அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
28 அக்டோபர், 2013
சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சபீகுர் ரஹ்மான்
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் ) கொள்ளுமேடு தமுமுகவின் பொதுக்குழு இன்று ம ஃரிப்க்கு பிறகு நடைப்பெற்றது .
சில தினங்களுக்கு முன்பு முகநூலில் கொள்ளுமேடு தமுமுகவின் முக்கிய நிவாகி ஷபிக்குர் ரஹ்மான் தமுமுகவிட்டு விலகி TMJK யில் இணைந்தார் என்று சில சகோதர்களால் முகநூல் வாயிலாக செய்திகள் பரப்பபட்டது அவருக்கு TMJK யில் மாவட்ட துணைச்செயலாளர் பதவி தரப்பட்டு உள்ளது என்று செய்திகள் வந்தது. இந்த செய்தியை அறிந்து நாம் அவரை தொடர்ப்புக்கொண்டு கேட்டபோது அதை மறுத்தார் நான் ஒருபோது தமுமுகவை விட்டு விலகமாட்டேன் அதற்க்குவாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாக தெரிவித்தார். ஆனால் உன் பெயர் TMJK யின் பேனரில் ஏன் வந்தது என்று கேட்டபோது சில நாட்களாக கொள்ளுமேட்டை சார்ந்த TMJK மாநில நிர்வாகி அந்த கட்சியில் இணையவேண்டும் என்றும் கொள்ளுமேட்டில் கிளை திறப்பை குறித்தும் அவரிடம் தெரிவித்து இருக்கிறார் இதற்க்கு எல்லாம் அவர் மறுப்பே தெரிவித்து வந்துள்ளார். கிளை திறப்பதற்கு முதல் நாள் அவரின் புகைப்படத்தை கேட்டுயிருக்கிறார் அப்பொழுதும் கடுமையாக மறுத்துவந்துயிருகிறார் மறுநாள் காலை கிளை திறப்பு விழாவிற்கு பேனர் வைத்ததில் அதில் அவரின் பெயர் இருப்பதை கண்ட தமுமுகவின் சகோதர்கள் அவரிடம் கேட்டபோது அதற்கும் எனக்கு எந்த சம்மந்த கிடையாது என் அனுமதியை பெறாமலே என் பெயரை போட்டு உள்ளனர் அவர்களிடம் இருக்கும் என் நட்பையும் என் பெயரையும் களங்கப்படுத்தி விட்டார் என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். இருப்பினும் தமுமுகவின் சகோதர்கள் அந்த பேனரை கிழித்து எறியவேண்டும் என ஆவேசமாக இருப்பத அறிந்த நான் ஷபிக்குர் ரஹ்மான் என்னிடம் தொலைப்பேசியில் உரையாடியதை அவர்களிடம் தெரிவித்து அவர்களை அமைதிபடுத்தினேன். வரும் பொதுக்குழுவில் கலர்ந்துக்கொண்டு வருத்தத்தை தெரிவித்துக்கொள்வார் என்று தெரிவித்தேன். இன்று நடைப்பெற்ற பொதுக்குழுவில் ஷபிக்குர் ரஹ்மான் கலர்ந்துக்கொண்டு நடைப்பெற்ற சம்பவங்களுக்கெல்லாம் விலக்களித்து தன் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார். இந்த குழப்பத்திர்கேல்லாம் வல்ல இறைவன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் எல்லா புகழும் இறைவனுக்கே!!
இறுதியாக தமுமுக நடத்திருக்கும் டிசம்பர் 6 கருப்புதின போராட்டத்தையும், பிப்ரவரி 8 மாநில எழுச்சி மாநாடு பற்றியும் அளந்தாய்வு நடைப்பெற்றது .போராட்டத்திற்கு கொள்ளுமேடிலிருந்து பெரும் அளவில் கலர்ந்துக்கொள்ளவேண்டும் எனவும் மாநில மாநாட்டிற்காக கொள்ளுமேட்டில் தெருமுனை பிரச்சாரம் செய்யவேண்டும் என முடிவு செய்யப்பட்டு துவாவுடன் நிறைவு செய்யப்பட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக