பைல் படம் :ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு ஜவாஹிருல்லாஹ் வேட்பு மனு தாக்கல் செய்த போது.....
வரலாற்று சிறப்புமிக்க கீழக்கரையை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும் தமுமுகவின் உறுப்பினரில் ஒருவன் என்ற அடிப்படையிலும் இதனை நான்ஊர் மக்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். தேர்தலுக்கு மட்டும்தான் முந்தைய எம்.எல்.ஏக்கள் வந்திருப்பார்கள் பேரா.ஜவாஹிருல்லா மட்டும்தான் தேர்தல் முடிந்தும் மக்களை தேடி,தேடி வருகிறார்
.இந்த முறைதான் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA வை மிக எளிமையாக அனைவரும் சந்தித்து குறைகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது.குறை கூறுபவர்கள் மனசை தொட்டு சொல்ல வேண்டும்.
எனவே பேராசிரியர் ஜவாஹிருல்லாMLA பணியை ஊக்குவித்து மேலும் சமுக பணி செய்ய நாமும் துணையாக இருக்கவேண்டும். மேலும் ஆதாரத்துடன் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தொகுதிக்கு செய்த பணிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த ஆட்சியல் துவக்கப்பட்ட திட்டமானாலும் அது தீர்வுக்குரியதாக இருந்தால் அதை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளையும்மேற்கொள்கிறார்.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கீழக்கரையில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தவும்,அவற்றை உரமாக மறு சுழற்சிசெய்வதற்காகவும் பதினோரு ஏக்கர் இடம் கீழக்கரையை சேர்ந்த செல்வந்தர் ஒருவரால் அருகிலுள்ள கிராமமான தில்லையெந்தலில் தானமாக வழங்கப்பட்டது.ஆனால்அங்கு குப்பை கொட்டுவதற்கு அக்கிராமத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.சாதாரணமாக துவங்கிய இந்த எதிர்ப்புநாளடைவில் வன்முறை அளவுக்கு சென்றது.
போலீஸ்,கோர்ட்,வழக்கு என திசை மாறியது.கீழக்கரை மக்களின் நல்வாழ்வில் பொறாமை கொண்ட சிலரால் தூண்டப்பட்ட இந்த எதிர்புணர்வைசட்டத்தின் முன் எதிர்கொள்ள தயங்கினார்கள் அனைவரும்.இந்நிலையில் இது குறித்த அணைத்து அம்சங்களையும் முழுமையாக அறிந்துகீழக்கரை நகராட்சி,மாவட்ட ஆட்சியர்,காவல்துறை,தில்லை ஏந்தல் ஊராட்சி என அணைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து குப்பை கிடங்குசெயல்பாட்டுக்கு வர சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் எடுத்த முயற்சிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மாதிரியான ஒன்றாகும்.கடந்த ஆறு மாதங்களாக அங்கு குப்பை கொட்டப்பட்டு எக்ஸ்னோரா என்ற தொண்டு நிறுவனத்தாரால் மக்கும் தன்மை,மற்றும் மக்காத தன்மைகொண்ட குப்பைகள் பிரிக்கும் பனி நடைபெற்று வருகிறது.
கடற்கரை இன்று பளிச்சென இருப்பதாக செய்தி தாள்கள் சொல்கின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை எப்படிஇருந்தது என்றும்,தற்போது எவ்வாறு உள்ளது என்றும் நியாய உணர்வுள்ளவர்கள் அறிவார்கள்.
ஆனால் சிலரோ,சாதாரணமாக நகராட்சி செய்ய வேண்டிய வேலைகளையும் சட்டமன்ற உறுப்பினரே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
பேரூந்து நிலையத்தின் அங்கீகாரத்தை போக்குவரத்து துறையில் புதுப்பிக்கப்படாத அவல நிலையை கேள்விபட்டு அதற்குரிய வழிகாட்டுதலை நகராட்சிக்கு வழங்கினார்.
மின்சார பிரச்சினை குறித்தும் பெருமுயற்சி எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட தனி தாலுகா குறித்து அதிகமான முயற்சிகளை சட்டமன்ற உறுப்பினர்பேராசிரியர்ஜவாஹிருல்லாஎடுத்து வருகிறார்.வரும் பட்ஜட் கூட்டத்தொடர் வரை பொறுத்திருந்து பார்ப்போம்,அதன்பிறகு போராட்டம் தான் தீர்வென்றால்அதையும் செய்ய தயார் என பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கும் அளவு இந்த கோரிக்கையை கொள்கையாகவே கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கீழக்கரைக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அவர்கள் மிக குறுகிய காலத்திற்குள் செய்த பணிகளின் ஒரு பகுதியை ஆதரத்துடன் இணைத்துள்ளேன்.கீழே உள்ளே இணைப்பில் ....
.இவ்வாறு கீழை இர்பான் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக