கடல் அட்டை மீதான தடை நீக்குவது குறித்தும் வனத்துறையினர் மற்றும் போலீசார் மீனவர்கள் மீது நடத்தும் அத்துமீறல் குறித்தும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். ராமநாதபுரம் அல்லி கண்மாய் சுடுகாடு அருகே குப்பை கிடங்கு உள்ளதால், சுடுகாட்டுக்கு வேறு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்னை எந்நேரமும் தொடர்பு கொள்ள "டோல் ப்ரீ நம்பர்', இமெயில், வெப்சைட் முகவரி மக்களுக்கு தெரிவிக்கப்படும்,என்றார்.ம.ம.க., மாவட்ட தலைவர் சலிமுல்லாகான்,பொருளாளர் முஜிபுர் ரக்மான், மாவட்ட செயலாளர்கள் அன்வர் அலி, ரியாஸ்(மருத்துவ அணி), புர்க்கான் (மாணவர் அணி) அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் உடன் சென்றனர்.
நன்றி. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக