அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வினோதமானது என்றும் தகராறுக்குரிய இடத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது தேவையில்லாத சட்ட தாவாக்களை ஏற்படுத்திவிட்டது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று இவ்வழக்கில் கருத்து தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நடுநிலையானவர்கள் தெரிவித்த விமர்சனங்களை அங்கீகரிக்கும் வகையில் இன்று உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது. இது நீதித்துறையின் மீதான நம்பிக்கை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டுமென கோருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக