அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
07 நவம்பர், 2012
உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்ட துபாயின் புர்ஜ் கலீபாவில் 2 தளங்களை அப்படியே ஒட்டுமொத்தமாக வாங்கிப் போட்டு அத்தனை இந்தியர்களையும் வாய் பிளக்க வைத்துள்ளார் இந்தியாவின் பி.ஆர்.ஷெட்டி
உலகிலேயே மிகவும் உயரமான கட்டடம் இதுதான். மொத்தம் 900 அபபார்ட்மென்ட்கள் இங்கு உள்ளன. 828 மீட்டர் உயரம் கொண்டது இந்தக் கட்டடம்.
புர்ஜ் கலீபாவில் உள்ள அபார்ட்மென்ட்டை வாங்குவது என்பது பல பணக்காரர்களுக்கு பெரும் கனவாக உள்ளது. ஆனால் இங்கு விலையும் மிக அதிகம்தான். ஒரு சதுர அடி அங்கு தற்போது ரூ. 35,000 முதல் 40,000 வரை உள்ளதாம். டெல்லி, மும்பையில் உள்ளதை விட இது குறைச்சல்தான் என்றாலும் இங்கு ஒரு வீட்டை வாங்கிப் போடவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.
முற்றிலும் அரபுப் பணத்தில் கட்டப்பட்டிருந்தாலும் கூட இங்கும் இந்தியர்கள் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. 150 இந்தியர்களுக்கு இங்கு வீடுகள் உள்ளனவாம்.
நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா, நடிகர் மோகன்லால், டெல்லி வழக்கறிஞர் ரோஹித் கோச்சார், எமிரேட்ஸ் என்எம்சி மருத்துவமனை அதிபர் பி.ஆர்.ஷெட்டி, தொழிலதிபர் என்.வி.ஜார்ஜ் உள்ளிட்டோர் இங்கு வீடு வாங்கிப் போட்ட பிரபலங்களில் சிலர்.
இவர்களில் தற்போது பி.ஆர்.ஷெட்டி அத்தனை இந்தியர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். மொத்தம் 2 தளங்களை அவர் ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி விட்டாராம். அங்குள்ள அத்தனை வீடுகளும் இவருக்குச் சொந்தமானவை.
100 மற்றும் 140வது தளங்களை இவர் வாங்கி வைத்துள்ளார். இந்த இரண்டு தளங்களையும் வாங்க அவர் செலவிட்ட தொகை ஜஸ்ட் ரூ. 135.17 கோடிதான்.
ஷெட்டி ஒரு சாதாரண சேல்ஸ்மேனாக வளைகுடா நாட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று வளைகுடா நாடுகளிலேயே மிகவும் பிரபலமான என்.எம்.சி. ஹெல்த்கேர் என்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைத் தொடரை நிர்வகித்து வருகிறார். வளைகுடாவில் வசித்தும் இந்தியப் பெரும் பணக்காரர்களில் ஷெட்டியும் ஒரு முக்கியஸ்தர்.
அடுத்து இந்தியாவிலும் மிகப் பெரிய அளவிலான மருத்துவ சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் ஷெட்டி. பெங்களூர், சென்னை, கோவை, ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில் மிகப் பெரிய மருத்துவமனைகளை இவர் கட்டத் திட்டமிட்டுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்தவரான ஷெட்டி, பந்த் சமூகத்தைச் சேர்ந்தவர். கடும் உழைப்பால் முன்னேறியவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பிரவேசி பாரதிய சன்மான் ஆகிய விருதுகளைப் பெற்றவர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3000 படுக்கைகளைக் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை தொடரை உருவாக்குவதே இவரது லட்சியமாம்.
துபாய், அபுதாபி, அல் ஐய்ன், ஷார்ஜா ஆகிய நகரங்களில் இவரது மருத்துவமனைகள், பார்மசிகள் உள்ளன. இந்தியக் கனவு தவிர மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளிலும் இவர் கண் வைத்துள்ளாராம். கத்தாரிலும் விரைவில் மருத்துவமனையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம்.
நன்றி.தாஸ்தமிழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக