அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 ஜனவரி, 2013
கமலின் விஸ்வரூபம் சிறப்பு காட்சி முஸ்லிம் தலைவர்களுக்கு நேற்று காண்பிக்கப்பட்டது!!
கமல் தனது விஸ்வரூபம் படத்துக்கு ஒருபுறம் தியேட்டர் அதிபர்கள் சங்கம், மற்றொரு பக்கம் முஸ்லீம் அமைப்புகள் என்று நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், இந்த இரண்டில் ஒன்றை முதலில் சால்வ் பண்ணலாம் என்று முடிவு செய்து, ஓசைப்படாமல் ஒரு காரியம் செய்திருப்பதாக தெரியவருகிறது.
தியேட்டர் அதிபர்கள் சங்கத்துடன் ஃபுல் கான்ஸன்ட்ரேட் பண்ணுவதற்காக, நேற்று முஸ்லீம் அமைப்புகளை அப்ரோச் செய்து, பேசியதாக தெரிகிறது. முஸ்லீம் அமைப்புகளும் எங்களுக்கு படத்தை காட்டாமல் வெளியிடகூடாது என்பதில் உறுதியாக இருந்ததால், அவர்களுக்கு பிரத்யேகமாக படத்தை திரையிட்டு காட்டிவிட்டார் கமல்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) 10க்கும் மேற்பட்ட முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களுக்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றையும் ஏற்பாடு செய்த கமல், படத்தை திரையிட்டு காண்பித்தார் என்று தெரியவருகிறது.
படத்தை பார்த்த முஸ்லீம் தலைவர்கள் கேட்ட சிறிய கேள்விகளுக்கு கமல் தரப்பில் இருந்து சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில், முஸ்லிம் தலைவர்களும் படு திருப்தியாக கைகளை குலுக்கிவிட்டு சென்றுள்ளனராம்.
இப்போது அந்த விவகாரம் சால்வ் பண்ணப்பட்ட நிலையில், தியேட்டர் அதிபர்களுடன் முழுமூச்சாக டீல் பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்கிறது கமல் வட்டாரம்.
நன்றி.விறுவிறுப்பு .காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக