#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

06 மே, 2011

சிகரட் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்



துர்நாற்றமுள்ள சுவாசம், மஞ்சள் பற்கள், கறைபடிந்த விரல்களும் உதடுகளும், வயதான தோற்றமும் சுருக்கங்களும் இப்படி சிலவற்றை நீங்கள் தவிர்க்க முடியாது!
இது மட்டுமல்ல நுரையீரல் புற்றுநோய், எம்பிசிமா, மலட்டுத்தன்மை, இதய நோய்கள், பக்கவாதம் இவ்வாறானவற்றையும் நீங்கள் தவிர்க்கவே முடியாது.
நீங்கள் புகைப்பவராக இருந்தால் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டும் ஏன் தொடர்ந்து புகைக்க வேண்டும்?

புகைப்பவர்கள் யார்?

புகைத்தல் என்பது இனம், பால், குலம், சமூகம் போன்ற எல்லா எல்லைக் கோடுகளையும் கடந்தது.
நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு நிலையத்தின் அறிக்கைப் படி அமெரிக்காவில் 20 வீதமான மக்கள் தொகையில் 46 மில்லியன் பேர் வரையிலான இளம் வயதினர் இந்த புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.


இந்த எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்களே அதிகம்.
19 வீதமாக உள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களின் எண்ணிக்கை 23 வீதமாக உள்ளது.

வயது வந்தவர்கள் மட்டுமல்ல உயர் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களும் கூட ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட் பாவிக்கின்றனர்.

சிகரெட்டில் என்ன இருக்கிறது?


இயற்கையாகவே நிகொட்டின் எனப்படும் போதைப்பொருளைக் கொண்ட உலர்ந்த புகையிலையைக் கொண்டு தான் சிகரெட் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் புகைத்தலை அனுபவித்து மகிழ்வதற்கென சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் சில வேதியல் பொருட்களான அமோனியா, தார், காரீயம், சைனைட் மற்றும் இதர உபபொருட்களான கொக்கோ, கோபி, மெந்தோல் போன்றவற்றை சேர்க்கின்றனர்.

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தகவல் படி சிகரெட்டிலும் சிகரெட் புகையிலும் 4 ஆயிரம் வேறுபட்ட வேதியல் பொருட்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் 60 வேதியல் பொருட்கள் புற்றுநோய் உருவாக்கத்திற்குக் காரணமானவை.

புற்றுநோய்க்குக் காரணமான இந்த வேதியல் பொருட்கள் கெர்சினோஜன்ஸ் எனப்படுகிறது.

முன்னர் சிகரெட்டில் உள்ள பொருட்களை உபபொருள் பட்டியலில் உள்ளடக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
அதனால் விஞ்ஞானிகளுக்கு என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அதனால் எவ்வாறான உடற்பாதிப்புகள் ஏற்படும் போன்ற தகவல்களை அறிவது முடியாதிருந்தது.

தற்போதைய சட்டத்தின் படி சிகரெட் தயாரிப்பாளர்கள் தமது சிகரெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினரிடம் (FDA) ஒப்படைக்க வேண்டும்.
சிகரெட்டில் உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேதியல் பொருட்கள் இருப்பின் அவற்றை வருகின்ற ஜூன் மாதத்திற்கு முன்னர் நுகர்வோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

புகைத்தல், கர்ப்பம் மற்றும் மலட்டுத்தன்மை 

புகையிலைப் பயன்பாடு இனப்பெருக்கத்தைப் பாதிக்கிறது.
புகைப்பவர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலான ஸ்பெர்ம்கள் உருவாகுவதுடன் கர்ப்பம் தரிப்பது கடினமான விடயமாகிவிடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு குழந்தையின் உடல் மற்றும் உள வளர்ச்சிக்குத் தேவையான DNA இனையும் இந்த புகைத்தல் பாதிக்கிறது என நிபுணர்கள் நம்புகின்றனர்.
கர்ப்பம் தரித்த நிலையிலும் தொடர்ந்து புகைக்கும் பெண்கள் தமது உடலைப் பாதிப்புக்குள்ளாக்குவதோடு தமக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் உடல், உளப் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு முழுதும் வளர்ச்சியடையாத அல்லது குறைந்த எடையுடைய குழந்தைகள் பிறக்கின்றன.
சில வேளைகளில் குழந்தை திடீரென இறக்கவும் வாய்ப்புண்டு.

புகைத்தலும் நோய் ஆபத்துக்களும்


அமெரிக்க ஆண் பெண்களிடையே இறப்பிற்கான முக்கிய காரணமாக இருப்பது இதய நோய்கள் தான்.

புகைக்காதவர்களை விட புகைப்பவர்களுக்கு 2 முதல் 4 மடங்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இப்பழக்கம் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும்.

இரத்த நாளங்கள் மற்றும் இரத்தத் தமனி போன்றவற்றையும் பாதிப்புக்குள்ளாக்கும். பெரிபரல் இதயத்தமனி நோய்களையும் உண்டாக்கும் என்பதோடு, இறப்பையும் ஏற்படுத்தும்.

புகைத்தல் உங்கள் நுரையீரலைப் பாதிப்பதோடு சுவாச நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது.

நீங்கள் புகைக்கும் ஆணாக இருந்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 23 மடங்கு அதிகமாகவுள்ளது.
பெண்களில் புகைக்காதவர்களை விட புகைப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அபாயம் 13 மடங்கு அதிகமாக உள்ளது.

புகைத்தலும் இறப்பும்


அமெரிக்கர்களில் வயது வந்தவர்கள் மத்தியில் தடுக்கக்கூடிய நோய்கள் ஏற்படுவதற்கு முதல் காரணமாக இருப்பது புகைத்தல் தான்.
மறுபக்கம் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட புகைத்திடாத பல ஆயிரக்கணக்கான பேர் இந்த புகை காரணமாக கொல்லப்படுகின்றனர்.
புகைக்காதவர்களை விட புகைப்பவர்கள் 13 முதல் 14 வருடங்கள் முன்னதாகவே இறந்துவிடுகின்றனர்.

இதோ சில நல்ல செய்திகள், இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைய ஆரம்பித்துவிடுகிறது.
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தகவல் படி ஒரு வருடத்திற்குப் பின்னர் நீங்கள் உங்கள் கடைசி சிகரெட்டை பிடிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் சிக்கல்கள் பாதியாகக் குறைவடைகிறது.
இது எல்லா நோய்த்தாக்கங்களுக்கும் பொருந்தும். எனவே, இப்போதே ஒரு சிறந்த முடிவை எடுப்பதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியும்.

நன்றி .வணக்கம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக