#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

24 மே, 2012

வரிசையாக நிறுத்தினர்! சுட்டுக் கொன்றனர்!! பிணங்களை ஆற்றில் வீசினர்!!! : உயிர் பிழைத்த ஐவர் பேட்டி


 இந்திய ராணுவத்தின் காட்டு மிராண்டித்தனமான "ஹாஷிம் புரா" இனப்படுகொலையில் சிக்கி, சுடப்பட்டு ஆற்றில் வீசப்பட்டவர்களில், தப்பிப்பிழைத்த அந்த 5 அப்பாவிகளின் கண்ணீர் கதை.

ஹிட்லரின் நாசிப்படைகளை மிஞ்சும் வகையில், சொந்த நாட்டு மக்களை, விசாரணை என்ற பெயரில், ஊருக்குள் புகுந்து, ராணுவ டிரக்குகளில் ஏற்றி சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஆற்றங்கரை ஓரத்தில் அனைவரையும் வரிசையில் நிறுத்தி வைத்து, துப்பாக்கியால் சுட்டு, உயிர் போய்விட்டதை உறுதி செய்த பிறகு, பிணங்களை ஆற்றில் தூக்கி வீசிஎறிந்த, அரக்க குணம் படைத்த ராணுவ வீரர்கள், இன்னும் பகிரங்கமாக உலாவி வருவது, நாட்டின் இறையாண்மைக்கு ஒரு சவாலான விஷயம். ராணுவத்தின் கொடுந்தாக்குதலுக்கு ஆளாகியும், சுடப்பட்டு ஆற்றில் வீசப்பட்டும், அதிர்ஷ்ட வசமாக தப்பி பிழைத்த 5 அப்பாவிகளின் கண்ணீர் பேட்டி :- (1)சுல்பிகார் நாசர் : நாயை கொன்றவருக்கு கூட தண்டனை வழங்கப்படும் நமது நாட்டில், மனித உயிர்களை, மிருகத்தனமாக சுட்டுக்கொன்ற PAC ராணுவப்படையினர், 25 ஆண்டுகளாகியும் தண்டனை பெறாமல் நடமாடுவதை என்னவென்று சொல்லுவது? ஏன், நாம் இந்தியர்கள் இல்லையா?? சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், எங்களை டிராக்டரை விட்டு, இறக்கும் போது, நான் கீழே விழுந்து விட்டேன், வரிசையில் நிற்க வைக்கப்பட்ட போது, நான் 3வதாக இருந்தேன், ஏற்கனவே கீழே விழுந்த பலகீனம், மற்றும் குண்டு பாய்ந்த நிலையில், மற்றவர்களுடன் நானும் செத்து விட்டதாக கருதிய,  PAC படையினர், என்னையும் ஆற்றில் வீசி விட்டனர். ஆற்றில் இருந்த மரக்கிளையின் துணையுடன் தப்பினேன். 25 ஆண்டுகள் கடந்து விட்டது, நீதிக்காக நாங்கள் எப்போது வரை போராடுவது? என்றார் ஏக்க பெருமூச்சுடன். (2)முஹம்மத் நயீம் : ராணுவத்தால் கொல்லப்பட்ட 42 குடும்பங்களுக்கு, தலா ரூ. 40,000 கொடுக்கப்பட்டது, ஆனால் தப்பிப் பிழைத்த என் போன்றோருக்கு ஒரு உதவியும் செய்யப்படவில்லை. மருத்துவம் பார்க்க செலவானதில், எங்கள் குடும்பம் பல நாட்கள் ஒரு வேலை மட்டும் தான் சாப்பிட முடிந்தது, என்றார். சம்பவம் குறித்து, தன்னிடம் பலரும் பேட்டி எடுக்க படையெடுத்தனர், பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக செய்தி போட்டனர், நிவாரணம் தான் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது தனக்கு எந்த நம்பிக்கையுமில்லை, என்றார். (3)முஜீபுர் ரஹ்மான் : தற்போது 42 வயதுடைய இவர், ஒரு விசைத்தறி ஊழியர். டிராக்டரில், எங்கள் தலைகள் வெளியே தெரியாத வாறு, எங்கள் தலை பாகங்களை கீழ் நோக்கி வைத்த வண்ணம், கடத்தி வந்த ராணுவத்தினர், ஆள் ஆரவாரமில்லாத ஆற்றங்கரையோரத்தில், எங்களை இறக்கி விட்டு இரண்டு வீரர்கள் இரண்டு கைகளையும் பிடித்துக்கொள்ள, ஒருவன் சுடுவான். என்னை சுடும் முறை வந்த போது, டிராக்டருக்கு உள்ளேயே வைக்கப்பட்டிருந்த சிலர், கூக்குரலிட்டதால், எஞ்சியவர்களை டிராக்டரில் வைத்தே சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி ரவை எனது காலில் மட்டும் தான் பட்டது, எனினும், மயக்க நிலையிலிருந்த என்னை, செத்து விட்டதாக கருதி ஆற்றில் வீசி விட்டனர், என்றார். (4)பாபுத்தீன் : அப்போது 17 வயதுடைய சிறுவனாக இருந்த படியால், டிராக்டரில் ஏற்றப்பட்டவுடன் வழி நெடுகிலும் உயிர் பிச்சை கேட்டடவனாக, அழுது கொண்டே சென்றோம், ஆனால் ஈவு இரக்கமற்ற ஜவான்கள் திட்டி தீர்த்தனர். எங்களை வீசிவிட்டு டிராக்டர் சென்ற பிறகு, அந்த பகுதி முழுவதும், மரண ஓலம் கேட்டது, அதற்க்கு மத்தியில் நான் உயிர் பிழைத்தேன் என்பதையே, என்னால் நம்ப முடியவில்லை, என்றார். (5)முஹம்மத் உஸ்மான் : அந்த நேரத்தில் 3 குண்டுகள் துளைத்த நிலையில் எனது சகோதரன் கமருத்தீன், குடல் சரிந்த நிலையில் இருந்தான். அங்கு வந்த சிலரின் உதவியால் பாலத்துக்கு மேலே கொண்டு வரப்பட்டோம். நான் கமருத்தீனுக்கு தண்ணீர் புகட்டினேன், ஆனாலும் அவன் உயிர் பிழைக்கவில்லை. எங்களை காப்பாற்றிவர்கள் கேட்ட போது, கடும் பயத்தினால், எங்களை PAC படையினர் சுட்டனர், என்று சொல்லாமல், வழிப்பறி கொள்ளையர்கள் எங்கள் ஸ்கூட்டரை பறித்துக் கொண்டு, எங்களை சுட்டு விட்டனர் என கூறி, அங்குள்ள ஒரு சிறு நீர் கழிப்பிடத்தில், மறுநாள் மாலை வரை மறைந்திருந்து தப்பித்தேன், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக