காட்டுமன்னார்கோவில் அருகே மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார் கோவில் பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது நடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற இன்னும் 2 மாதத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
கர்நாடக அரசும் முழுமையாக தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது. பருவமழையும் பொய்த்து விட்டது. இதையடுத்து மழை வேண்டி ஆயங்குடி பெரியபள்ளிவாசல் அருகே திறந்தவெளி மைதானத்தில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
ஆயங்குடி பெரிய பள்ளி வாசல் இமாம் முகம்மது அப்பாஸ் ஹஜ்ரத் தலைமை தாங்கினார். ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக