அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
12 நவம்பர், 2012
துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு கண்டனம்
முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.
அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,
பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி
தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி போன்ற ஊடகங்களே தவிர்த்தவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களின் குணாதிசியங்களையும், பண்புகளையும் அதிகமாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள நாட்டில் அமர்ந்துக் கொண்டு செய்தியின் தரம் அறியாமல் வாசிப்பது தவறு என ரேடியோ ஹலோ உணரவேண்டும்.
மதக் கலவரங்களை ஏற்படுத்தி, அமைதி குலைப்பதை தனது வாழ்நாள் இலட்சியமாக கருதும் இராமகோபாலனின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் கூறிய உண்மையற்ற கூற்றை செய்தியாக வாசிப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்திருக்க வேண்டாமா?. ஒரு சில நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளும், பல்வேறு மறைமுக கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் வழங்கும் தங்கள் ரேடியோ இதுபோன்ற நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இந்த நாட்டினுடைய சட்டத்தின் படி இஸ்லாமிய மதத்தைப்பற்றியோ, தலைவர்களைப் பற்றியோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை செய்ததற்காக பல செய்தித் தாள்களும், காட்சி ஊடகங்களும் கடந்த காலங்களில் உடனடியாக மூடப்பட்டுள்ளன என்பதை மேற்கோள் காட்டி, தங்களுடைய இன்றைய செய்தி வாசிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், இனி செய்திகளில் கவனம் செலுத்துப்படும் என்ற உறுதி மொழியையும் இந்த மின்னஞ்சல் கிடைத்த 7 வேலை நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக இந்த விஷயத்தை அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதை இதன் மூலமாக பதிவு செய்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
ஹூசைன் பாஷா
துபாய்
நாள் : 09.11.2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக