#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

29 டிசம்பர், 2012

ஓர் வபாத் செய்தி

கொள்ளுமேடு ....நமதூர் M.I. இக்பால் மனைவியும் ,மர்ஹும் முஹம்மத் கவுஸின் மகளும் ,என் நண்பன் ஹசன் பாருக்கின் சகோதரியுமான  செல்லகனி என்கின்ற சலிமா  அவர்கள்  இன்று மாலை சவுதியில் தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

27 டிசம்பர், 2012

நற்செயல்களை விரைந்து செய்க!


நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிறுத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான்.

உடல் நலம் பேண 100 குறிப்புகள்



1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

23 டிசம்பர், 2012

ஏழை நாடான சோமாலியாவை விட ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் குஜராத்தில் தான் அதிகம்: மார்க்கண்டேய கட்ஜு


ஏழை நாடான சோமாலியாவை விட ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் குஜராத்தில் தான் அதிகம்: மார்க்கண்டேய கட்ஜு
 

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், மார்கண்டேய கட்ஜு, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்தார். போபாலில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- 

குஜராத் மாநிலம் முன்னேறி விட்டதாக நரேந்திரமோடி கூறிவருகின்றார். இந்த முன்னேற்றம் சராசரி மனிதனின் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் உதவிடவில்லை. 

18 டிசம்பர், 2012

பள்ளி வளாகத்திற்கு சுற்று சுவர்: இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா



















பிரப்பன்வலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாததால் ஆடு,மாடு போன்ற விலங்குகள் கூடும் இடமாக பள்ளி வளாகம் இருந்தது.எனவே சுற்று சுவர் கேட்டு சட்டமன்றஉறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இக்கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சுற்று சுவர் கட்டுவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்.2012-2013 நிதியாண்டு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டி முடிக்கப் பட்ட சுற்று சுவரை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி கூறிக் கொண்டனர்.

டெங்கு காய்ச்சல் 100 சதவிகிதம் ஒழிக்கப்பட்ட மாவட்டம்!


காரைக்கால்:  "மாவட்ட நலவழித்துறையின் தீவிர முயற்சியால், காரைக்காலில், டெங்கு காய்ச்சல் 99 சதவிகிதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது" என நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, காரைக்கால் மாவட்ட நலவழித்துறையின் துணை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி கூறியதாவது:
"அண்டை மாநிலங்களில் டெங்கு வேகமாக பரவி வந்தபோது, காரைக்காலிலும் அதன் தாக்கம் இருந்தது. இதனால் டெங்கு

அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மட்டுமே தகுதியானவர்: அரசு அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மட்டுமே தகுதியானவர்: அரசு அறிவிப்பு

2013 ஹஜ்- விண்ணப்பிக்கும் முன் பாஸ்போர்ட் அவசியம்!
2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க உள்ளவர்கள் விண்ணப்பத்தின்போது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில்:

2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.  எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே பாஸ்போர்ட்டு பெற்றுள்ளவர்கள் (குழந்தைகள் உட்பட), அவரவர்களுடைய பாஸ்போர்ட்டுகளின் செல்லுபடியாகக் கூடிய காலத்தை சரிபார்த்து, செல்லுபடியாகும் காலம் 31.03.2014 வரை இல்லையென்றால் அந்த பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும், பாஸ்போர்ட்டில் விசா பதிவிற்காக குறைந்த பட்சம் அருகருகே 2 பக்கங்கள் காலியாக இருக்குமாறு உறுதி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஹஜ் 2013-க்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கவிருக்கும் மனுதாரர்கள் ஐஎப்சி குறியீடு உள்ள வங்கிகளில், புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்குமாறும், அவ்வாறு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதற்கு சான்றாக காசோலை ஒன்றினை (இரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
2013 ஹஜ்- விண்ணப்பிக்கும் முன் பாஸ்போர்ட் அவசியம்!
2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க உள்ளவர்கள் விண்ணப்பத்தின்போது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில்:

2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.  எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

08 டிசம்பர், 2012

காட்டுமன்னார்கோவில் ஆயங்குடியில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை


காட்டுமன்னார்கோவில் ஆயங்குடியில் மழை வேண்டி முஸ்லீம்கள்
 சிறப்பு தொழுகை
 

காட்டுமன்னார்கோவில் அருகே மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார் கோவில் பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது நடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற இன்னும் 2 மாதத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. 

02 டிசம்பர், 2012

இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker-ன் பரபரப்பான வாக்குமூலம்


 நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker-ன் பரபரப்பான வாக்குமூலம்

[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.

01 டிசம்பர், 2012

லால்பேட்டையில் 144 தடை உத்தரவு


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை அருகே உள்ள இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …

ரம்ஜான் தைக்கால் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே மது குடித்துக்கொண்டிருந்தனர், இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்டித்தனர், இதனால் இருதயபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோபம் அடைந்து ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம், சலீம் ஆகியோரைத் கடுமையாக தாக்கி சலீமின் டீக்கடையையும் அவர்கள் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்,இதைத்தொடர்ந்து தைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இருதயபுரத்திற்குத் திரண்டு சென்றனர், தகவல் அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்,