அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
18 மே, 2012
கொசு கடித்தாலும் விபத்துதான்
கொசு கடித்து மரணம் நேரிட்டாலும் காப்பீ திட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என நுகர்வோர் மன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. பஞ்சாப்பைச் சார்ந்தவர் நிர்மல் சிங். இவரது தந்தை மலேரியா நோயினால் உயிரிழந்து விட்டார். இதற்காக விபத்து காப்பீடு திட்டம் அடிப்படையில் இழப்பீடு கேட்டு ஓரியண்டல் இன்சூரன்ஸிடம் மனு செய்தார். ஆனால் இதற்காக இழப்பீடு தொகை வழங்க முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்து விட்டது.
இதனை எதிர்த்து நுகர்வோர் மன்றத்தில் அவர் புகார் செய்தார். வழக்கினை விசாரித்த மன்றம், பாம்பு கடித்து இறப்பது எப்படி விபத்தோ அது போல் கொசு கடித்து இறப்பதும் விபத்துதான், இரண்டுக்கும் வேறுபாடு இல்லை என தீர்ப்பு கூறியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக