நன்றி. தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
31 மே, 2011
லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவை
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவையையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அவசர உதவிக்காக இலவச ஆட்டோ சேவை துவங்கப்பட்டது. வயதானவர்கள், பிரசவத்திற்கும் செல்பவர்கள் மற்றும் அவசர உதவிக்காக இரண்டு ஆட்டோக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமையில் இலவச ஆட்டோ சேவையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நன்றி. தினமலர்
நன்றி. தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக