#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

23 மே, 2011

அமைச்சர் சாவில் மர்மம்; முதல்வர் ஜெ., திடுக்.,- சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு

திருச்சி: பெரம்பலூர் அருகே அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) பலியானார். இவரது உடலுக்கு முதல்வர் ஜெ., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதனால் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் முதல்வர் ஜெ., கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்டசபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அ.தி.மு.க.,வினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடாலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்த வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.



மோதிய லாரி எங்கே ? தப்பி ஓடிய லாரியை தேடும் பணி தீவிரம் : திருச்சியில் இருந்து கிளம்பி காலை 7 மணிக்கு பெரம்பலூர் (இங்கிருந்து 15 .கி.மீட்டர் தொலைவில் ) திருநாயக்குறிச்சி பிரிவு ரோட்டில் பாடாலூர் அருகே எஸ்கார்டு சென்ற கார் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரிமீது ‌மோதியது. இதில் காரில் இடது புறம் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த டிரைவர் ஆனந்த், உதவியாளர் ஒருவர் லேசான காயமுற்றனர். அமைச்சர் காரை காணவில்லையே என திரும்பி வந்த எஸ்கார்டு் போலீசார் அமைச்சர் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சியுற்றனர். விபத்திற்கு காரணமான் லாரி தப்பி ஓடி விட்டது. லாரியை முந்தும்போது விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. லாரி குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை. லாரியை பிடிக்க அருகில் உள்ள மாவட்ட எல்லை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பலியான அமைச்சர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லலப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவரது மரியம் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

திருச்சியில் கடைகள் அடைப்பு : அமைச்சர் பலியானதை அடுத்து திருச்சியின் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களுக்கு ‌செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக நின்று முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தார்.. திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு, பாத்திமா கனி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 3 மகன்களும் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திருச்சியில் ஒரு திரையரங்கும் நடத்தி வந்தார்.

இன்று எம்.எல்.ஏ.,க்கள் பதவிப்பிரமாணம் : சட்டசபை முதன் முதலாக இன்று கூடவிருந்தது. இதில் தற்காலிகமாக நேற்று தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் தமிழரசன் இன்று எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் விபத்தில் அமைச்சர் இறந்து விட்டதால் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி சபை கூடியது. எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு நடந்தது. அனைத்துக்கட்சி எம்.எல்ஏ.,க்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அஞ்சலி செலுத்தினார்முதல்வர் ஜெ., : அமைச்சர் மறைவு செய்தி கேட்டு முதல்வர் ஜெ., அதிர்ச்சியும் , இரங்கலும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர் மாவட்ட முன்னாள் செயலரும் அமைச்சருமான அவர் மறைவு கேட்டு அதிர்ச்சியுற்றேன், 3 முறை கவுன்சிலராக திறம்பட பணியாற்றியவர். கட்சியின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவரும், ஆற்றல் படைத்தவருமான, அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது இழப்பினால் ஆழ்ந்த துயரத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

சென்னையில் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றதும், ஜெ., தனி ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2 .30 மணி அளவில் திருச்சிக்கு வந்தார். அங்கு அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கூறுகையில்; அமைச்சர் மரணம் அடைவார் என நான் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதது. இவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த விபத்தை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார்.


 நன்றி. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக