நமதுருக்கு (கொள்ளுமேடு) சொந்தமாகவும்,பொதுவானதாகவும் ஒரு இணையதளம் அமையவில்லையே என்ற ஏக்கத்தை வருகிற 01.07.2013 அன்று துவங்க இருக்கும் கொள்ளுமேடு .காம் என்ற இணையதளம் துவங்க இருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
சமுதாய மீது ஆர்வம் உள்ள எந்த ஒரு படைப்பாளிக்கும் ,தானும் ஏதாவது எழுதி தனது கட்டுரை பத்திரிகையிலோ ,இணையத்தளத்திலோ
வெளிவரவேண்டும் என்ற ஆதங்கம் இயல்பாகவே அமைந்துவிடும் ஆனால் அது அனைவருக்கும் எளிதான காரியமில்லை . எண்ணற்ற நூல்கலிலும் ,இணையதளத்திலும் வாசித்து ,அதனால் பெற்ற அறிவைக்கொண்டு ,தனது சிந்தனை மற்றும் எளிதாய் எழுதும் ஆற்றல்,திறன் ,ஆர்வம் மற்றும் ஈடுப்பாடு ஆகியவை இயல்பாகவே இருக்கவேண்டும்.
அப்பொழுதுதான் அந்த எண்ணம் தனக்குள்ளேயே ஒரு விதியாகப் பதியம் போடும் . அது துளிர்த்து மனம் கமழும் இணையதளமலராக மலர்ந்து அனைவரின் மனதை கவரக்கூடியதாக அமையும். அந்த வகையில் கொள்ளுமேடு .காம் தளம், பல்வேறு தலைப்புகளின் கீழ் இஸ்லாம், அறிவியல், பொது அறிவு கட்டுரைகள், நூல்கள், வீடியோ, ஆடியோ கோப்புகள், சிந்திக்க வைக்கும் கதைகள் மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை அறிவுக்களஞ்சியமாக தொகுக்கும் ஒரு மாபெரும் திட்டமாக இருக்கவேண்டும் .
மேலும் அனைத்து மக்களுக்கும், இயக்கங்கள் ,அமைப்புகளுக்கும் அப்பார்ப்பட்டு பொதுத்தளமாக அமையவேண்டும். அனைத்து சமுதாய மக்களும் பயன்பெருவகையில் அமைய வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். என்றும் இவ்வுலகம் முழுமைக்கும் இன்ஷா அல்லாஹ் அனைத்துமக்களுக்கும் பயனுள்ளதாய் இந்த இணையத்தளம் இனியதாய் அமைந்திட வாழ்த்தி வரவேற்கிறேன் .
என்றும் அன்புடன் கொள்ளுமேடு மைந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக