#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

24 மே, 2012

தமிழகத்தில் ஆட்சி - காட்சி மாறினாலும்



கொலைத் தொழில் ... தமிழகத்தில் ஆட்சி - காட்சி மாறினாலும் எப்போதும் கொடி கட்டிப் பறக்கும்  தொழில். கொலைகளைத் தடுப்பதும், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போலீஸாருக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொல்லப்பட்டது மார்ச் மாதம் 29-ம் தேதி. சிட்டி கமிஷனர் தொடங்கி, சிறப்புப் பிரிவு வரை 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தினமும் 70 பேர் வரை கடுமையாக விசாரித்தும்,
உளவுத் துறையையும் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவர்களை வறுத்தெடுத்தும் விசாரணை வளையத்தில் இதுவரை உண்மையான குற்றவாளி சிக்க வில்லை. இந்த அரசியல் படுகொலைகள் எப்படி அரங்கேறுகின்றன? அதன் நெட்வொர்க் பின்னணி என்ன?
'தட்டிவுடு’, 'அடிச்சுவுடு’, 'தாளிச்சிடு’!
ஒரு கொலைக்கான அசைன்மென்ட் எங்கே இருந்து வந்தது, அதை நிறைவேற்ற யாரெல்லாம் திட்டமிட்டார்கள், நிறைவேற்றிய கூலிப் படை எது என்பதையெல்லாம் ஒரே கோட்டில் வைத்து ஆராய்ந்தால்தான் கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், சமீப அரசியல் கொலைகளில் உத்தரவிட்ட வருக்கும் கூலிப் படைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. விதவிதமானஸ்டைல் களில் 'போட்டுத் தள்ளும்’ கூலிப் படை களைக் கையில் வைத்திருக்கும் குத்தகை தாதாக்களிடம் பணத்தையும் சம்பந்தப்பட்ட ஆளின் புகைப்படத்தையும் கொடுத்து 'தட்டிவுடு’, 'அடிச்சுவுடு’, 'தாளிச்சிடு’, 'கைமா’ என ஏதேனும் ஒரு கோட்வேர்ட் கொடுத்தால் போதும். சொன்ன காரியம் சொன்ன வண்ணம் நிறைவேறும்.
'தட்டிவுடு’ என்றால், எச்சரிக்கும் விதமாக லேசுபாசான காயங்களை ஏற்படுத்துதல். 'அடிச்சுவுடு’ என்றால், ஆளைச் சட்டெனக் காலி செய்தல், 'தாளிச்சிடு’ என்றால், தலையை வெட்டி, உடல் உறுப்புகளை நசுக்கி, முகத்தைப் பிளந்து, யாரும் அஞ்சலி செலுத்தக்கூட அஞ்சும் அளவுக்குச் சித்ரவதை செய்து உயிர்ப் பலி எடுப்பது, 'கைமா’ என்றால், கை, அல்லது காலை எடுத்து நிரந்தர ஊனமாக்குதல். சம்பவத்துக்கான தேதி யைக் குறித்ததும் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அசைன்மென்ட் கொடுப்பவர் வெளி நாட்டுக்கோ, வெளி மாநிலத்துக்கோ அல்லது இருப்பிட விவரத்தை ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கக்கூடிய அரசு அலுவலகங்களுக்கோபோய் விடுவார். 'சம்பவம்’ சிறப்பாகச் செய்து முடிக்கப்படும். போலீஸ் விசாரணை தீவிரமாகும் சமயம், அவர்களை மேற் கொண்டு பயணிக்கவிடாமல், 'நாங்கள் தான் கொலை செய்தோம்’ எனச் சொல்லி ஆஜராகும் வேறு ஒரு கும்பல். கொலை செய்த நபர்களுக்கும் ஆஜரான கும்ப லுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. நீதிமன்றத்தில் அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும். கொலைப் பழியை ஏற்றுக்கொள்ளத் தனியாகப் பேரம் நடக்கும். கடந்த வருடம் சென்னை யில் காலை 11 மணிக்கு ஓர் அரசியல் பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னையையே உலுக்கிய அந்தக் கொலை விவகாரம், போலீஸுக்குப் பெரிதாக வேலை வைக்கவில்லை. காரணம், மதியம் 2 மணிக்கே 'அந்தக் கொலையைநாங்கள் தான் செய்தோம்’ என்றுசொல்லி, ஒரு கும்பல் மதுரை நீதிமன்றத்தில் சரண்டர் ஆனது. 11 மணிக்கு சென்னையில் கொலை செய்த கும்பல் மதியம் 2 மணிக்குள் எப்படி மதுரைக்குப் போயிருக்க முடியும்? விமானத்தில் எக்கானமி க்ளாஸ் முன்பதிவில் பயணித்துச் சென்றிருப்பார்களோ?
விடலை வேகத்துடன் இருக்கும் சிறுவர்களை, 20 வயதைத் தாண்டாத இளைஞர்களைத் தொழிலுக்குப் பழக்கி வைத்திருப்பார்கள். லம்ப்பான தொகை கிடைக்கும் அசைன்மென்ட்டுகளை யாராவது ஒற்றை இளைஞனை அனுப்பிக் காரியம் முடிப்பார்கள். சம்பவம் பற்றிய பரபரப்பு அடங்கியதும் அந்தப் பையனைக் கழுத்தைத் திருகிக் கால்வாய்க்குள் வீசி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள் சீனியர்கள். 'எவிடென்ஸே இல்லாத ரிஸ்க்’ இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக