அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
30 மே, 2011
ஏழை நோயாளிக்கு தமுமுக ரூ. 1 லட்சம் நிதியுதவி
சிறுதொழில் தொடங்குதல் மற்றும் மருத்துவ உதவிக்காக ஏழை முஸ்லிம்களுக்கு, தமுமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த கமருதீன் என்பவருக்கு, விபத்தில் கால் முறிந்த நிலையில், அவரது சிகிச்சைக்காக ரூ. 20 ஆயிரம், ராமநாதபுரம் நகர் சின்னக்கடையைச் சேர்ந்த முகம்மதுகனிக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக ரூ. 25 ஆயிரம், மண்டபம்,தேவிபட்டினம்,வெளிப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு சிறுதொழில் தொடங்க மற்றும் கல்வி உதவித் தொகையாக மொத்தம் ரூ. 55 ஆயிரம் உள்பட ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட தமுமுக நிர்வாகி சலிமுல்லாகான் பயனாளிகளுக்கு நிதியுதவியை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அன்வர் அலி, தமுமுக மாவட்டச் செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்டப் பொருளாளர் கீழை.முஜ்புர் ரகுமான்,துணைத் தலைவர் அஜ்மல்கான், துணைச் செயலாளர் பஷீர் அகமது,நகர் தலைவர் சுல்தான், நகர் செயலாளர் பரக்கத்துல்லா ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி, தமுமுக சார்பில் 100 பேர் ரத்த தானம் செய்ய இருப்பதாகவும், மேலும் 3 ஆம்புலன்ஸ் வாகனங்களை அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படும் வகையில் அர்ப்பணிக்க இருப்பதாகவும், மாவட்டச் செயலாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக