அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
27 மே, 2011
அரபி மொழி பாடம்: காயல்பட்டினம் மாணவிகள் மாநில ரேங்க்
Last Updated :
ஆறுமுகனேரி, மே 27: பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வில் அரபி மொழிப் பாடத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.எம்.ஏ.ஆயிஷா முஸ்ஃபிரா, அரபி மொழிப் பாடத்தில் 95 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
காயல்பட்டினம் நெய்னாத் தெருவைச் சேர்ந்த செய்யீத் முஹம்மத் அலீ, ஜெய்னப் நாச்சி ஆகியோரின் மகள் இவர்.
பாடவாரியாக மதிப்பெண்கள்: அரபி 95, ஆங்கிலம் 74, கணிதம் 94, அறிவியல் 92, சமூக அறிவியல் 94. மொத்தம் 449. இவர் கணிணி அறிவியல் பாடப்பிரிவில் பயின்று கணினித் துறையில் வல்லுநராக விரும்புவதாகத் தெரிவித்தார். இவரது சகோதரர் முஹம்மத் ஸôலிஹ் எம்.இ. பொறியியல் கல்வி பயின்று வருகிறார்.
மாணவியை பள்ளித் தாளாளர் வாவு எம்.எம்.மொகுதஸிம், தலைமை ஆசிரியர் செண்பகவல்லி ஆகியோர் பாராட்டினர்.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியான எம்.எம்.செய்யித் ஹலீமா அரபி பாடத்தில் 95 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
பாடவாரியாக மதிப்பெண்கள்: அரபி 95, ஆங்கிலம் 75, கணிதம் 71, அறிவியல் 87, சமூக அறிவியல் 87. மொத்தம் 415.
இவருடைய பெற்றோர் காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.கே. முஹம்மத் முஹ்யித்தீன், ஹஸீனா பேகம்.
அடுத்து உயிரியல் பாடத்தை உள்ளடக்கிய அறிவியல் பாடப்பிரிவில் பயின்று மருத்துவராக விரும்புவதாக மாணவி கூறினார். அவரைப் பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக