மாநகராட்சி கவுன்சிலர் 1, நகராட்சி உறுப்பினர்கள் 15, பேரூராட்சி உறுப்பினர்கள் 41 உள்ளிட்ட 156 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் வெற்றிப் பெற்றுள்ளனர். நூற்றுக் கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் வந்துள்ளனர்.
மமக தமிழக அளவில் பரவலாக வெற்றிபெற்றுள்ளது. சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த 9 பேர் வெற்றி வேட்பாளர்களில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு சமுதாயத்தினரும் மமகவுக்கு வாக்களித்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், வன்முறைகளைச் செய்யாமல் அதே நேரம் வன்முறைகளுக்கும் பணியாமல், மது பாட்டில்களை வினியோகிக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் களத்தில் நாகரீகமான அணுகுமுறை பேணப்பட்டது.
பிற வேட்பாளர்களிடமும், கட்சியினரிடமும் களத்தில் கண்ணியத்தை கடைப்பிடித்ததும், தரக்குறைவான விமர்சனங்களை முன் வைக்காமல் சேவைகளையும், செயல் திட்டங்களையும் முன் வைத்ததும் மக்களிடம் மமகவின் மீதான மரியாதையை உயர்த்தியிருக்கிறது.
அடிப்படை செலவுகளுக்கு கூட வழியின்றி களத்தை சந்தித்த மமக வேட்பாளர்கள், பணக்கார கட்சிகளைத் திணறடிக்கும் வகையில் களப்பணியாற்றியுள்ளார்கள். வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை 141 மட்டுமே. ஆனால் சொற்ப வாக்குகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாகும். நமது ஆதரவையும், களப்பணிகளையும் பெற்று வென்றவர்களின் எண்ணிக்கை இருநூறையும் தாண்டுகிறது.
10 முனை போட்டி நிலவிய உள்ளாட்சித் தேர்தல் களத்தில் பரவலாக முதல் ஐந்து இடங்களில் மமகவினர் வாக்குகளைப் பெற் றுள்ளனர்.
அனைவரின் ஆதரவும்...
கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் மூன்றாவது இடத்தையும், லால்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலில் 54 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாவது இடத்தையும் அதே போல் சோழபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் மூன்றாம் இடத்தையும் மமக பெற்றுள்ளது.
பணநாயகம் தலைவிரித்தாடிய கடும் போட்டியில் ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளது மமக. பல முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் எங்களுக்கு அடுத்து வரக்கூடிய நிலையையும் களத்தில் ஏற்படுத்தியுள்ளோம்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரே மாதிரியான சின்னங்கள் கிடைக்காமல் ஒரே ஊரில் வெவ்வேறு வார்டு களில் வெவ்வேறு சின்னங் களில் போட்டியிட்ட போதும் மாநகராட்சி கவுன்சிலர் 1, நகராட்சி உறுப்பினர்கள் 15, பேரூராட்சி உறுப்பினர்கள் 44, என முதன்மையான உள்ளாட்சி இடங்களில் 60 இடங்களை மமக வென்றிருக்கிறது. புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகளை பின்னுக் குத் தள்ளி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக மமக வளர்ச்சியடைந்துள்ளது.
அதிராம்பட்டினம், லெப்பைக்குடிக்காடு, தொண்டி உள்ளிட்ட ஊர்களில் ஜமாத்துக்கள் மற்றும் உள்ளூர் சங்கங்களில் ஒருமித்த ஆதரவோடு மமகவினர் வெற்றிபெற்றுள்ளனர்.
அடிப்படை செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாத பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மமக வேட்பாளர்கள் பல முனைப் போட்டிகளை எதிர் கொண்டு வாகை சூடியுள்ளனர். தமிழகத்தில் ஓரிரு இடங்களைத் தவிர்த்து பெரும்பாலான இடங்க ளில் அரசியல் கட்சிகளும், பல சுயேச்சைகளும் கூட வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதனால் பல இடங்களில் மமக வின் வெற்றிகளை பாதிக்கச் செய்துள்ளனர். பண ஆதிக்கம் நடைபெறாமல் தேர்தல் ஆணை யம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் மமக உட்பட பல கட்சிகள் கூடுதல் இடங்களைப் பெற்றிருப்பார்கள். இது குறித்து மமக தலைவர் பேரா.ஜவாஹி ருல்லா அவர்கள், "பணநாய கத்தை தாண்டி எங்களுக்கு 156 இடங்களில் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் பெறுவதும் ஜனநாயக குற்றம் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொள்வோம். வழக்கம்போல் எமது அரசியல் பணிகளை, தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தோடும், கூடுதல் பொறுப்புகளோடும் தொடர்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
களமும், பலமும்...
தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் படி அதில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதியாக மமக மட்டுமே அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. அதில் மமக சுயேச்சைகளின் சின்னத்தில் போட்டியிட்டதால் மமக வேட்பாளர்களின் வெற்றிகள் மற்றவை என்ற பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. பத்திரிக்கைகளில் மமகவின் வரிசையில் பூஜ்ஜியங்கள் இடம் பெற்றிருந்தன.
இது குறித்து மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாள் அக்.22 அன்று தமிழக தேர்தல் ஆணையர் சோஅய்யரிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்தார். விபரங்களை கேட்டுக்கொண்ட அய்யர், உடனடியாக மமக வேட்பாளர்களின் வெற்றி விபரங்களை சேகரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக கூறினார்.
தேர்தல் ஆணைய பட்டியல் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் மூலமும், வெற்றி பெற்ற எண்ணிக்கைகளின் அடிப்படையிலும் மனிதநேய மக்கள் கட்சி தனது இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. (புகழ் அனைத்தும் இறைவனுக்கே).
இதில் நகராட்சி கவுன்சிலர்களின் எண்ணிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் 10 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால் மமக 15 இடங்களை வென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை முந்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. அதுபோல் பேரூராட்சி உறுப்பினர் பதவிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், மமக 11 இடங்களை கூடுதலாக பெற்று 44 இடங்களில் வென்றிருக்கிறது.
கொஞ்ச ஓட்டுகளில் தவறிப்போன கூத்தாநல்லூர் நகராட்சியையும், லால்பேட்டை பேரூராட்சியையும் மமக வென்றிருக்குமேயானால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, சி.பி.எம் கட்சிக்கு அடுத்த இடத்தை மமக பிடித்திருக்கும்!
ஒருவேளை தேமுதிக அணியில் மார்க்ஸிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாமல் மமகவைப் போல தனித்து நின்றிருந்தால் அவ்விரு கட்சிகளையும் மமக சமன் செய்திருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.! இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் மேற்கண்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் உள்ளது.
ஆனால் மமக ஒரே சின்னம் இல்லாமல் சுயேட்சை சின்னங்களில் போட்டியிட்டு உள்ளாட்சியின் முதன்மைப் பதவிகளில் 60 இடங்களில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. வெற்றிபெற்றவர்களில் தலித்துகள், கிருஸ்தவர்கள், மீனவர்கள், இந்துக்கள் என பலரும் அடக்கம். இதன் மூலம் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முதன்மையான அரசியல் பேரியக்கமாக மனிதநேய மக்கள் கட்சி பரிணாமம் பெற்றுள்ளது.
வெட்ட வெட்ட துளிர்ப்போம்!
அடக்க அடக்க திமிருவோம்!!
அழிக்க நினைத்தால்...
ஆயிரம் பலத்தோடு எழுவோம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக