#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

05 ஜனவரி, 2013

பச்சை நிறம் குறித்து குர்ஆனில் எட்டு இடங் களில் கூறப்படுகின்றன


குர்ஆனில் பச்சை நிறம்
குர்ஆனில் மற்ற நிறங்களை விட பச்சை நிறத்தை மட்டும் சிறப்பித்துச் சொல்லப்படுவதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
பச்சை நிறம் பார்ப்பதற்கு பசுமையானது!கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவது! மனிதன் பார்த்ததும் பரவசமடையும் இந்த வண்ண நிறம் இறைவனுக்கும் மிகவும் உவப்பான நிறம் என்பதால் தான் அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகவும், சுவர்க்கத்துப் பரிசுப் பொருட்களில் ஒன்றாகவும் சிறப்பிக்கப்   படுவதை குர்ஆனில் காணலாம்.
இந்த  பச்சை நிறம் குறித்து குர்ஆனில் எட்டு இடங் களில் கூறப்படுகின்றன.அவை:-


1. பச்சை நிற இரத்தினக் கம்பளம் 55: 76 (رفرف خضر)
مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ
(சுவர்க்க வாசிகள்) பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும்,அழகு மிக்க விரிப்புகள் மீதும் சாய்தவர்களாக இருப்பார்கள் (55:76)
2. கரும் பச்சை நிறமுடையவை 55: 64 (مدهامتان )
مُدْهَامَّتَانِ
(சுவர்க்கச் சோலைகள்)இரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.(55:64)
3பசுமையான பயிர்கள் 06:99 (خَضِرًا)
فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا
அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம். 06:99)
4. பசுமையான மரங்கள் 36:80 (الشَّجَرِ الْأَخْضَر)
الَّذِي جَعَلَ لَكُم مِّنَ الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا
பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே! அதிலிருந்தே நீஙகள் (தீ) மூட்டுகிறீர்கள் (36:80)
5. பச்சைப் பட்டாடைகள் 18:31 (ثِيَابًا خُضْرًا)
وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِّن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ
(சுவர்க்கவாசிகளான) அவர்கள் ஸுந்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அணிந்திருப்பார்கள்) 18:31)
6. பசுமையான ஏழு கதிர்கள் 12:43, 12:46  (سُنبُلاَتٍ خُضْر)
وَسَبْعَ سُنبُلاَتٍ خُضْرٍ
ஏழு பசுமையான கதிர்களையும்,(நான் கனவில் கண்டேன்) (12:43)
(என யூசுப் நபியின் மன்னர் கூறினார்.)
7. பச்சை நிற சுந்துஸ் எனும் பட்டு (76:21) (سُندُسٍ خُضْرٌ)
عَالِيَهُمْ ثِيَابُ سُندُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ
அவர்களின் மீது ஸுந்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்.(76:21)
8. பூமி பசுமையடைவது 22:63) (الْأَرْضُ مُخْضَرَّة)
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَتُصْبِحُ الْأَرْضُ مُخْضَرَّةً
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்.அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? (22:63)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக