அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
24 மே, 2012
குருகுலத்தில் பெண்ணுடன் குதூகலம்: சாமியாரை அடித்து உதைத்த சீடர்கள்!
ராஜ்கோட்:குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாவடி கிராமத்தில் உள்ள பிரபல சுவாமி நாராயண் குருகுலத்தில், ஒரு பெண்ணுடன் பூட்டிய அறைக்குள் இருந்த 32 வயது துறவியை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.
சுவாமி நாராயண் என்ற மதப் பிரிவைச் சேர்ந்த ஆனந்த் சொரூப்தாஸ் குரு குலம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மதப் பிரிவின் விதிப்படி பெண்களின் முகத்தை சாமியார்கள் நேருக்கு நேர் பார்க்கக் கூடாதாம். மேலும் பெண்களை தனிமையிலும் சந்திக்கக் கூடாதாம். ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்ட ஆனந்த் சொரூப்தாஸ் உபதேசமெல்லாம் மக்களுக்குத்தாம் தனக்கு இல்லை என நிரூபித்துள்ளார்.
நேற்று இரவு ஆனந்த் சொரூப்தாஸ் ஒரு இளம் பெண்ணுடன் தனது அறையில் தனிமையில் இருப்பதாக மாள்வியா நகர் காவல் நிலையத்திற்கு ரமேஷ் பாய் என்பவர் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.
சாமியாரின் கதவைத் தட்டி திறக்கச் செய்தனர். அப்போது உள்ளேயிருந்து தாஸும், 26 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணும் வெளியே வந்தனர். இருவரையும் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றபோது குருகுலத்து மாணவர்களும், சீடர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து சாமியாரையும், அந்தப் பெண்ணையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
சம்பந்தப்பட்ட பெண் கம்ப்யூட்டர் ஆசிரியையாம். குருகுலத்தில் பணியாற்றி வருகிறார். இருவரையும் கைது செய்த போலீஸார், குருகுலத்தில் பியூனாக பணியாற்றி வரும் ஜிதேந்திர தொபாரியா என்பவரையும் கைது செய்தனர்.
சாமியார் மற்றும் மற்ற இருவர் மீதும் மக்களின் மத நம்பிக்கையை பாதித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக