அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
28 ஜூன், 2013
சகோதரியே!
நமக்கு நாணம் வேண்டும். நாணம் தான் நம் பெண்மையின் அடையாளம்! அந்த நாணமே.. நம் ஈமானின் கவசமும் கூட..! (அ)நாகரீக வளர்ச்சியில்.. மற்றவர்களைப் போல நீயும் போதை கொண்டால்..... அது உன் ஈமானையும், உன் ஒழுக்கத்தையும், அநாகரிகம் பக்கம் சிறைப் பிடித்து விடும்! வாகனம் ஓட்டுபவன்.... உன் கணவனாக இருக்கலாம்... அல்லது உன் சகோதரனாக இருக்கலாம்... (அல்லாஹ் அறிந்தவன்!) ஆனால்... அதுக்காக காண்பவர்களின் உள்ளத்தில் .. சலனத்தை ஏற்படுத்தி செல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை! நாணத்தை இழந்தால்.... நடக்கும் தூரத்தில்.. நரகம் காத்திருக்கிறது..என்பதை அஞ்சிக் கொள்! என் அன்புச் சகோதரிகளே! சிந்தித்து செயல்படுங்கள்!
இஸ்லாத்திற்காக எதையும் இழக்கலாம்! ஆனால்.. எதற்காகவும் இஸ்லாத்தை இழந்து விடவேண்டாம்!! அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக