அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
04 பிப்ரவரி, 2013
கோவையில் சமுதாய எழுச்சி! “மக்கள் வாழ்வுரிமை மாநாடு”
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திதரவேண்டும், இந்தியளவில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்து நிறுத்த வேண்டும், தடையில்லா மின்சாரம்வழங்க வேண்டும், என ஐம்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்ட மாநகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் மக்கள் வாழ்வுரிமை மாநாடு மாநகர மாவட்ட தலைவர் சகோ.கபீர் தலைமையில் பிப்ரவரி – 03 அன்று நடைபெற்றது.
இதில் தமுமுக மற்றும் ம.ம.க மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டையொட்டி மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பிரமாண்ட விளம்பரங்களும், வாகண விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக மாநாட்டு வளாகத்தில் இளைஞரணி மற்றும் மகளிரணியின் பிரமாண்ட அணிவகுப்பும் நடைபெற்றது.
மாநாட்டின் சிறப்பம்சமாக மறக்கடிக்கப்பட்ட முஸ்லிம்களின் வரலாற்றுகளை நிணைவுகூறும் வண்ணம் பிரமாண்ட புகைப்பட கண்காட்சியும், நெஞ்சை உலுக்கும் போர்க்கள காட்சிகளும், புத்தக கடைகளும் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப் பெற்றிருந்தன.
இந்த மாநாட்டில் ஆண்களுக்கு நிகராக போட்டி போட்டு பெண்களும் படையெடுத்து வந்தது. அரசியலில் சமுதாயத்திற்கான ஒரு புதிய களத்தை ம.ம.க உருவாக்கியுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே…
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக