#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

21 மே, 2011

கேலிப்பொருளாகிப்போன சாமியார்கள்



ஒரு சமூகத்தில் மிக மிக மதிப்பிற்குரியவர்களாக, உயர்ந்தவர்களாக ஏனையவர்களால் வணங்கப்படுபவர்கள் இந்த சாமியார்கள். இந்து சாமியார்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் எல்லாமெ இதில் அடக்கம். கடவுளை நம்புபவர்களும் சரி, நம்பாதவர்களும் சரி, இவர்களுடைய சொற்களுக்கு என்றுமே மதிப்பு கொடுப்பார்கள். காரணம் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பும், அவர்களுடைய நல் வழிநடத்தல், சமூகம் மீதான அக்கறை போன்றனவாகும்.



ஆனால் பல சாமியார்கள் சமூகத்தில் தமக்கிருக்கும் செல்வாக்கை தவறான முறையில் பயன்படுத்த துணிகிறார்கள். இவ்வாறான போலிச்சாமியார்களே இன்று எல்லா சமூகங்களிலும் நிறைந்துள்ளார்கள். இன்று அனைத்து ஊடகங்களிலும் பிரபலமாயுள்ள ஒரு செய்தி “இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடும்” இப்படிச் சொல்லியுள்ளார் அமெரிக்காவின் ஹரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர்.
இவரது பேச்சு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
89 வயதாகும் கேம்பிங், ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளைக் கூறியவர்தான். 1994ம் ஆண்டில் உலகம் அழியும் என்று இவர் கூறியிருந்தார். ஆனால் அது புஸ்வாணமாகிப் போனது. ஆனால் தற்போது மே 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு உலகம் அழிவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.
 
தான் பணியாற்றும் ரேடியோ நிலையத்தில் நேற்று பணி முடிந்து கிளம்பியபோது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கை குலுக்கிய கேம்பிங், இதுதான் நாம் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று கூறிய அவர், நாளை மாலையுடன் உலகம் அழியப் போவதால் நாம் மீண்டும் சந்திக்க மாட்டோம். நானும் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டுக் கிளம்பினார்.
 
எப்படி உலகம் அழியும் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேம்பிங்கிடம் கேட்டபோது, நியூசிலாந்தில் மிகப் பயங்கரமான பூகம்பங்கள் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்படும். இதனால் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும். இந்த பூகம்பங்கள் நியூசிலாந்தோடு நின்று விடாது. அப்படியே ஒவ்வொரு பிராந்தியமாக நகரும். கடைசியில், உலகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்து போய் விடுவார்கள். 2 அல்லது 3 சதவீத மக்கள்தான் உயிர் பிழைப்பார்கள். அவர்களையும் கூட கடவுள் தன்னுடன் அழைத்துக் கொண்டு விடுவார்.
 
எனது கணிப்பு மிகச் சரியானது, துல்லியமானது. நோவாவுக்கு கடவுள் 7 நாள் அவகாசம் கொடுத்தார். மாபெரும் வெள்ள அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த கால அவகாசத்தை அவர் கொடுத்தார். ஆனால் நமக்கு கடவுள் 7000 ஆண்டு காலத்தை அவகாசமாக கொடுத்தார். அந்த காலம் யூத காலண்டர்படி மே 21ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது என்று கூறியுள்ளார் அந்த கிறிஸ்தவ பாதிரியார்.
பாருங்கள் மக்களை எவ்வளவு முட்டாள்களாக்குகிறார்கள் என்று!

இவ்வாறான போலிச்சாமியார்கள் இறைவன் கட்டளை, கடவுள் ஆணை என்றும், வேத வாக்கு, சாமிவாக்கு என்றும் தம்மை பிரபலப்படுத்த கூறும் வாக்குகள் பலிக்காமல் போகுமிடத்து மக்களுக்கு இவர்கள்மேல் வெறுப்பு ஏற்பட்டு சாமியார்கள் மீது நம்பிக்கையீனம் ஏற்பட வழிவகுக்கின்றது.
இதனால் உண்மையிலேயே சமூகத்தொண்டு ஆற்றிவரும் சாமியார்கள் மீதும் மக்கள் வெறுப்படைகின்றனர்.......

ஆகவே இதுபோன்ற போலிச்சாமியார்கள் இனங்காணப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக