அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
23 மே, 2011
கொள்ளுமேட்டில் புதிய நர்சரி&பிரைமரி ஸ்கூல் உதயம்''
கொள்ளுமேடு புதுத்தொருவில் அல் அமான் நர்சரி&பிரைமரி ஸ்கூலின் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. விழாவிற்க்கு தமுமுக மாநில து.செ S.M.ஜின்னா அவர்கள் தலைமை தாங்க , அல் அமான் பள்ளியின் தாளாலர் ,கொள்ளுமேடு ஊராச்சி மன்ற தலைவர் தமுமுக மா.செ. N.அமானுல்லாஹ் அவர்கள் வரவேற்க்க விழா சிறப்பு அழைப்பாளார்கள் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாரன் வருகை தந்தார்கள்.
முருகுமாரன் MLA உடன் ,தமுமுக.மா.செ.அமானுல்லாஹ,தமுமுக.மா.தலைவர்.மெஹ்ராஜூத்தின்
மேலும் ,தமுமுக .மா.தலைவர்.மெஹ்ராஜ்த்தின் லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி பள்ளி தாளாலர் ஹாரிஸ், இமாம் புஹாரி தாளாலர் அன்சாரி,கொள்ளுமேடு முஸ்லிம் உயர் நிலை பள்ளி தாளாலர் அப்துல் கப்பார், ராயநல்லுர் பள்ளி தாளாலர் ராஜசேகரன்,அதிமுக ஒன்றிய செயளாலர்துரைமுருகன்,மமக.மா.செ.அரபாத்.மமக.மா.பொ.அய்யிப்,முஸ்லிம் உயர் நிலை பள்ளி முன்னாள் முதல்வர் ஹபிபுர்ராஹ்மான்,முன்னாள் முஸ்லிம் நடுநிலை முதல்வர் செல்வராஜன்,மதினாப்பள்ளி முத்தவல்லி ஹலிபுல்லாஹ்,ஜாமியாப்பள்ளி முத்தவல்லி காசிம்,A.M.மஸ்கூத் அஹ்மத், M.Y ஃபாருக், நஜிர்,முஜிப், மொவ்ளவி. சுஹைது,,ஆசிரியர் முஸ்தாக்,
மமக.மா து.செ.ஜுனைது,தமுமுக நகர தலைவர் ஷபிக்குர்ரஹ்மான்,லால்பேட்டை,ஆயங்குடி,எள்ளெரி, ஆடுர்,கந்தகுமாரன்,மற்றும் நமதூர் கிளை நிர்வாகிகள் ஊர் ஜமத்தார்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். அல் அமான் பள்ளியின் நிர்வனர் தந்தை காதர் ஒலி அவர்கள் நன்றி உரையுடன் அடிகல் நாட்டு விழா சிறப்புடன் நிரைவு அடைந்தது.
வல்ல இறைவன் கிருபையால் காதர் ஒலி அவர்களின் முயர்ச்சியால் நமதூரில் நர்சரி&பிரைமரி ஸ்கூல் இல்லாத குரையை இறைவன் நிவர்த்தி செய்து இருக்கிறான். மேலும் நமதுர் பிள்ளைகளின் கல்வி தரம் உயர்ந்து வெளிநாட்டு மோகம் இல்லாமல் நம் தமிழ்நாட்டில் அனைத்து துரைகளிலும் பணியாற்ற வல்ல இறைவன் கிருபை செய்வானாக'' ஆமீன்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக