ஜாமீனில் வந்தவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் எவ்வித விசாரணையும் இன்றி 6 மாதம் சிறையில் அடைக்க,
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ரடிவுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் உள்ள சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நேற்றிரவு ரவுடிகள் வேட்டையை தொடங்கினர்.
இதன்படி திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், நாகை உட்பட டெல்டா மாவட்டங்களில் நேற்று நடத்தப்பட வேட்டையில் ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகள், சாராய வியாபாரிகள் என சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு ரோந்துகள் தீவிரப்படுத்தப்பட்டு பழைய குற்றவாளிகள் யார் யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தீவிர விசாரணை நடத்துகின்றனர். பழைய வழக்குகளில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் பழைய குற்றவாளிகளை போலீசார் தேடினர்.
சிந்திக்கவும்: சும்மாவே இந்த போலீஸ்கார்கள் நாங்கள் போலீஸ் இல்ல பொறுக்கி என்று நடந்து கொள்வார்கள். ரவுடிகளை பாவம் என்றே சொல்லவேண்டும்.
இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளாலும், போலீஸ் இலஞ்ச பொறுக்கிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள் தான் ரவுடிகளில் பெரும்பான்மையினர் என்பதே உண்மை.
வறுமைக்காக திருடும் சிறுதிருடன் கூட, இந்த கனவான்கள் ஆசியால்தான் பெரும் ரவுடிகளாக மாற்றபட்டார்கள் என்பதை இத்தருணத்தில் நினைவு கூறவேண்டி உள்ளது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
இதில் யார் திருடன் என்பதே இப்பொது கேள்வி? கண்டிப்பாக உங்களுக்கு தெரியும் அது போலீஸ் என்று.... இவர்கள் ஏற்கனவே மனித உரிமை என்றால் எத்தனை கிலோ எங்கே விற்கிறது என்று கேட்பார்கள். என்ன நடக்க போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி.சிந்திக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக