அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
28 நவம்பர், 2012
இஸ்லாமிய விரோத காட்சிகளை நீக்க உதவி செய்த முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நன்றி!
சமீபத்தில் வெளியான தூப்பாக்கி எனும் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவரவாதிகளாக சித்தரித்தது குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியது. இக்காட்சிகளை நீக்க கோரி இப்படக்குழுவினரை இதஜ, தமுமுக, தேசியலீக், SDPI உள்ளிட்ட 24 அமைப்புகள் கூட்டாக சேர்ந்து சந்தித்தது. அதன் அடிப்படையில் இக்குழுவினர் இஸ்லாமிய சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டனர். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி விடுவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
இக்காட்சிகளை நீக்க தமிழக முதல்வர் உடனடியாக கேட்டுக் கொண்டதால், முஸ்லிம்களை இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இக்காட்சிகள் நீக்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, தமுமுக, இதஜ, SDPI, மு.லீக், தேசியலீக், சுன்னத் வல் ஜமாஅத் உள்ளிட்ட 24 அமைப்புகளை உள்ளடக்கிய இஸ்லாமிய கூட்டமைப்பு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நன்றி. INTJ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக