#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

01 மே, 2012

உழைப்பால் உயர்ந்தவர் பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்கள் !!!!


பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் சம்மந்த பட்டவர்கள் தெரியாதவர்களே இருக்க முடியாது இ.டி .எ. நிறவனத்தை உருவாக்கியவர் இன்று தமிழ் நாட்டில் பெரும்பால மக்கள் துபாய் அபு தாபி ,மற்றும் பிற உலக நாட்டிலும் ஆயிரக்கனக்கானோர் பனி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு அவருடைய உழைப்பு மிக முக்கியமானது ..கிரசன்ட் கல்லுரி மற்றும் பெண்கள் கல்லுரி பள்ளிகூடங்கள் நிறுவினார் , அது இன்று திறம்பட செயல் ஆற்றிக்கொண்டு இருக்கிறது .பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் எம் .ஜி. ஆர் .அவர்களுக்கு நெருகிய நண்பர் என்பது குறிப்பிட தக்கது என்று சென்னையில் பழைமையான அண்ணா மேல்ம்பாலம் கூட இ.டி .எ. நிறுவனம் தான் கட்டியது 



பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களின் இளைமைகாலம் 

பி. எஸ்.ஏ ,தனது பத்தாவது வயதிலேயே தனது இலட்சியங்களின் வழியில் பயணம் செய்ய மிகப்பெரும் கனவு கண்டவர். அக்கலத்தில் கீழக்கரை சமுதாயத்தில் பள்ளிக்கூடம்செல்லாத மாணவர்களை வீடு தேடி சென்று பள்ளி செல்ல வழியுறுத்தும்இயக்கத்தினை தனது நண்பர்களுடன் இனைந்து தலமையேற்று நடத்தியவர்.

தனது ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பினை கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முடித்தபின், இராமனாதபுரத்தில் கிருஷ்துவ மிஷனரிகளால் நடத்தப்படும் புகழ் பெற்றசுவாட்ஸ் பள்ளியில் இனைந்தார், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தகாலக்கட்டத்தில் இவருக்குள் எழும் கேள்விகள் ஏன் இது போன்ற தரமான பள்ளிகள்கிராமப் பகுதிகளில் குறைவாக அமையப்பெற்றுள்ளது? இதற்கான விடிவுதான் என்ன?

பி.எஸ்.ஏ. அவர்கள் தனது இளவயதிலேயே பனத்தின் மதிப்பினையும், பண்டங்கள்மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களயும் உணர்ந்தவரானார். தனது சமவயது மாணவர்களில் சிலர் தேவையான தின்பண்டங்கள் வாங்க போதுமான பணம்வைத்திருப்பதையும், மேலும் சிலர் தின்பணடங்களே வாங்க பணமில்லாமல்வேடிக்கை பார்ப்பதையும் அறிந்து இந்த ஏற்றதாழ்வுகளுக்கு முடிவு கட்ட தனதுநண்பர்களுடன் இனைந்து தின்பணடங்களை குறைந்த விலையில் மொத்தகொள்முதல் செய்து பணக்கார மாணவர்க்ளுக்கு அதிக விலையில் விற்று அதன்மூலம் கிடைத்த இலாபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாகவினியோகித்து தனது தொழில் கோட்பாட்டிற்கு முண்னுரை எழுதினார்

தனது எட்டாம் வகுப்பினை முடித்த காலத்தில், இவரின் தனியாத வியாபாரத் தாகம்இவரது பள்ளிப்படிப்பினை தொடர முடியாமல் தொந்தரவு செய்ய தனது தந்தையர்புஹாரி ஆலிம் அவர்களின் அணுமதி பெற்று , தனது 20 ஆவது வயதில் தனதுகையில் வெறும் 149 இந்திய ரூபாயும், ஒரு சின்ன துனிப் பையுமாக கொழும்புவந்து சேர்ந்தார், சோதனையான காலக்கட்டம்..., முதலில் இவரது அறையில்வசித்து வந்த வியாபாரிகளின் மனதை அவர்களுக்கு தேவையான உதவிகள்செய்வதன் மூலம் கவர்ந்தார். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.

வைர வியாபாரியான் தனது தந்தையருடன் முன்பு பலமுறை வைரவியாபரத்திற்காக கொழும்பு வந்தவர் அவர், அதனால் இதே வியாபாரத்தினால்கவரப்பட்டு அதனை பற்றிய நுட்பத்தினை மெல்ல மெல்ல கற்று அறிந்த பின்னும்அவருடய பொருளாதார சூழ் நிலை தனியாக வியாபாரம் செய்ய அணுமதிக்காதநிலையில் காலம் கணியும் வரை சில காலம் கொழும்பு நகரிலேயே அமைதிகாத்தார். ஆனால் தனது வியாபார தொடர்புகளை எல்லையில்லமல் வளர்த்துகொண்டும் இருந்தார். விரைவில் ஒரு நேரம் சாதகமாக வந்தது, தனது தொழிலைமுதலில் ஹாங்காங்கில் தொடர்ந்தவர் பின்பு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா,சிங்கப்பூர் என கீழ்திசை நாடுகள் முழுவதும் பரந்து விரிந்தது, இதுவே வள்ளல்அவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருனமாக கொள்ளலாம், வைரவியாபாரத்தில் அதீத ஈடுபாடு கொண்டு மேலை நாடுகளான பெல்ஜியம், அமெரிக்கா,தென் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலும் தனது தொழிலரசின் எல்லைகளைவிரிவுபடுத்தினார், 1950 களில் வைரத்தொழில் ஸ்தாபனத்தை ஹாங்காக் மற்றும்பெல்ஜியத்தில் நிறுவிய முதல் தென்னிந்தியர் இவர்தான் என்பது நாடறிந்த உண்மை.
மதி நுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலும் தாம் பி. எஸ்.ஏஅவர்களின் மூலதனமாக இருந்திருக்க முடியும், எதார்த்த தன்மையும், நகைசுவைஉணர்வும் ஒருங்கே பெற்ற வள்ளல் அவர்கள் ஒருவரின் குறையை நேர்த்தியாக,நகைச்சுவையுடன் அந்த நபரின் எதிரிலேய சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர்எவருமே இல்லை எனலாம்




நன்றி- திரு எம்.எம்.முகைதீன்,மஹ்மூத் நைனா
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக