அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வேக வேகமாகச் சரிந்து வருகிறது. போகிறப் போக்கைப் பார்த்தால், ஒரு டாலருக்கு ரூ.60 என்ற அளவுக்கு ஆகித்தான் நிற்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் கணக்கிடுகிறார்கள். ஏன் இந்த வீழ்ச்சி ரூபாய்க்கு?
உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் டாலரின் மதிப்பு அதிகம் உயர்ந்தும் , உணர்ந்து கொள்ளவும் படுவது ஏன் என்று கேட்டால் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் குறைந்து போனதும், இந்திய அரசின் பற்றாக்குறை வரவு செலவு அறிக்கையும், பணவீக்கம், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் குறைவால் ஏற்பட்டுள்ள டாலர் தட்டுப்பாடு, பெட்ரோலிய இறக்குமதிக்காக அதிகளவு டாலரை வெளியாக்குவது என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றப்படவில்லை என்ற நிலையில் இந்தியாவில் மட்டும் ஒரேயடியாக ரூ.7.50 என்று வரலாறு காணாத அளவுக்கு ஏற்றியதற்கு என்ன காரணம்? (இப்போது சுமார் 2 அல்லது 3 ரூபாய் வரை குறைக்கப்போவதாக அரசு வழக்கமான பல்லவி பாடுவது வேறுகதை)
முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணைக்காக சுமார் 95 டாலர்கள் செலவிட்ட இந்தியா, உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை ஏறாவிட்டாலும்கூட, தற்போது பண வீக்கத்தின் காரணமாக அதே ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு சுமார் 3 டாலர்கள் கூடுதலாக, அதாவது 98 டாலர்கள் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த பணவீக்கத்தின் காரணமாக, கூடுதலாகக் கொடுக்க வேண்டிய மூன்று டாலரை யார் தலையில் கட்டுவது என்று அரசு ஆராய்ந்து பார்த்தால், எளிதில் மிளகாய் அரைக்கத் தக்கதாக இருப்பது திருவாளர் பொதுஜனத்தின் தலை தான்.
உலகச் செலாவணியாக டாலர் இருப்பதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் டாலரில் தான் விற்பனை இருக்கும். ஆக முன்பு கொடுத்ததை விட டாலருக்கு அதிக விலை கொடுத்து இந்தியா வாங்கும்
கச்சா எண்ணெய் மட்டுமின்றி, இரும்பு உள்ளிட்ட இறக்குமதி வகைகள் அனைத்தும் முன்பு விற்ற விலையிலேயே இந்தியாவுக்குக் கிடைத்துவந்தாலும், உலகச் சந்தையின் செலாவணியான டாலரை ப் பெறுவதற்கு இந்தியா முன்பை விடவும் சுமார் 8 ரூபாய்கள் தற்சமயம் அதிகம் கொடுக்கின்ற படியால், இந்த விலையேற்றம் தவிர்க்க இயலாது.
அவ்வகையில்,இறக்குமதிப் பொருட்களுக்கு டாலரில் பணம் கட்ட வேண்டியிருப்பதால் இந்தியாவைப் பொருத்தவரை டாலர் தட்டுப்பாடு பெரிய தட்டுப்பாடில்லை. சமாளித்துவிடலாம் என்றாலும், கணிவழிச் செயல்கள், நிரலிகள், ஜவுளிகள் போன்றவை , மனித சக்தி ஏற்பாடுகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்பவர்களுக்கு இந்த டாலர் மதிப்பு கூடுதல் என்பது எதிர்பாரா உபரி ஆகும். அவ்வாறு ஏற்றுமதி செய்பவர்கள் மட்டும் இந்திய ரூபாய் சரிந்து டாலர் உயர்வதில் மகிழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக