அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
04 மே, 2011
காட்டுமன்னார்கோவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
காட்டுமன்னார்கோவில் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.இது குறித்து காட்டுமன்னார்கோவில் வேளாண் துறை உதவி இயக்குனர் மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேளாண் இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது. பசுந்தாள் உரப்பயிர் தக்கை பூண்டு, ஜின்சல்பேட் மானிய விலையில் காட்டுமன்னார்கோவில், திருமுட்டம், ஆயங்குடி வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜிப்சம் மற்றும் சிங்சல்பேட் வாங்கி பயனடையவும், சம்பா சாகுபடி விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி தக்கை பூண்டு பசுந்தாள் உரப்பயிர் விதைத்து மடக்கி உழுது மண் வளத்தை பெருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக