#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

12 மே, 2011

துபாயில் முதல் சம்பவம்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தமிழக வாலிபர் குதித்து தற்கொலை


 
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. இந்த கட்டிடம் மொத்தம் 147 மாடிகளைக் கொண்டதாகும்.
 
துபாயில் முதல் சம்பவம்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தமிழக வாலிபர் குதித்து தற்கொலைஇதில் 45 மற்றும் 108 மாடி என இரண்டே இரண்டு மாடிகளில் மட்டும் மக்கள் வசிக்கிறார்கள். மற்ற 145 மாடிகளிலும் பல்வேறு கார்ப்ரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  
 
அரப்டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (வயது 38) என்பவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனம் புர்ஜ் கலீபா கட்டிடத்தின் 120-வது மாடியில் உள்ளது.
 
அதியமான் கண்ணன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊருக்கு வர விடுமுறை கேட்டார். ஆனால் அவருக்கு வருட விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் விரகத்தி அடைந்த அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டார்.  
 
நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அதியமான் கண்ணன், 147-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். 2 ஆயிரத்து 717 அடி உயரம் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் மாடிகளில் பாதுகாப்புக்காக கம்பிகள் பதித்துள்ளனர். அதில் ஒரு கம்பி மீது கண்ணன் விழுந்தார். 
 
இதனால் 108-வது மாடி தளத்தில் மோதி அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.   கண்ணன் உடலை துபாய் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முழு விசாரணையும் முடிந்த பிறகு கண்ணன் உடலை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்போவதாக துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
துபாயில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு பிரச்சினை காரணமாக 80 பேர் வரை தற்கொலை செய்துள்ளனர். ஆனால் உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தற்போதுதான் முதன்முத லாக தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. 
 
நன்றி.மாலைமலர்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக