#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

09 மே, 2011

12ம் வகுப்பில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை


நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் முஸ்லிம் மாணவிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லிம் மாணவிகள் பெற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும் ரஹ்மத் மெட்ரி்க்  மேநிலைப்பள்ளியில் படித்த மாணவி அய்னுல் மர்லியா தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அப்பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றார். தமுமுக திருவரூர் மாவட்ட துணைச் செயலாளர் தீன் முஹம்மது, முத்துப்பேட்டை  நகரச் செயலாளர் முஹம்மது யாசீன், நகரப் பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரைப் பாராட்டினர். தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தொலைப்பேசி வாயிலாக தனது பாராட்டுகளை மாணவி மர்லியாவிடம் தெரிவித்தார். மாணவி மர்லியா தான் மருத்துவம் படிக்க விரும்புவதாக அப்போது தெரிவித்தார்.


இரண்டாம் இடம் பெற்ற இர்பானா

கன்னியாகுமரி மாவட்டம்  வேர்கிளம்பியை சேர்ந்தவர் மாணவி இர்பானா. மணலிக்கரை மரிய கொரட்டி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தமாணவி இர்பானா தாவரவியல் பாடத்தில் 200 மார்க் எடுத்து மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1150 ஆகும்.

இவருடைய தந்தை முகம்மது நாசர். பால் வியாபாரம் செய்து வருகிறார். தாய் சுனைதாபீவி. மாநில அளவில் சாதனை படைத்த மாணவி இர்பானா தனது சாதனை குறித்து கூறியதாவது:-

நான் 10-ம் வகுப்பிலேயே அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிவேன் என்று நம்பிக்கையுடன் படித்தேன். அப்போதிருந்தே படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தேன். 12-ம் வகுப்பில்  வந்ததும் படிப்பதற்கு  அதிக நேரத்தை ஒதுக்கி கொண்டேன். குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். இதற்காக 11-ம் வகுப்பில் இருந்தே எனது பெற்றோர், ஆசிரியர், ஆசிரியைகள் எனக்கு ஊக்கம் அளித்தனர்.

10-ம் வகுப்பில் சாதனை படைக்க முடியாததால் மன வேதனை அடைந்தேன். இப்போது நான் எதிர்பார்த்து இருந்த மதிப்பெண் கிடைத்துள்ளது. தாவரவியல் பாடத்தில்  200-க்கு 200மார்க் பெற்று மாநில அளவில் சாதனை படைத்ததற்கு அல்லாவின் கருணைதான் காரணம்.

மேலும் சாதனைக்கு துணை நின்ற ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் டாக்டருக்கு படித்து ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று இர்பான் கூறினார்.
அரபி பாடததில் மாநிலத்தில் முதல் இடம் பெற்றவர்கள்

1, மெக்தாப் பேகம், முர்துழாவியா பள்ளி சென்னை- மதிப்பெண் 196 2. ஜெசிமா பர்கானா, உஸ்வத்துல் ஹசனா ஒரியண்டல் அரபிக் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர் மதிப்பெண்-194 3. உனைஸ் மவுலானா, மியாசி மேநிலைப் பள்ளி, சென்னை மதிப்பெண் 192

உருது

1. முபீனா அஞ்சும், நுஸ்ரத்துல் இஸ்லாம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேரனாம்பட்டு மதிப்பெண் 195 2. பைக்குவா, நுஸ்ரத்துல் இஸ்லாம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரனாம்பட்டு மதிப்பெண் 195 3. ரபியா பஸ்ரி, இஸ்லாமியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேல்விசாரம், மதிப்பெண்-195

நன்றி.தமுமுக.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக