 


அல்லாஹ்வின் கிருபையால் கொள்ளுமேடு கிளை தமுமுகவின் சார்பில் 
நேற்று காலை 10 :00 மணி முதல் மாலை 4 :00 மணி வரை 
நெய்வேலி அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து 
இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

20 ஜூலை, 2011

போர் முடிந்தும் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை: ஹிலாரியிடம் ஜெயலலிதா!

இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் தாங்கள் வாழ்ந்து பகுதியில் தமிழர்கள் குடியேற அனுமதிக்கப்படவில்லை என்று தன்னைச் சந்தித்த அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை வந்துள்ள ஹில்லாரி கிளிண்டன் இன்று மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். சென்னை கோட்டையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

ஓநாய் பெண்மணியின் புகைப்படம் வெளியானது

தாய்லாந்து நாட்டில் ஓநாய் போல முகம் முழுவதும் முடியுடன் காணப்படும் சிறுமியின் புகைப்படத்தை இன்று டெய்லி மெயில் பத்திரிகை வெளியீடு செய்தது. தாய் அரசின் புதிய சட்டவிதிகளின்படி 7வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 11 வயதுடைய இந்தச் சிறுமியும் தன்னை புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

வெள்ளை நிற மயில்கள் Albino Peacock

வாசகர்களே நீங்கள் மயில்களை பார்த்து இருக்கக் கூடும்.ஆனால் வெண்ணிற மயில்களை பார்த்து இருக்கின்றீர்களா?

வெண்ணிற மயிலை ஆங்கிலத்தில் Albino Peacock என்பார்கள்.






‘டாடாவின் அடுத்த அதிரடி’ – இந்திய சந்தையை கலக்க வரும் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இரட்டை எரிபொருள் வாகனங்கள்!!!

tata-motors-diesel-electric-hybrid-buses-sexy-amazing-indians
டாடா மோட்டார்ஸ் : இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம், இந்தியாவிலேயே முதல் முறையாக
மும்பை: இந்தியாவிலேயே முதல் முறையாக டாடா மோட்டார்ஸ், டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட பேருந்தை தயாரித்த நிலையில் இப்போது சீக்கிரமே அதன் சோதனை ஓட்டத்தை துவங்க இருப்பதாக நிறுவன செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக எரிவாயு(சிஎன்ஜி) மற்றும் பேட்டரி ஆகிய இரட்டை எரிபொருட்களில் இயங்கும், டாடாவின்  ஹைபிரிட் பஸ்கள் மும்பை மற்றும் டெல்லி போக்குவரத்து கழகங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடனில் சிக்கி தவிக்கும் உலக வல்லரசான அமெரிக்கா !!

ஜூலை 20 :
உலகில் என தம்பட்டம் அடித்து கொண்டு மற்ற நாடுகளை அடிமையாக்கும் எண்ணத்தில் வலம் வந்த அமெரிக்காவில் தற்போது சுமை அதிக அளவில் பாதிப்பை உண்டாக்க உள்ளது. அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் நிலைமையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன.

கற்பழிப்பாளர்களின் சொர்க்கமாக திகழும் அமெரிக்கவை’ போன்றே ‘இந்தியாவையும்’ மாற்றும் இந்திய தண்டனை சட்டம் 375 ஐ எதிர்த்து வழக்கு தாக்கல்!!!

tamil-sex-will-pre-marital-sex-with-the-consent-of-female-be-allowed
கோவில் கருவறையில் பெண்களை 'செக்ஸ்' உறவு கொண்டு, தான் கெடுத்த பெண்களின் சம்மதத்தோடு நடந்த ' என ஆதாரத்திற்கு வீடியோ எடுத்த 'அர்ச்சகர் தேவநாதன்'
சென்னை  ஜூலை 15:  உலகம் முழுவதும் ‘பெண்களுடன்’ கொள்வதில் ஒரு இரட்டை வேட நிலையை ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று கூறி வேஷம் போடும், பெரும்பாலான ‘சமூக’ மற்றும் ‘மத குழுக்களிடையே’ காணக்கூடியதாக உள்ளது.ஒருவனுக்கு ஒருத்தி என்று ‘வெளிப்படையாக’ அறிவித்துவிட்டு, பின்னர் பல பெண்களுடன் ‘’ வைத்து விட்டு, இந்த ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில், பெண்களை கைவிடும் ‘இரட்டை வேட’ நிலைப்பாடு அது.

19 ஜூலை, 2011

பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு

Minister Vishwesvara Hegde Kageri
பெங்களூர்: பகவத் கீதையைக் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும். அப்படி படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கர்நாடக கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி பேசியுள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மரணத்தை நினைவு கூறுவோம்

மரணத்தை நினைவு கூறுவோம் 'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: '(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229) எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும்

மத்திய பிரதேசத்தில் மனைவியின் ரத்தத்தை உறிஞ்சி 3 ஆண்டுகளாக குடித்த கணவர்

மத்திய பிரதேசத்தில் மனைவியின் ரத்தத்தை உறிஞ்சி 3 ஆண்டுகளாக குடித்த கணவர்
போபால், ஜூலை 18-
 
மனிதரின் ரத்தத்தை குடித்து உயிர் வாழும் பேய் களை சினிமா படங்களில் பார்த்து அதிர்ந்து இருக்கி றோம். ஆனால் அந்த கொடூரம் நிஜ வாழ்க்கையில் நடந்து இருக்கிறது.
 

18 ஜூலை, 2011

வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு 27ம் தேதி தண்ணீர் திறக்க முடிவு

சிதம்பரம் : வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு வரும் 27ம் தேதியும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 30ம் தேதியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மூலம் காவிரி டெல்டா பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 70 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கவும் இங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

17 ஜூலை, 2011

திப்பு சுல்தான் கட்டிய பள்ளிவாசலுக்கு ஆபத்து


எத்தனையோ மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்துவிட்டு மறைந்து போயுள்ளனர். அதில் சிலரே இன்றளவும் நாட்டு மக்களால் நினைக்கப்படுகின்றனர். அந்த வகையில் மாவீரன் திப்பு சுல்தான் போற்றப்படத்தக்கவர் களில் முதன்மையானவர். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அந்த மாவீரன் மறைந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஓர் வபாத் செய்தி

   நமதூர் மதினா பள்ளி அருகில் இருக்கும் ஹாபிஸ் முஹமத் பாருக் அவர்களின் மாமனார் ஹாஜி ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் இன்று மதியம் (17.07.2011)    தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.                                       
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

16 ஜூலை, 2011

கனிவாக நடந்துக் கொள்வோம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...


- M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி)
கனிவு” என்ற வார்த்தைக்கு அறபியில் “அர்ரிப்க்” என்று சொல்லப்படும். இவ்வார்த்தையின் பொருளை அறபு மொழி அடிப்படையில் நோக்குகையில் அதன் பொருளானது “உடன்படுதல், ஒரு விடயத்தினை கலவரமின்றி அணுகுதல்” ஆகிய விளக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதே கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “நிச்சயமாக அல்லாஹூத்தஆலா அனைத்து விடயங்களிலும் கனிவை விரும்பக்கூடியவனாக உள்ளான்” என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

கேள்வியும் பதிலும்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள்; அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் – இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும், இரத்தம் சிந்துவதையும், மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?
பதில்:
இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி, அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு, இஸ்லாமியர்களுக்கு – இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.

14 ஜூலை, 2011

மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒபேரா ஹவுஸ், சவேரி பஜார் மற்றும் மேற்கு தாதர் உள்ளிட்ட மூன்று இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 21 பேர் பலியாகியுள்ளனர், 141 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் வேதனையைத் தருகிறது. இக்கொடூர சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

13 ஜூலை, 2011

ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கு பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி

 

சென்னை : ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரமலான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிக்க, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம், மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அனுமதி பெற்ற பள்ளிவாசல்கள், தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட கலெக்டர்கள் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்குவர்.

10 ஜூலை, 2011

அடுத்த ஆண்டு சிறிய கார் அறிமுகம்: ஃபியட்

 
Fiat Small Carடெல்லி: அடுத்த ஆண்டு குறைந்த விலை செக்மென்டை ஒரு கை பார்க்கும் விதத்தில் சிறிய காரை அறிமுகப்படுத்த ஃபியட் திட்டமிட்டுள்ளது.

சிறிய காரை அறிமுகப்படுத்த ஃபியட் ஆயத்தமாகி வருவதாக பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால், ஃபியட் இதுவரை மூச்சு விடவில்லை.

வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர்

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையொட்டி, நான்கு மாத இடைவெளிக்குப் பின், நேற்று முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, வீராணம் ஏரி உள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் ஏரியை நம்பி, 70 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களின் தாகத்தை தணிக்க குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே கோடையில் கூட வீராணத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் சேமிக்காமல் திறந்து விடப்பட்டதால், கடந்த பிப்ரவரி மாதமே வீராணம் வற்றியது. அதனால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டது.

மரணத்துக்கு வலை வீசி... மாணவர்களை இழுக்கும் கைபேசி!


""டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய் "ஜாலியா' இருந்துட்டு வந்தோம்; இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும்...''வார்த்தையை முடிப்பதற்குள் சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின் வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில் பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.

"ஷஃபான்" மாத நோன்பு

நாம் தற்போது  ரமழான் இற்கு முந்திய மாதமான ஷஃபானில் இருந்து கொண்டிருக்கிறோம் . இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பை அறிந்து அதன் நன்மைகளை அடைவோம்.   நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள், மேலும் (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஃபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றத்தை நான் பார்த்ததில்லை.   அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்       நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. மேலும் உங்களால் இயன்றளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் நமைகளை வழங்குவதை நிறுத்தமாட்டான் என்று கூறுவார்கள். 

08 ஜூலை, 2011

குஜராத் குண்டுவெடிப்பு வழக்கு:விசாரணையை துவக்க அனுமதி

court-hammer_6
புதுடெல்லி:2008-ஆம் ஆண்டு குஜராத் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை துவக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதியான முறையில் விசாரணை நடைபெறுவதற்கு வழக்கை குஜராத்திற்கு வெளியே நடத்த வேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணையை துவக்க அனுமதி அளித்துள்ளது.

சமச்சீர் கல்வியில் உருது, அரபு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்(தினமலர்)


"உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும்'' என, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், ஜவாஹிருல்லா பேசினார்.

06 ஜூலை, 2011

உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்!



வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdina
nd-dimadura என்பவர்.
ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச
விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வ
யிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.

இந்திய ரயில்வேயில் இ டிக்கெட் (முன் பதிவு)


புதுதில்லி, ஜூலை.5: இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. தனிப்பட்ட நபர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

ஐஆர்சிடிசி இ-டிக்கெட் போல் இல்லாமல், இந்திய ரயில்வேயின் புதிய சேவையில் பயண முகவர்களுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் இடமில்லை. தனிப்பட்ட பயனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முட்டை பிரியரா நீங்கள் ,....


நீங்கள் முட்டையை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியென்றால், காலையில் அதை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்; உடல் எடை கூடிவிடும் என்று புலம்ப வேண்டாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

முக்கால்வாசி பெண்களுக்கு அதிகம்

ஆண்களை விட பெண்கள் தான் முதுகுவலியால் அதிகமாக அவதிப்படுகின்றனர். குதிகால் செருப்புகள்,நாகரீக செருப்புகள் அணிவதால், உடலின் புவியீர்ப்பு மையம் மாறுபாடு அடைகிறது. ஆங்கில எழுத்தான `எஸ்' வடிவில் அமைந்துள்ள முதுகுத் தண்டு வடம், பெண் மகப்பேறு அடையும் போது மேலும் வளைந்து விடுகிறது.

03 ஜூலை, 2011

சிதம்பரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் : பழைய கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது

சிதம்பரம் : சிதம்பரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் இடிக்கும் பணி துவங்கியது. சிதம்பரம் மேல வீதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1904ம் ஆண்டு கட்டப்பட்ட கடலூர் மாவட்டத்திலேயே பழமையான கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பல முறை மராமத்து பணிகள் மேற்கொண்ட போதும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலைக்கு மாறியது.

02 ஜூலை, 2011

உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள் .

அஸ்ஸலாமு அலைக்கும் ,
உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள் .
ஆக்கம் : ஹாபீஸ் A . B . முஹம்மது . நிர்வாகி அல் பரகா வங்கி.
 
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர் .
அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும் , ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும்  ,
இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் , ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர் .
 
உலக மக்கள் தொகையில் 1 . 5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர் .
அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும்  ,
நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும் , 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர் .

01 ஜூலை, 2011

மமகவின் முயற்சியால் 23 மீனவர்கள் விடுதலை


இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை  கடந்தவாரம் கைது செய்தது. 

அத்துடன் அவர்களுக்கு சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்தது.
இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு கொடுமைகள் அனுபவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் உடனடியாக

மூன் டி.வி. பரவும்வகை செய்துதவுவீர்....

பேரன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)

வல்ல அல்லாஹ் தங்களுக்கு அனைத்து நலனும் வளனும்
நல்கியருளத் துஆ செய்கிறோம்.

பல்வேறு சமயச் சகோதரர்களும் தமிழ்த் தொலைக் காட்சி
சேனல்களைச் சொந்தமாக நடத்திவரும் சூழலும், அவர்கள்தம்
கருத்துகளை அச் சேனல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் நிலையும் கண்டு
நமது சமுதாயத்தைச் சார்ந்தவர் நடத்தும் சேனல் ஒன்றுகூட 
பெரிய அளவில் உலகம் தழுவிய வகையில் இல்லையே
என்ற குறை வெகுகாலமாகவே தமிழக இஸ்லாமியருக்கு
இருந்து வந்தது.

உலகின் நீளமான கடல் பாலம் திறப்பு!


உலகின் மிக நீளமான கடல் பாலம் சீனாவில் வியாழக் கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.

சீனாவின் கிழக்குத் துறைமுக நகரான கிங்டாவோவையும் ஹாங்டாவ் தீமையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் தூரம் 26.4 மைல்களாகும்.

சுமார் 7,500 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் அகலம் 110 படி அடிகள். 5000 தூண்கள் மீது இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மது அருந்த இளம் மனைவியை விற்ற கணவன்!

காசர்கோடு: மது அருந்த பணமில்லாத குடிகார கணவன் தனது மனைவியை, நண்பன் ஒருவனிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரளா காசர்கோடு மாவட்ட்த்தில் உள்ள நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத், (வயது 29). ரப்பர் வெட்டி எடுக்கும் தொழில் செய்து வருகிறார்.  இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இவருக்கும் அருகே உள்ள சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (வயது22), என்பவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

வரலாறு புகட்டும் பாடம்

உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
 
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.

இரண்டு நாள்கள் பத்திரிக்கைகள் புறக்கணிப்பு!!! லால்பேட்டை ஜமாஅத் அதிரடி....

கடந்த இரு தினங்களுக்கு முன்பு லால்பேட்டை காங்கிருப்பு பகுதியில் நடந்து கொண்டிருக்கும்   நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின்  போது,அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும்  பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றும், வேண்டுமென்றே  மோட்டார் சைக்கிளின் சப்தத்தை அதிகப்படுத்தி சொற்பொழிவுக்கு இடையுறு ஏற்படுத்தும்  
வகையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளார்.

குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதன் பின்னணியில் சதித்திட்டம்


 
gujarath riotsபுதுடெல்லி:2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் ஆகியவற்றை மாநில உளவுத்துறை (எஸ்.ஐ.பி) அழித்ததன் பின்னணியில் மாநில அரசின் க்ரிமினல் சதித்திட்டம் உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும்- தேவ்பந்த்

தேவ்பந்த் : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.