#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 மே, 2011

இராமநாதபுரம் வாக்காளர்களுக்கு டாக்டர் ஜவாஹிருல்லாஹ் நன்றி!-01


கடந்த 29.05.2011 அன்று இராமநாதபுரம் தொகுதி வாக்காளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தமைக்கு நன்றி கூறினார்.




கடல்அட்டை தடையை நீக்க நடவடிக்கை : ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

கீழக்கரை : ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கீழக்கரையில் கிடப்பில் கிடக்கும் தாலுகா அலுவலகம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தரமில்லாத நிலையில் உள்ள மின் கம்பிகள் மாற்றுவதற்கான பணியை துரிதப்படுத்த வலியுறுத்தப்படும்.

லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவையையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அவசர உதவிக்காக இலவச ஆட்டோ சேவை துவங்கப்பட்டது. வயதானவர்கள், பிரசவத்திற்கும் செல்பவர்கள் மற்றும் அவசர உதவிக்காக இரண்டு ஆட்டோக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமையில் இலவச ஆட்டோ சேவையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


 நன்றி. தினமலர்

நடுரோட்டில் பஸ் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு


காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, தனியார் பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து, நேற்று மதியம், காட்டுமன்னார்கோவிலுக்கு, தனியார் பஸ், 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. குமராட்சி அருகே செல்லும்போது, பஸ்சின் முன் சக்கரத்தில் இருந்து, சத்தம் வந்ததால், டிரைவர் பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், பேரிங் உடைந்தது தெரிந்தது. காட்டுமன்னார்கோவில் வரை சென்று விடலாம் என, டிரைவர் மீண்டும் பஸ்சை இயக்கினார். லால்பேட்டை நெருங்கிய போது,

மண்ணறை வேதனை''

இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது...... இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்: பேரா.ஜவாஹிருல்லாஹ் M L A

பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.
காயல்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்துள்ளதால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த 24ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் இஸ்லாமிய திருமண கட்டாய பதிவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

முஸ்லிம் பெண்ணின் உடலுக்கு இந்து முறைப்படி ஈமக்கிரியை!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீவிபத்தில் ஆயிசா (30) என்ற முஸ்லிம் பெண்ணின் உடலும், சுந்தரி சைன் (30) என்ற சமவயதுள்ள இன்னொரு பெண்ணின் உடலும் ஒரே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.

சவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.

30 மே, 2011

ஏழை நோயாளிக்கு தமுமுக ரூ. 1 லட்சம் நிதியுதவி


  சிறுதொழில் தொடங்குதல் மற்றும் மருத்துவ உதவிக்காக ஏழை முஸ்லிம்களுக்கு, தமுமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. 
 
 ராமநாதபுரம் அருகே மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த கமருதீன் என்பவருக்கு, விபத்தில் கால் முறிந்த நிலையில், அவரது சிகிச்சைக்காக ரூ. 20 ஆயிரம், ராமநாதபுரம் நகர் சின்னக்கடையைச் சேர்ந்த முகம்மதுகனிக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக ரூ. 25 ஆயிரம், மண்டபம்,தேவிபட்டினம்,வெளிப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு சிறுதொழில் தொடங்க மற்றும் கல்வி உதவித் தொகையாக மொத்தம் ரூ. 55 ஆயிரம் உள்பட ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 

விநாடிகள் 6 : பலி 1 - இன்று புகையிலை எதிர்ப்பு தினம்


 

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால், மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய "நேர் அணுகுமுறை" Positive approach

M.ஷாமில் முஹம்மட்

முஸ்லிம்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதிதூதர் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வேத நூலை அல்குர்ஆனை முழுமையாக நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஸஹிஹான ஹதீஸ்களை முழுமையாக நம்பி விசுவாசிக்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகைக்காக அழைகின்றார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு இறைவனை , ஒரு திசையை நோக்கி தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் இறைவனை தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைக்கின்றார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஸகாத் கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ஜை கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் அல் ஜிஹாதை ஒரு கடமையாக கொள்கிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பதை கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் -அல் குதுஸ்- மீட்பதை கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உலகளாவிய தலைமையை ஏற்படுத்த விரும்புகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் உலகில் மீ இஸ்லாம் மாபெரும் சக்தியாக உருவாக விரும்புகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைதான் இஸ்லாம் என்றும் நம்புகிறார்கள்

28 மே, 2011

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்10 அணிகள் பங்கேற்ற 4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதை தொடர்ந்து முரளிவிஜயும், மைக் ஹஸ்ஸியும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முந்தைய 2 ஆட்டங்களில் சொதப்பிய இருவரும், இந்த முறை உள்ளூர் ரசிகர்களுக்கு சரியான விருந்து படைத்தனர்.

பேரவையின் கவுரவம் மேலும் உயரும் வகையில் செயல்படுங்கள்: ஜவாஹிருல்லாஹ்!

 
தமிழக சட்டப்பேரவையின் கம்பீரமும் கவுரவமும் மேலும் உயரும் வகையில் சபாநாயகர் செயல்படுவார் என நம்புவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்து சட்டப்பேரவையில் பேசியதாவது:

27 மே, 2011

அரபி மொழி பாடம்: காயல்பட்டினம் மாணவிகள் மாநில ரேங்க்


 
 


ஆறுமுகனேரி, மே 27: பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வில் அரபி மொழிப் பாடத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.எம்.ஏ.ஆயிஷா முஸ்ஃபிரா, அரபி மொழிப் பாடத்தில் 95 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

26 மே, 2011

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி SSLC தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2011 ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 114 மாணவர்களில் 114 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். மாஷா அல்லாஹ்.
தேர்ச்சி பெற்றவர்களின் முதல் மூன்று இடங்கள் விபரம்.
H.முஸ்பிரா 467 – A.R.அப்ர்ன் பாத்திமா-467,
S.M.பர்ஹின் பானு – 458,
P.R.எழில் அரசி – 454, K.பாத்திமா நஸ்ரின் – 454,


நன்றி.லால்பேட்டை.காம்

ஜுமுஆ தினம்

அஸ்ஸலாமு அழைக்கும்.....



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

62:9 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

62:9. ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

அதிசயிக்க வைக்கும் கட்டிடங்கள்

நவீன கட்டிடக் கலையானது வளைவான வடிவங்கள், வித்தியாசமான வடிவங்கள், புதிய வடிவங்கள் என பல முறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று நாம், உலகிலுள்ள 10 சிறந்த கட்டிடங்களை பட்டியல்படுத்தியுள்ளோம்.
கூபிக் கவுஸஸ், ரொட்டர்டாம், நெதர்லாந்து



1970 ஆம் ஆண்டில் பியட் ப்ளொம் என்பவர் இந்த கூபிக் கவுஸஸ் என்னும் கட்டிடம் பற்றி எண்ணியிருந்தார். ஹெல்மண்ட் என்னும் இடத்தில் இவ்வாறான கட்டடங்கள் சில அமைக்கப்பட்டன. அதன் பின் பாதசாரிகளின் மேம்பாலத்திற்கு மேலாக அமைக்கும் படி ரொட்டர்டம் கேட்டுக் கொண்டதன் பிறகே அவரது எண்ணம் நிறைவேறியது.

உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!



சவூதி ரியாத் தலை நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் பெண்களுக்கான பல்கலைக் கழகம் 15-05-2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. மன்னர் அப்துல்லாஹ் 20 மில்லியன் ரியால் செலவில் கட்டப்பட்ட இப்புதிய வளாகத்தை எளிமையாக திறந்து வைத்தார். இப்பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகமாகும். பெண்களுக்கான இந்த பல்கலைக் கழகம் உலகிலேயே பெரிதாகும். 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் விதமாக இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

25 மே, 2011

ஆம்பூரில் இலவச பட்டாக்கள் வழங்கினார் அஸ்லம் பாட்ஷா


வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் மழையில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சலாஹுதீன் நகர் ஏழை மக்களின் குடிசை வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இவர்களுக்கு அரசின் சார்பாக ஆம்பூர் தார்வழியில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா பட்டாக்களை மக்களுக்கு இன்று 25.05.2011 வழங்கினார். மேலும், ஆம்பூர் அஹ்லே சுன்னத் ஜமாத் சார்பாக தலா ரூ.5,000 வீதம் பண உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் தலைவர் கலீல் பாய் மற்றும் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

தமிழக முதலமைச்சருக்கு தமுமுக தலைவர்கள் நேரில் வாழ்த்து


தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி மற்றும் ஆம்பூர் தொகுதி ம.ம.க. எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா ஆகியோர் சந்தித்து வாழ்த்துக் கூறினர்.


முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, திருமணப் பதிவுச் சட்டம், உருது மொழி உள்ளிட்ட சமுதாயக் கோரிக்கைகளை முதல்வரிடம் தமுமுக தலைவர்கள் வலியுறுத்தினர்.

மீனவர் பிரச்சினை உள்ளிட்ட இராமநாதபுரம் தொகுதி மக்களின் தேவைகளை இராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா முதல்வரிடம் எடுத்துரைத்தார்.
ஆம்பூர் தொகுதிப் பிரச்சினைகளை ஆம்பூர் எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா முதல்வரிடம் எடுத்துரைத்தார்.

24 மே, 2011

ஹஜ் பயணம் செல்ல 3,049 பேர் குலுக்கல் முறையில் தேர்வு


 
சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 3,049 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

அரசின் மானியம் பெற்று ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான, குலுக்கல் சென்னை, ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா குலுக்கலைத் துவக்கி வைத்தார். இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். அரசு செயலர் சந்தானம், சிறுபான்மையினர் நலத்துறை உறுப்பினர் செயலர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கணவரை மகிழ்விப்பது எப்படி? மனைவியின் அழகிய வரவேற்பு


பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
...

முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்


உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள். சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.


அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்). கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

23 மே, 2011

மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பதவி ஏற்பு.

Picture
ராமாநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்.பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (வலது), ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம்பாஷா (இடது)


தமிழக ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களின் உரிமை குரலாய்  உருவெடுத்திருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் வெற்றி வேட்பாளர்கள் பதவி ஏற்றுகொண்டனர் .


நடப்பு சட்டமன்ற அவையில் ராமாநாத புரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. டாக்டர் எம்.ஹெச் ஜவாஹிருலாஹ்  ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா  இருவருக்கும் தற்காலிக சபாநாயகர் செகு தமிழரசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 தமிழக    அரசியல்   அரங்கில்  பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை சமூக உரிமைபோர்ப்படையாம் மனித நேய மக்கள் கட்சி தனி சின்னத்தில் சுய அடையாளத்துடன் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் குதித்தது   மக்களின் பேராதரவுடன்  சட்டம் இயற்றும் அவையிலும் நுழைந்து தனது கணக்கினை துவங்கியுள்ளது.

எல்லாம் வல்ல ஏக இறைவனின் பெயர் கூறி பதவி பிரமாணம் ஏற்றுகொண்ட மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக இறைவனின் திருப்பெயரால் தங்கள் பணியினை தொடங்கினர் .அவர்களின் அரசியல் லட்சியம் , உரிமை மீட்பு வென்றிட நாமும்

கொள்ளுமேட்டில் புதிய நர்சரி&பிரைமரி ஸ்கூல் உதயம்''



கொள்ளுமேடு புதுத்தொருவில் அல் அமான் நர்சரி&பிரைமரி ஸ்கூலின் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. விழாவிற்க்கு  தமுமுக மாநில து.செ S.M.ஜின்னா   அவர்கள் தலைமை தாங்க ,  அல் அமான் பள்ளியின் தாளாலர் ,கொள்ளுமேடு ஊராச்சி மன்ற தலைவர் தமுமுக மா.செ. N.அமானுல்லாஹ் அவர்கள் வரவேற்க்க விழா சிறப்பு அழைப்பாளார்கள்  காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாரன் வருகை தந்தார்கள்.

அமைச்சர் சாவில் மர்மம்; முதல்வர் ஜெ., திடுக்.,- சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு

திருச்சி: பெரம்பலூர் அருகே அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) பலியானார். இவரது உடலுக்கு முதல்வர் ஜெ., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதனால் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் முதல்வர் ஜெ., கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்டசபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அ.தி.மு.க.,வினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடாலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்த வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.

21 மே, 2011

மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு கோலாகலகத் தொடக்கம்

 
Malaysia World Islamic Tamil Conference

கோலாலம்பூர்: மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 20.05.2011 வெள்ளிக்கிழமை மாலை புத்ரா உலக வர்த்தக மையத்தில் கோலாலகலமாகத் துவங்கியது.

மாயின் அபூபக்கர் – பரக்கத் அரங்கில் நடைபெற்ற அறிமுக விழாவின் துவக்கமாக இறைமறை வசனங்களை மஸ்ஜித் இந்தியா இமாம் மௌலவி ஹாபிஸ் எஸ்.எஸ். அஹ்மது பாஜில் பாக்கவி ஓதினார். கவிஞர் மைதீ. சுல்தான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மனிதநேய மக்கள் கட்சி பேரவைக் குழுத் தலைவர் தேர்வு

சென்னை, மே 21: மனிதநேய மக்கள் கட்சி சட்டப் பேரவைக் குழுத் தலைவராக பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இக்கட்சி பேரவைத் தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட்டு, ராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 
இதில் கட்சியின் பேரவைக் குழுத் தலைவராக ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டார். அஸ்லம் கட்சியின் பேரவைக் குழு செயலாளராகச் செயல்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது கூறியுள்ளார்.

நன்றி. தினமணி
 

பேஸ்புக் பாவனையாளர்களே! எச்சரிக்கை

உங்கள் பேஸ்புக் கணக்கு எந்த வேளையிலும் ஹக் பண்ணப்படலாம்!

முன்குறிப்பு: இந்த பதிவு ஹக்கிங் பற்றிய தெளிவை பெற்று அதிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்கே. தவிர ஹகிங்கை ஊக்கப்படுத்த அல்ல.



முன்னணியில் இருக்கும், அதிக பாவனையாளர்களை கொண்ட ஒரு சமூக வலைத்தளம் பேஸ்புக். அதே நேரம் பாதுகாப்பு விடயத்தில் மிகவும் பலவீனமானது. 
அண்மையில் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அதாவது "எமது தளம் அவசரமாக உங்கள் தகவல்களை அப்டேட் செய்ய உள்ளதால் இந்த இணைப்பினூடாக சென்று தகவல்களை அப்டேட் செய்திடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கேலிப்பொருளாகிப்போன சாமியார்கள்



ஒரு சமூகத்தில் மிக மிக மதிப்பிற்குரியவர்களாக, உயர்ந்தவர்களாக ஏனையவர்களால் வணங்கப்படுபவர்கள் இந்த சாமியார்கள். இந்து சாமியார்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் எல்லாமெ இதில் அடக்கம். கடவுளை நம்புபவர்களும் சரி, நம்பாதவர்களும் சரி, இவர்களுடைய சொற்களுக்கு என்றுமே மதிப்பு கொடுப்பார்கள். காரணம் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பும், அவர்களுடைய நல் வழிநடத்தல், சமூகம் மீதான அக்கறை போன்றனவாகும்.



ஆனால் பல சாமியார்கள் சமூகத்தில் தமக்கிருக்கும் செல்வாக்கை தவறான முறையில் பயன்படுத்த துணிகிறார்கள். இவ்வாறான போலிச்சாமியார்களே இன்று எல்லா சமூகங்களிலும் நிறைந்துள்ளார்கள். இன்று அனைத்து ஊடகங்களிலும் பிரபலமாயுள்ள ஒரு செய்தி “இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடும்” இப்படிச் சொல்லியுள்ளார் அமெரிக்காவின் ஹரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர்.

25 காசுக்கு டாட்டா பை பை!!


  25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29 ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும். இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழக போலீஸ்ஸும்!! ரவுடிகள் வேட்டையும்!!


May 21, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 214 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீனில் வந்தவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் எவ்வித விசாரணையும் இன்றி 6 மாதம் சிறையில் அடைக்க,

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

20 மே, 2011

இந்தியாவிலேயே முதன்முறையாக கோழியின உற்பத்திக்கு பி.டெக். படிப்பு அறிமுகம்


         இந்தியாவிலேயே முதன்முறையாக கோழியின உற்பத்திக்கென, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பி.டெக். தொழில்நுட்ப பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.  

           இந்த இளநிலை பட்டப் படிப்பு, கோழிப் பண்ணைத் தொழில் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. 

 இதுதொடர்பாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கே.சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை: 

கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

Kanimozhi
 
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.

இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி!!


May 20, தமீம் அன்சாரி நாகை மாவட்டம், நாச்சி குளம் என்ற ஊரைச்சேர்ந்தவர். முஸ்லீம் சமூகத்தில் இருந்து மிக இளம் வயதிலே அரசியல் தளத்துக்கு வந்தவர்.

சிறந்த செயல்வீரர், இவரின் தோல்வி உண்மையிலேயே தமிழக முஸ்லிம்களை பொருத்தவரை இழப்பென்றே சொல்லலாம்.

தமிழக முஸ்லீம் தலைவர்களில் தமீம் அன்சாரி ஒரு துடிப்பான இளைஞ்ஞர். இவர் ஜெயித்து சட்ட சபைக்கு சென்றிருந்தால், முஸ்லீம் மக்களின் குரலாக ஒலித்திருப்பார்.

எமக்கு தேவை ஆயிரம் நரிகளின் ஊளைகளல்ல. ஒரு சிங்கத்தின் கர்ஜனையே. அந்த வாய்ப்பு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தமீம் அன்சாரிக்கு இல்லாமல் போனது கவலைக்குரிய விசயமாகும்.

சிங்கத்தின் வாலாய் இருப்பதைவிட கட்டெறும்பின் தலையாயிருப்பதே மேல்" என்று மமக முடிவெடுத்து தனிச்சின்னத்தில் நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விசயமாகும்.

நன்றி.சிந்திக்கவும்

18 மே, 2011

முன்னாள் முதல்வர் மீது வழக்கு தொடர ம.ம.க., ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்


திருச்சி: "தமிழக மீனவர் கொலையான தகவல் தெரிந்தும், அதை மறைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர வேண்டும்' என, மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கும் விழாவை, நாங்கள் புறக்கணிக்கவில்லை. குஜராத் கலவரத்தில் குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட் அறிவித்த நரேந்திரமோடி பங்கேற்றதால், விலகி நின்றோம். அ.தி.மு.க.,வுடன், ம.ம.க.,வின் உறுதியான கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றதை இலங்கை ராணுவ ரவுடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அன்று நள்ளிரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விக்டஸ், ஆண்டனிராஜ், மாரிமுத்து, ஜான்பாலை கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்தனர்.அவர்களுடைய உடல் கிடைக்காத நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, மீனவர்களின் குடும்பத்துக்கு தலா, 5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கி உத்தரவிட்டார்.ராமேஸ்வரத்தில் இருந்து அருளானந்தம் குழுவினரிடம், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இருந்த விக்டஸ் உடலை காட்டியுள்ளனர். அங்கேயே கழுத்து, கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த இரு உடல்களை மறைத்து விட்டனர். அடுத்தடுத்து அந்த உடல்கள் கரை ஒதுக்கின. உடல் கிடைத்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க வேண்டும் அல்லது ஏழு ஆண்டுகள் கழித்தே உதவித்தொகை வழங்கியிருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தை இடமாற்ற தடை கோரி வழக்கு!

"சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்ட தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்தை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்" என்றுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்படுள்ளதாவது:

"1640-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோட்டைதான் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஜார்ஜ் கோட்டை, அரசு அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

17 மே, 2011

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்!

மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி  
வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும்  உண்டாவதாக!

இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டு அவனிடமே நமது தேவைகளை பொறுப்புச் சாட்டி அதற்குரிய காரணிகளை இனங்கண்டு  செயல்படுத்துவதாகும்.

16 மே, 2011

மனிதநேய மக்கள் கட்சி முதலமைச்சர் பதவி ஏற்ப்பு வீழாவை புறக்கணிப்பு''

ஜெயலலிதா பதவி ஏற்பில் நரேந்திர மோடி பங்கேற்ற காரணத்தால் தமுமுக மற்றும் ம.ம.கவினர...் தலைவர் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்சா உள்பட யாரும் பதவி ஏற்புவிழாவில் கலந்துகொள்ளவில்லை. முதன் முதலாக வெற்றிபெற்ற ம.ம.கவினர் முதல் பதவி ஏற்புவிழாவையே கொள்கைக்காக புறக்கணித்துள்ளனர். எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.
இது சம்மந்தமான அதிகாரப்பூர்வமான செய்தி இன்று மாலை இன்ஷா அல்லாஹ் வெளிவரும்.

14 மே, 2011

என் தோல்விக்காக கலங்காதீர்கள்...

எம்.தமிமுன் அன்சாரி

அன்பிற்குரிய நண்பர்களே, சகோதரர்களே...

...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.
எத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.

தங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை.

13 மே, 2011

ராமநாதபுரத்திலும் ,ஆம்பூரிலும் மனிதநேயமக்கள் கட்சி அமோக வெற்றி"

இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலியை விட 15,849 ஓட்டுக்கள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்றார். அல்ஹம்து லில்லாஹ்.

மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி (அல்ஹம்துலில்லாஹ்)

ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.அஸ்லம் பாஷா பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.

2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும் 2007 ல் மாவட்ட செயலாளராகவும்இ 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.


12 மே, 2011

துபாயில் முதல் சம்பவம்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தமிழக வாலிபர் குதித்து தற்கொலை


 
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. இந்த கட்டிடம் மொத்தம் 147 மாடிகளைக் கொண்டதாகும்.
 
துபாயில் முதல் சம்பவம்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தமிழக வாலிபர் குதித்து தற்கொலைஇதில் 45 மற்றும் 108 மாடி என இரண்டே இரண்டு மாடிகளில் மட்டும் மக்கள் வசிக்கிறார்கள். மற்ற 145 மாடிகளிலும் பல்வேறு கார்ப்ரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  
 
அரப்டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (வயது 38) என்பவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனம் புர்ஜ் கலீபா கட்டிடத்தின் 120-வது மாடியில் உள்ளது.

10 மே, 2011

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100  சதவிதம் தேர்ச்சி  
 
2100  க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயிலும் லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி   +2 மாணவ மாணவியர் 100  சதவிதம் தேர்ச்சி  பெற்று இருக்கின்றனர்
 
A .M .சமிஹா  -1136          H .R .ஷிரின் பானு -1099                  A.H.ஜீனத்துன்னிஷா -1082
D/O.மர்ஹும்,அப்துல் முனிர்           D/O.ஹபிபுர்  ரஹ்மான்                     D/O.அப்துல் ஹாலித்
வடக்குத்தெரு                    மேலத்தெரு                                         ஹைஸ்கூல் பின்புறம் 
 
                                                                 1000 ABOVE
A .H .உம்மு சல்மா -1064                S .லாமிய பர்வீன்-1059         M .A .அஜிபா பேகம் -1037
 
A .சுமையா பானு -1015                    நஜர்னா சார்மின் -1014
 
                                                                             900 ABOVE
H . மஸ்ரூரா  பேகம் -990                              F .  நிஸ்வானா பானு -927
A .அர்சியா பேகம்- 982                                    A .நஸ்ரின் பானு -925
I.நூருல் ஹய-957                                            A .முசைதக 924
M .H .முனவ்வரா-943                                       J .நஸ்ரின் பெமினா -916
S .சப்ரியா பேகம்-935                                       M .H .ரிபாயா பானு -906
இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று லால்பேட்டை வரலாற்றில் புதிய அத்தியாயமாக 1136 மார்க்குகள் பெற்றது குறித்து பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமதிடம் கேட்டபோது கூறியதாவது:அல்ஹம்துலில்லாஹ்.. கடந்த பத்து வருடங்களில் 1039 மதிப்பெண் தான் அதிகமாக இருந்துள்ளது.இவ்வருடம் புதிய சாதனையை நமது பள்ளி எட்டியிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் மநிலத்திலேயே முதலிடம் பெறும் மாணாக்கர்களை நமது இமாம் கஸ்ஸாலி உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.இந்த சிறப்பான வெற்றியை நமது பள்ளிக்கு பெற்றுத்தந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியகள், நிர்வாகிகள்,பெற்றோர்கள்,ஊர்மக்கள் மற்றும் பள்ளியின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
 
  நன்றி.  லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

மார்பக புற்றுநோய்: விழிப்புடன் இருங்கள்

  சென்னை மார்பக மையத்தின் இயக்குனர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன்:இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது மிக எளிதாக தவிர்க்கக் கூடிய பிரச்னை. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.நாற்பது வயதிற்கு மேல், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை முழுமையாக மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது முக்கியம். மார்பகப் புற்றுநோயை கண்டறிய,

09 மே, 2011

பாபரி மஸ்ஜித் வழக்கு: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு தமுமுக வரவேற்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை.

பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கிய கட்டப்பஞ்சாயத்து பாணியிலான தீர்ப்பிற்கு இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தடையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனமார வரவேற்கிறது.

அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வினோதமானது என்றும்  தகராறுக்குரிய இடத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது  தேவையில்லாத சட்ட தாவாக்களை ஏற்படுத்திவிட்டது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று இவ்வழக்கில் கருத்து தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

12ம் வகுப்பில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை


நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் முஸ்லிம் மாணவிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லிம் மாணவிகள் பெற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும் ரஹ்மத் மெட்ரி்க்  மேநிலைப்பள்ளியில் படித்த மாணவி அய்னுல் மர்லியா தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அப்பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றார். தமுமுக திருவரூர் மாவட்ட துணைச் செயலாளர் தீன் முஹம்மது, முத்துப்பேட்டை  நகரச் செயலாளர் முஹம்மது யாசீன், நகரப் பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரைப் பாராட்டினர். தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தொலைப்பேசி வாயிலாக தனது பாராட்டுகளை மாணவி மர்லியாவிடம் தெரிவித்தார். மாணவி மர்லியா தான் மருத்துவம் படிக்க விரும்புவதாக அப்போது தெரிவித்தார்.