அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொள்ளுமேடு தமுமுகவின் சமுக விழுப்புணர்வு தெருமுனை கூட்டம் பொதுக்கூட்டம் போல் மிகவும் எழுச்சிவுடன் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
இப்பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அமானுல்லாஹ் தலைமைதாங்க ,ரியாஸ் இறைவசனம் ஓத, வரவேற்ப்புவுரை ஜாகீர் ஹுசைன், மாவட்ட பொருளாளர் முஹம்மத் அய்யூப் முன்னிலைவகிக்க, தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகீர் சிறப்புரை ஆற்றினார்.
கோவை ஜாகீர் ஆற்றிய உரையில் கழகம் சமுதாய மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகளை பற்றியும் ஆற்றவேண்டிய சேவைகளை பற்றியும் சிறப்பாக பேசினார். மேலும் சமுதாய ஒற்றுமையும், சமுகத்தில் உள்ள இயக்கங்கள் இடையே ஒற்றுமையின் அவசியதை எடுத்து கூறினார்.இறுதியாக தமுமுகவின் நகர தலைவர் M.ஷபிக்குர் ரஹ்மான் நன்றிவுரை ஆற்றினார் .
நிகழ்ச்சி ஏற்பாட்டை கழக தோழர்கள் மிகவும் சிறப்பாக செய்துயிருந்தனர்.
!எல்லா புகழும் இறைவனுக்கே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக