அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
24 மே, 2012
பேரழிவு அணு ஆயுத தயாரிப்புக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை : ஈரான் அதிபர் அஹமத் நிஜாத்
டெஹ்ரான் : மே 24, பேரழிவு அணு ஆயுத தயாரிப்பை "ஹராம்" என "பத்வா" வழங்கிய ஈரான் மத தலைவர் ஆயதுல்லாஹ் கொமைனியின் அறிவிப்பை தொடர்ந்து, ஈரான் அதிபரும் இதை வழி மொழியும் வண்ணம், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை, என்று அறிவித்துள்ளார். எங்களுக்கு என்று என்று தெளிவான மார்க்கமும், சீரான வழிகாட்டல்களும் உள்ளது. அதே நேரம், ஈரானின் இறையாண்மையில் தலையிட, அமெரிக்க உள்ளிட்ட எந்த சக்திகளையும் அனுமதிக்க முடியாது என்றார், அவர். ஈரான் அணு ஆயுதம் குறித்து, இராக் தலைநகர் பாக்தாத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், ஈரான் அதிபரின் கருத்து, முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக