எல்லா ஆற்றல்களையும் நாமே பயன்படுத்திவிட்டு, நம் வருங்காலத்துக்கு என்ன தரப்போகிறோம்?
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 மே, 2012
நல்லதை செய்வோம் - பசுமை ஆற்றல் பற்றிய அரசின் ஆவணப்படம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுத் துறை வழங்கி இருக்கும் ஆவணப்படம் தான் "நல்லதை செய்வோம்". நாம் எப்படி எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துகிறோம் என்பதில் ஆரம்பிக்கும் இந்தப் படம் நம் முன் மிகப் பெரிய கேள்வியை வைக்கிறது.
எல்லா ஆற்றல்களையும் நாமே பயன்படுத்திவிட்டு, நம் வருங்காலத்துக்கு என்ன தரப்போகிறோம்?
எல்லா ஆற்றல்களையும் நாமே பயன்படுத்திவிட்டு, நம் வருங்காலத்துக்கு என்ன தரப்போகிறோம்?
நீங்கள் அப்பா/அம்மா என்றால் உங்கள் பிள்ளைகளுக்கு தராமல் நீங்களே உணவே உண்டு தீர்ப்பீர்களா? இதைத் தான் நாம் இப்போது செய்கிறோம். எல்லாவகையான ஆற்றல்களும் தீர்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில், வருங்கால தலைமுறை பூமியில் எப்படி வாழ முடியும்? அமில மழை, சுத்தமற்ற காற்று, நீரே இல்லாத ஆறு/கடல், உணவை விளைவிக்காத பூமி. இது தான் நாம் நம் குழந்தைகளுக்கு தரப்போகும் பரிசா?
இந்தப் படத்தில் மிக முக்கியமாக கூறப்படும் விஷயம், எரிசக்தி பயன்பாடு குறித்து, நம் நாட்டில் இப்போது 80% மின்சாரம் அணு, அனல், நீர் மூலம் பெறப்படுகிறது. இதில் முதல் இரண்டும் மிக ஆபத்தானவை என்று தெரிந்தும் நாம் இன்னும் அவற்றையே நாடி இருக்கிறோம்.
அனல் மின் பற்றி அதிக தீமையை சொல்லும் படம், அணு மின் நிலையத்தை குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால் அதன் தீமைகள் நாம் அறிந்ததே, செர்நோபில், புகுஷிமா போன்றவை இவற்றுக்கு சாட்சி. நேரடி விளைவுகளை தாண்டி, பக்க விளைவுகள் கூட மிக அதிகம். புற்றுநோய், தோல்நோய், பூமி மாசுபடுதல், என நிறைய பிரச்சினைகள் உள்ளன. இவை இரண்டும் புதுப்பிக்க முடியாதவை. அதிக தீமைகளையும் கொண்டவை.
அடுத்து நீர்மின் உற்பத்தி, தீமை எதுவும் இல்லாவிட்டாலும் நம்மால் இதில் இருந்து அதிக மின்சாரம் பெற இயலாது. இதற்கான மாற்று வழி தான் என்ன? என்ன? என்ன?
இயற்கை தரும் அறிய வசதிதான் "சூரிய ஒளியில் இருந்து மின்சாரம்"
இதோடு காற்றாலை உற்பத்தியும் இதில் அடக்கம். இவை மரபு சாரா எரிசக்தி என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நாம் பசுமை ஆற்றல் என்றே அழைக்கலாம்.
முதலில் சூரிய ஒளி, பூமி முழுவதும், ஒரு மணி நேரம் விழும் சூரிய ஒளியை வைத்து நாம் இந்த முழு பூமிக்கு ஒரு வருடத்துக்கு தேவையான மின்சாரத்தைப் பெற முடியும். ஆச்சர்யமாக இருக்கிறதா? சூரியன் தன்னுள் இன்னும் நிறைய ஆச்சர்யங்களை கொண்டுள்ளது.
நாள் முழுவதும் வரும் ஒளி மூலம் நாம் நம் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை பெற முடியும். இதில் மிக முக்கியமான விஷயம், நாம் சேகரிக்கும் மின்சாரத்தை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.
காற்றலை மிக சில பக்க விளைவுகளை கொண்டுள்ள போதும், சுற்றுப்புற சூழல்க்கு ஆபத்தாக எதையும் செய்வதில்லை.
சரி இதெல்லாம் தான் இருக்கே, இப்போ நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் விஞ்ஞானிகளுக்கு நாம் வைக்க வேண்டிய ஒரே கோரிக்கை, மிகக் குறைந்த ஆற்றல் மூலம் இயங்கும் மின் சாதனங்களை கண்டு பிடிக்க வேண்டும். மிக அதிக மின்சாரம் தேவைப்படும் தொழிற்சாலைகளில் அவர்கள் கவனம் செலுத்தி இதற்கொரு தீர்வை காண வேண்டும்.
கால் நூற்றாண்டுக்கு முன்பு ஒரு அறை முழுவதையும் அடைத்த கணினி இன்று நம் சட்டைப் பையில் வைக்கும் அளவுக்கு சிறிதாகி விட்டது. இது தான் மனிதனின் திறமைக்கு மிகப் பெரிய எடுத்துக் காட்டு.
இதை நாம் இப்போதே ஆரம்பித்தால் நம் வருங்காலம் நம்மை போற்றும்.
ஒரு புதிய விடியலை நம் வருங்காலத்துக்கு தருவோம். அது பசுமை விடியல் ஆக இருக்கட்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக