#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

04 டிசம்பர், 2010

வரலாறும், முக்கியத்துவமும்

<span title=வரலாறும் முக்கியத்துவமும்" width="150" height="136">முஸ்லிம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்’ காணப்படு கின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘‘பைதுல் மால்’’ ஆகும்.
‘பைத்துல் மால்’ என்ற சொல் பிரயோகம் முதன்முதலில் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ‘ஸனஹ்’ என்ற இடத்தில் பைத்துல் மாலை நிறுவி பின்னர் அதை மதீனாவுக்குள் கொண்டு வந்தார்கள். அதன் பொறுப்பாளராக அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை நியமித் தார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் பைத்துல் மாலை உருவாக்குவதற்கான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்களது வாழ்விலிருந்தே பெற்றுக் கொண்டார்கள்.
பைத்துல் மால் என்கின்ற பிரயோகம் நபி (ஸல்) அவர்களால் நேரடியாகப் பய்னபடுத்தப்படாவிட்டாலும், கருத்து ரீதியாக அது அவர்களது காலத்தில் இருந்துள்ள தைக் காணலாம். ஸகாத்தை வசூலித்து விநியோகம் செய்தல், இஸ்லாமிய அரசுக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடிய முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து பெறப் பட்ட ‘ஜிஸ்யா’ என்ற வரியை வசூலித்து பொது நலனுக்காகப் பயன்படுத்துதல் போன்ற பணிகள் நபி (ஸல்) அவர்களால் மேற்கொள்ளப்பட்டன.
சேர்க்கப்படும் பொருட்கள் நபி (ஸல்) அவர்களது வீட்டில் வைக்கப்பட்டது. சில வேளைகளில் மஸ்ஜிதுந் நபவியை ஒட்டியதாக ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு வைக்கப்படும். பின்னர்அங்கிருந்து உரியவர்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் பைத்துல் மால் முக்கியத்துவம் பெறாமல் இருந்தமைக்கு
1. இஸ்லாமிய அரசு அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தமை
2. இஸ்லாமிய அரசுக்கு வரக்கூடிய சொத்துக்களை தேக்கிவைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படாமை ஆகிய கார ணங்களை இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் பைத்துல் மாலை உருவாக்கிய போதிலும் அவர்க ளது காலத்திலும் அது பொருட்கள் இன்றி வெறுமையாகவே காணப்பட்டது. ஏனெ னில் அவர்களும் கிடைக்கக்கூடிய பொருட்களை உடனே விநியோகித்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர் களது காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்தபோது பல்வேறு வகையான வரிகள் அரசாங்கத்திற்கு வர ஆரம்பித்தது. இவற்றை பைத்துல் மாலில் சேமிப்பதற் கான ஏற்பாடுகளை கலீபா மேற்கொண்ட துடன் ‘ஸாஹிபு பைத்தில் மால்’ என்ற பதவிப் பெயருடன் ஒருவரை பைத்துல் மாலுக்குப் பொறுப்பாக நியமித்தார்.
மேலும் உமர் (ரலி) அவர்களது காலத் தில் மத்திய பைத்துல் மால் மதீனாவில் இயங்கி வந்தது. அத்துடன் ஏனைய பிரதேசங்களில் அதன் கிளைகள் காணப்பட்டன. உமர் உஸ்மான் (ரலி) அவர்களது காலங்களில் மதீனா வில் பைத்துல் மாலின் பொறுப்பாளராக அப்துல் லாஹ் பின் அல்-&அர்கம் (ரலி) அவர்கள் இருந்து வந்தார்கள். அவர்கள் ஓய்வு பெற்றபோது அப் பொறுப்பு ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இவர்களது காலத்தில் கூஃபாவிலுள்ள பைத்துல் மாலுக்குப் பொறுப் பாளராக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இருந்து வந்தார்கள்.
நான்காம் கலீபா அலி (ரலி) அவர்களது காலத்திலும் பைத்துல்மால் முன்னைய கலீபாக்களின் காலத்தைப் போன்றே இயங்கி வந்தது.
குலஃபாஉர் ராஷிது£ன்களைத் தொடர்ந்து வந்த உமைய்யாக்களது ஆட்சிக்காலத்தில் சில மாற்றங்களுடன் பைத்துல் மால் சிறப்பாக இயங்கி வந்தது. குறிப்பாக உமைய்யா கலீபா உமர் பின் அப் துல் அஸீஸ் (ரஹ்) அவர்களது காலத்தில் பைத்துல் மால் மிகவும் சிறப்புற்று விளங்கியது. அவரது காலத்தில் பல பைத்துல்மால்கள் காணப்பட்டதாக இப்னு ஸஅத் என்ற அறிஞர் தனது தபகாத் என்ற நு£லில் குறிப்பிடுகின்றார்.
பின்னர் அப்பாஸியர்களது ஆட்சிக் காலத்தில் பைத்துல்மால் என்பது ஒரு தனி இலாகாவாகத் செயல்பட்டது. உமைய்யாக்களது காலத்தில் காணப் படாத பல வரிகள் அப்பாஸியர்களால் அறிவிக்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.
ஹிஜ்ரீ மூன்றாம் நு£ற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து அப்பாஸிய காலத்தில் இரண்டு வகையான பைத்துல்மால்கள் இருந்ததை அறிய முடிகின்றது. அவற்றில் ஒன்று கலீபாவின் நேரடிக் கண்காணிப்பில் செலவு செய்யப்பட்டது. மற்றையது ஒரு அமைச்சரால் கையாளப்படக் கூடியதாக காணப்பட்டது.
முஸ்லிம் ஸ்பெயினில் பைத்துல்மால் என்பது ஆரம்ப காலங்களை விட வேறுபட்ட நிலையில் காணப்பட்டது. அது பொதுக் கருவூலத்தை விட்டு வேறுபட்டு வெறும் வக்ஃப் சொத்துக்களுக்கு மட்டும் பொறுப்பானதாக இருந்து வந்தது. அங்கு பைத்துல் மாலின் நிர்வாகத்தை நீதிபதியே மேற்கொள்ளக் கூடியவராக இருந்தார். அதன் சொத்துக்கள் கொர டோவா (குர்துபா) என்ற பெரிய பள்ளி வாசலின் இமாம் தங்குவதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த அறையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது.
மேலும், அதிலுள்ள சொத்துக்கள் பைத்துல் மாலுக்கு பொறுப்பானவரால் தீர்மானிக்கப்படுவோ ருக்கு வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஏழைகள், பள்ளிவாசல்கள் பராமரிப்பு, மஸ்ஜிதுகளில் பணி யாற்றுவோருக்கான ஊதியம்,கல்வி நிறுவனங்களை உருவாக்கல், ஆசிரியர்களுக்கான சம்பளம் போன்றவற்றிற்கு செலவிடப்பட்டது. இந்நிலை ஹிஜ்ரி ஆறாம் நு£ற்றாண்டு வரை பின்பற்றப்பட்டு வந்தது.
அவ்வாறே உஸ்மானியர் ஆட்சியிலும் பைத்துல் மால் சிறப்பாக இயங்கி வந்துள்ளதை அறிய முடிகின் றது. பொதுவாக அவர்களது காலத்தில் அரசாங்கத் திற்கு வரும் சொத்துக்களும், மற்றும் சட்ட ரீதியாக பொதுக் கருவூலத்திற்கு வரும் சொத்துக்களுமே பைத்துல்மாலின் சொத்துக்களாகக் கொள்ளப் பட்டன.
ஆக, நபி (ஸல்) அவர்களது காலம் தொடக்கம் இஸ்லாமிய வரலாற்றில் பைத்துல் மால் என்பது மிக முக்கியமான ஒரு நிறுவனமாக இயங்கி வந்திருப்பதை அறிய முடிகின்றது.
இஸ்லாமிய வரலாற்றில் பைத்துல்மாலுக்கான வருமான வழிகளாகப் பின்வருவன காணப்பட்டன.
1. ஸகாத்
2. கனீமத் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு
3. நிலத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்படக் கூடிய தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவற்றில் ஐந்தில் ஒரு பங்கு
4. புதையல் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு
5. ஃபைஉ (யுத்தமில்லாமல் இறை நிராகரிப்பாளர் களிடமிருந்து எடுக்கப்படும் வரி)
கராஜ் (முஸ்லிம்களின் நிலங்களைப் பயன்படுத்து வதற்காக அறிவிக்கப்படும் வரி), ஜிஸ்யா (இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிமல்லாதோர் வசிப்பதற்காக அறிவிக்கப்படும் வரி), உஷ¨ர் (வியாபாரத்திற்காக அறவிக்கப்படும் வரி), முர்தத் (இஸ்லாத்தை விட்டு மதம் மாறியவன்) மரணிக் கும்போது விட்டுச் செல்லும் சொத்துக்கள், திம்மீக்கள் (இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தி வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள்) மரணிக்கும்போது அவர்களுக்கு வாரிசுகள் இல்லாவிட்டால் அவர்க ளின் சொத்துக்கள், கனீமத்தாகக் கிடைத்த விவசாய நிலங்கள் போன்றவை ‘பைஉ’ என்பதில் அடங்கும்.
6. அன்பளிப்புகள், நன்கொடைகள், பைத்துல் மாலுக்கு வஸிய்யத் செய்யப்பட்ட சொத்துக்கள்
7. நீதிபதிகள், பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகள்
8. நாட்டு மக்கள் மீது விதிக்கப்படும் வரிகள்
9. உரிமையாளர்கள் இல்லாத பொருட்கள்
10. வாரிசுதாரர்கள் யாரும் இல்லாமல் மரணிப்ப வரின் சொத்துக்கள்
11. அபராதத் தொகை
நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி, பொருளாதாரப் பிடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் இக்கால கட்டத்தில் பைத்துல்மாலின் தேவை மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடுகளில் இதன் தேவை மிக மிக அவசியமானதாகும்.
ஸகாத் ஒரு கூட்டுக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களது காலத்திலோ, குலஃபாஉர் ராஷிது£ன்கள் காலத்திலோ தனிப்பட்ட முறையில் ஸகாத் வழங்கப் பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அதை சரியான முறையில் வசூலித்து உரியவர்களுக்கு சேர்க்கும் போதுதான் ஸகாத் என்ற வார்த்தையின் மூலம் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான நோக்கங் களில் ஒன்றான வறுமையை ஒழிக்க முடியும். இதை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டுமென்றால் பைத்துல்மால் போன்ற ஒரு நிறுவனம் ஒவ்வொரு ஊருக்கும் அவசியப்படுகின்றது.
மனிதனுடைய பொருளாதாரத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. திடீரென அவனுக்கு ஏற்படும் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருளாதார வசதி இல்லாதபோது, அவன் வட்டிக் கடைகளை நாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றான். எனவே அவனை வட்டி என்ற வன்கொடுமையில் இருந்து விடுவிப்ப தற்கு பைத்துல் மால் போன்ற நிறுவனங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.
அது மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான நிதியுதவிகளை வழங்குதல், நோயாளிகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுதல், அநாதைக் குழந்தைகளைப் பராமரித்தல், அநியாயமாக சிறைகளில் வாடுவோருக்கு அவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், அவர்களது குடும்பங்களைப் பராமரித்தல், திருமண வயதையும் தாண்டி திருமணம் முடிக்க வசதியற்றிருக்கும் இளை ஞர் யுவதிகளுக்கு உதவுதல் போன்ற பல்வேறு தேவை களை நிறைவேற்றுவதற்கு இன்று கிராமங்கள் தோறும் பைத்துல்மால் போன்ற சமூக நிறுவனங்கள் உருவாக்கப்படுவது அவசியமாகும்.
நல்ல விஷயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருங்கள் என்ற அல்லாஹ்வின் கட்ட ளைக்கு அடிபணிந்து நமது பிரதேசங்களில் சமுதாயத் தின் நன்மையைக் கருத்தில் கொண்டு ‘பைத்துல் மாலை’ உருவாக்க முயற்சிப்போமாக!
தற்போதைய பைத்துல்மாலின் நடைமுறைகளையும், உண்மையில் பைத்துல்மாலுக்கான வழிகாட்டல் களையும், ஆலோசனைகளையும் அடுத்த இதழில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

- முபாரக் மதனி

கண்ணீர் தேசம்… காஷ்மீரின் வரலாறு

<span title=காஷ்மீர்" width="150" height="181">வெண்பனியால் சிரிக்கும் மலை முகடுக ளும், பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகளும், சிலிர்க்க வைக்கும் குளிரும், மனதைப் பறிக்கும் ஆப்பிள் தோட்டங்களும், கவலைப்படாமல் ஓடிக் கொண்டிருக்கும் இமய மலையின் நதிகளும் அழகிய காஷ்மீரின் அடையாளங்கள்.

இறைவனால் அன்பளிப்பு செய்யப்பட்ட மண் ணில், எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு காஷ்மீரியின் உள்ளத்திலும் இருக்கிறது. அழகான காஷ்மீரில் அமைதியில்லை. மகிழ்ச்சியில்லை. இப்படி நிறைய ‘இல்லை’கள்!

எங்களுக்குத் தேவை ஒன்றுபட்ட ஒரே காஷ்மீர்! எங்களை நாங்களே ஆளும் உரிமை! இதுதான் பெரும்பாலான காஷ்மீரிகளின் மனநிலை என்பது கருத்துக் கணிப்புகள் கூறும் உண்மைகளாகும்.

காஷ்மீரின் உண்மையான வரலாறு என்ன? அது தமிழ்நாடு உ.பி., மஹாராஷ்டிரா, வங்காளம் போன்று இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதியா? அல்லது இந்தியா வுடன் இணைக்கப்பட்ட பகுதியா? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கான விடைகள் பகிரங்கமாக உண்மை யின் வெளிச்சத்தில் நடுநிலையோடு விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர் களின் விருப்பமாகும்.

முந்தைய வரலாறு என்ன?

காஷ்மீரின் தேசியவாதிகள் இது பற்றிக் கூறும் போது, எங்கள் மீதான ஆக்கிரமிப்பு முகலாயப் பேரர சர் அக்பரின் ஆட்சியிலிருந்து தொடங்குகிறது எனக் கூறுகிறார்கள்.

காஷ்மீரின் அழகில் மயங்கிப்போன அக்பர் 1586&ல் தனது முகலாய பேரரசின் கட்டுப்பாட்டில் காஷ்மீரை இணைத்தார். அதிலிருந்துதான் எங்களின் மேலான ஆக்கிரமிப்பு தொடங்குகிறது என்பது அவர்களின் கருத்து!

முகலாய பேரரசு வீழ்ச்சியடைந்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் கி.பி. 1757&ல் காஷ்மீர் ஆப்கானிஸ்தா னின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அஹ்மது ஷா துரானி என்பவர் காஷ்மீரின் அரசரானார்.

பின்னர் 18&ஆம் நு£ற்றாண்டில் லாகூரை மையமாகக் கொண்டு உருவாகிய சீக்கிய அரசோடு காஷ்மீர் இணைக்கப்பட்டது. 1819&ல் ரஞ்சித் சிங் என்ற சீக்கிய மன்னர்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தவர்.

இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திய ஆங்கிலேயர்கள் வட இந்தியாவை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பினர். அப்போது ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து சீக்கியப் படைகள் போராடின. அதில் தோல்வியடைந்ததால் அத்தோடு சீக்கிய பேரரசு முடி வுக்கு வந்தது. அவர்கள் ஆட்சிசெய்த இன்றைய பாகிஸ் தானின் பெரும்பகுதிகளும், காஷ்மீரும் ஆங்கிலேயர்கள் வசமானது.

விற்பனை தேசம்?

பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை காஷ் மீரை இந்து மன்னர்கள், பௌத்த மன்னர்கள், சீக்கிய மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள் என பல மதத்தவரும் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் காஷ் மீரை தனித்துவத்தோடும், சுய சார்போடும்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தி யாவை ஆண்ட மன்னர்களின் கீழ் காஷ்மீர் இணைக் கப்பட்ட வெவ்வேறு காலகட்டங்களில் கூட, காஷ்மீர் அதன் தனித்துவமும், சுய சார்பும் பாதிக்கப்படா மலேயே ஆளப்பட்டது என காஷ்மீர் தேசியவாதிகள் கூறுகிறார்கள்.

சீக்கியர்களின் அமைச்சரவையில், அமைச்சராக இருந்த குலாப் சிங் என்பவரையே ஆங்கிலேயர்கள் ஜம்மு & காஷ்மீரின் ஆளுநராக நியமித்தனர். இப்படித் தான் பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் காஷ்மீர் இணைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு நடந்ததுதான் எதிர்பாராத திருப்பம்! ஆங்கிலேயர்களிடம் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார் ஆளுநர் குலாப் சிங். அந்த அடிமைத்தனம் ஆங்கிலேயர்களை மிகவும் கவர்ந்தது! அதன் விளைவு காஷ்மீர் விற்பனைக்கு வந்தது!

ஆளுநர் குலாப் சிங்கிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் மார்ச் 15, 1894&ல் ஓர் உடன்படிக்கை ஏற்பட் டது. அதன்படி ஆளுநர் குலாப் சிங் ரூ. 75 லட்சத்துக்கு காஷ்மீரை ஆங்கிலேயர்களிடமிருந்து விலைக்கு வாங்கி னார். அதன் பிறகு தன்னை காஷ்மீரின் அரசராக தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.

டோக்ரா ஆட்சி

முதல் இந்திய விடுதலைப் போர் நடைபெற்ற 1857&ல் காஷ்மீரை ஆண்ட குலாப் சிங் இயற்கை மரண மடைந்தார். அவரது மகன் ரன்பீர் சிங் 1857 முதல் 1885 வரையும், அவரது மகன் பிரதாப் சிங் 1925 வரை யும் காஷ்மீரை ஆண்டனர். தாத்தா, மகன், பேரனை தொடர்ந்து கொள்ளுப்பேரன் ஹரி சிங் 1925லிருந்து தனது சர்வாதிகார ஆட்சியைத் தொடங்கினார். இவரது ஆட்சி 1948 வரை நீடித்தது. இதை ‘டோக்ரா’ பரம்பரை யின் ஆட்சி என காஷ்மீர் வரலாறு கூறுகிறது.

80 சதவீதம் முஸ்லிம்களும், சீக்கியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மீதி 20 சதவீதம் என மக்கள் தொகை விகிதாச்சாரத்துடன் இருந்து காஷ்மீரை ஆண்ட டோக்ராமன்னர்கள் கொடுங்கோலர்களாகவே ஆட்சி புரிந்துள்ளனர். 1931&ல் நடைபெற்ற ஒரு மக்கள் புரட்சி, மன்னர் ஹரி சிங்கின் மீது எழுந்த வெறுப்பின் விளைவாகும். அதனை மன்னர் ஹரி சிங் கடுமையாக ஒடுக்கினாலும், அந்த அடக்குமுறைகள்தான் காஷ்மீரில் ஜனநாயக காற்று வீசுவதற்கு சன்னலை திறந்துவிட்டது.

வந்தது காஷ்மீர் சிங்கம்

காஷ்மீர் மக்களின் கிளர்ச்சியை முன்னெடுப்பதற்கு ஒரு தலைமை தேவைப்பட்டது. இந்தியாவில் காந்திய டிகளின் தலைமையில் காங்கிரஸ், சுதந்திரப் போராட் டத்தை வழி நடத்திக் கொண்டிருந்தது. அதன் ஜனநாயக தாக்கம் காஷ்மீரில் எதிரொலித்தது.

இங்கு ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி. அங்கு மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சி. எனவே எதிரிகள் வேறாக இருந்தாலும் பிரச்சினை ஒன்றுதான்.

1932&ல் “அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்டது. திராவிட இயக்க தலைவர்களால் “காஷ்மீர் சிங்கம்” என்று வர்ணிக்கப் பட்ட ஷேக் அப்துல்லாஹ்தான் அதன் நிறுவனர். ஆறாண்டு காலம் மக்களைத் திரட்டிய இவ்வியக்கம், அரசியல் முதிர்ச்சியின்வெளிப்பாடாக, 1939&ல் ‘தேசிய மாநாட்டு கட்சி’ என பரிணாமம் அடைந்ததும், இன்று வரை காஷ்மீர் அரசியலில் வலுவாக இருப்பதும் பிந்தைய வரலாறுகளாகும்.

<span title=காஷ்மீர்" width="150" height="112">மக்களின் எழுச்சியை கண்டு பத றிய மன்னர் ஹரி சிங், தனது சர்வாதிகார நட வடிக்கைகளிலிருந்து சற்று இறங்கி வந்தார். 1934&ல் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு சட்டச பையை அமைத்தார். 1939&ல் நீதித்துறையும் உரு வாக் கப்பட்டது. ஆயினும் இவற்றையெல்லாம் தாண்டி, இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் ஹரி சிங்! இது தான் அவர் ஒப்புக் கொண்ட குறைந்தபட்ச ஜனநாயகம்.

இக்கால கட்டத்தில்தான் ஒன்றுபட்ட பழைய பிரிட்டீஷ் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தீவிரத்தை எட்டிக் கொண்டிருந்தது. காந்தி, ஜின்னா, நேதாஜி, அம்பேத்கர் என இந்திய அரசியல் நான்கு மையங்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

இந்திய & பாகிஸ்தான் பிரிவினை குறித்து காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தன.

காஷ்மீர் & இந்தியா & பாகிஸ்தான்

சிக்கல்உருவான பின்னணி

காங்கிரஸில் செயல்பட்ட இந்துத்துவ தீவிரப் போக்கு கொண்டவர்களாலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற பாஸிச அமைப்புகளின் முஸ்லிம் விரோதப் போக்குகளாலும், ஜின்னாவின் பிடிவாதமான அரசி யலாலும் இந்திய துணைக் கண்டம் பிளவுபட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்விளைவாக தங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடுகளுக்கு புதிய ஆட்சியாளர்கள் விடுதலை அளித்தனர்.

இந்தியாவுக்கு விடுதலை அளிக்க முன் வந்தபோது, பாகிஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உருவாவது தவிர்க்க முடியாது என ஆங்கிலேயர்கள் கருதினர். அன்றைய பதட்டமானநிலையில், காந்தியின் விருப்பத்திற்கு எதிராக இந்திய துணைக் கண்டம் பிரிக்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14 அன்று, பாகிஸ்தான் என்ற ஒருபுதிய நாட்டை உருவாக்கி அதற்கு சுதந்திரமளித்துவிட்டு, அடுத்த நாள் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்டது.

நேரு, ஜின்னா, ராஜாஜி, வல்லபாய் படேல் போன்றவர்களின் அரசியல் சுய நலன்களுக்கு முன்னால் காந்திஜியின்¢சமாதானம் தோல்வி யடைந்தது. சகோதரத்துவமும், மனித நேயமும், மனித உரிமைகளும் எல்லைக் கோடுகளில் காவு கொடுக்கப்பட்டது.

பிளவுபட்ட இரு நாடுகளும் அரசியல் பகையை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையில் தனித்துவத்தோடு இருந்த காஷ்மீரை தங்களோடு இணைக்க வேண்டும் என்ப தில், இருநாடுகளும் ஒருவருக்கொருவர் தெரிந்தே திட்டமிட்டுக் கொண்டிருந்தன. அப்போதே உருவான அரசியல் சிக்கல்தான் இன்றைய காஷ்மீர்.

பாகிஸ்தானின் வஞ்சகம்! இந்தியாவின் தந்திரம்!

காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், பூஞ்ச், கில்கிட், பல்கிஸ்தான் என ஆறு பகுதிகளை கொண்டதுதான் ஒன்றுபட்ட காஷ்மீர்!

1947&ல் இந்தியா & பாகிஸ்தான் பிரிவினையின் போது நாங்கள் யார் பக்கமும் இணைய மாட்டோம். தனித்தே இருப்போம் என அறிவித்தார் மன்னர் ஹரி சிங்.

80சதவீதம் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் காஷ்மீரின் அரசராக இருந்த ஹரி சிங்கிற்கு பாகிஸ்தான் மீது பயமும், இந்தியாவின் மீது காதலும் இருந்தது.

அந்த நேரத்தில் ஒன்றுபட்ட காஷ்மீரின் ஒரு பகுதியான பூஞ்ச் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின்எல்லைக்கருகே இருந்தது. அங்கு மன்னர் ஹரி சிங்கிற்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது.

இதனை அடக்க இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரி சிங். இந்தியப் படைகள் காஷ்மீருக்கு வந்தால், அது பாகிஸ்தானுக்கு ஆபத்து என பாகிஸ் தான் கருதியது. இதுவே ஒரு போருக்கு வழி வகுத்தது.

இந்தியாவின் உதவி

சுதந்திரம் பெற்று இரண்டுமாதங்கள் ஆகவில்லை. 1947, அக்டோபர் 22 அன்று ஆப்கானிஸ்தானின் முரட்டு மனிதர்களான பட்டான்களின் உதவியை பூஞ்ச் பகுதி கிளர்ச்சியாளர்கள் நாடினர். இதுதான் சமயம் என பாகிஸ்தானின் உளவுத்துறை பட்டான்களுக்கு உதவிகளை வழங்கியது.

பெரும் ஆயுதங்களுடன் பூஞ்ச் பகுதிக்குள் நுழைந்த பட்டானியர்கள் உக்கிரமாக போரிட்டனர். இரண்டே நாளில் வெகு வேகமாக முன்னேறிய பட்டான்கள் ஸ்ரீநகர் வரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எந்த நேரமும் ஸ்ரீநகரை அவர்கள் கைப்பற்ற லாம் என்ற நிலையில், மன்னர் ஹரி சிங் நடுநடுங்கினார்!

இந்தியாவின் உதவியை அவசரமாக வேண்டினார். அப்போது இந்தியாவுக்கு பிரதமராக நேரு இருந்தாலும், கவர்னர் ஜெனரலாக மௌன்ட்பேட்டன் பிரபுதான் இருந்தார்.

இந்தியா ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டியது. காரணம் காஷ்மீர் அப்போது, இந்தியாவுக்கு அண்டை நாடு. அண்டை நாட்டுக்குள் ராணுவம் நுழைந்தால் அது சர்வதேச பிரச்சினையாகிவிடுமே என யோசித்தது.
மௌன்ட் பேட்டன் பிரபு தலைமையில் 25.10.1947&ல் இந்திய பாதுகாப்பு சபையின் கூட்டம் கூடியது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் வேண்டு கோள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதாக சம்மதித்தால் தான் இந்திய ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இணைந்தது காஷ்மீர்

காஷ்மீரிகளின் கருத்துக்களை கேட்பதற்கு அவகா சம் இல்லை. தலைநகர் ஸ்ரீநகருக்கு 35 கிலோ மீட்டர் து£ரத்தில் பட்டானியர்கள் வந்து விட்டார்கள்.

பதவியும், உயிரும் முக்கியம் என கருதிய மன்னர் ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவோடு தற்காலிகமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் 26.10.1947ல் சில நிபந்தனைக ளோடு கையெழுத்திட்டார். அடுத்த நாள் 27.10.1947ல் காஷ்மீர் “பிரிந்து போகும் உரிமையுடன்” கூடிய இந்தி யாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 28.10.1947ல் இந்திய ராணுவம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இறங்கியது. காஷ்மீர் வரலாற்றில் புதிய சிக்கல்கள் தோன்றின.
ஒன்றுபட்ட காஷ்மீரில் நுழைந்த பட்டான்கள், இந்தி யப் படைகளால் விரட்டியடிக்கப்பட்டனர். ஒழுக்கமற்ற பட்டானியர்களின் கொடுமைகளை சகிக்காத காஷ் மீரிகள் பட்டானியர்களுக்கு எதிராகத் திரும்பியது இந்திய ராணுவத்திற்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தது.

இந்தியப் படைகளை எதிர்கொள்ள, பட்டானியர்க ளுக்கு துணையாக பாகிஸ்தான் ராணுவமும் புறப்பட உலகம் அதிர்ந்தது. 1948 மே மாதம் இந்தியா, பாகிஸ் தான் இடையே முதல் போர் நடைபெற்றது. 1949 ஜன வரி 1&ல் ஐக்கிய நாட்டு சபை தலையிட்டு சமாதானம் செய்து வைக்கப்பட்டது.

காஷ்மீரில் பிரிவினை

ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. கில் கிட், பூஞ்ச், பல்ஸிஸ்தான், முசாபராபாத், பள்ளத் தாக் கின் ஒரு பகுதி அடங்கியவை ஆசாத் காஷ்மீர் என்றும், எஞ்சிய பள்ளத்தாக்குப் பகுதிகள், ஜம்மு, லடாக் உள் ளிட்ட பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டு காஷ்மீர் என்றும் பிரிக்கப்பட்டது. இரண்டுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி ஐ.நா. மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஆசாத் காஷ்மீருக்கு முசாபராபாத் தலைநகரானது. இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீருக்கு ஸ்ரீநகர் தலைநகரானது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ஆசாத் காஷ்மீரின் ஒருபகுதியை சீனாவுக்கு விட்டுக் கொடுத்தது பாகிஸ்தான்.

ஒன்றுபட்ட காஷ்மீர் இப்போது இந்திய கட்டுப் பாட்டு காஷ்மீர் (வீஷீளீ), பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ் மீர் (றிளிரி), சீன கட்டுப்பாட்டு காஷ்மீர் (சிளிரி) என பிரிந்து கிடப்பதாக காஷ்மீரிகள் கவலைப்படுகிறார்கள். மூன்று நாடுகளும் வெளியேறி எங்கள் காஷ்மீரைநாங்களே ஆளவேண்டும் என்பதுதான் ஜம்மு- காஷ்மீர் முன்னணியின் விடுதலை முழக்கமானது.


எம். தமீமுன் அன்சாரி




நன்றி.சமுதாய ஒற்றுமை

02 டிசம்பர், 2010

வீராணம் ஏரிக்கு ஆபத்து



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

காட்டுமன்னார்கோவில் :வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளாறு மற்றும் வெள்ளியங்கால் ஓடை வழியாக, அதிக அளவில் தண்ணீர் திறக்க முடியாமல் பொதுப்பணித்துறையினர் தவித்து வருகின்றனர்.கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் 15 ஆயிரம் கன அடி நீர் பெருக்கெடுத்து வந்ததில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை மற்றும் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு வழியாக, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. வெள்ளியங்கால் ஓடை தண்ணீரோடு, மனவாய்க்கால் தண்ணீரும் சேர்ந்து பழைய கொள்ளிடம் வழியாக, 15 ஆயிரம் கன அடி நீர் சென்றதால் கொள்ளிடக்கரையை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.


இதனால் வெள்ளியங்கால் ஓடை வழியாக, தண்ணீர் வெளியேற்றுவது இரண்டு நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. வீராணத்தில் இருந்து பாழ்வாய்க்கால் வழியாக, வெள்ளாற்றில் 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால், வீராணத்திற்கு நீர் வரத்து அதிகரித்தது. அரியலூர் மாவட்டம் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, வெண்ணங்குழி ஓடை, பாப்பாக்குடி ஓடை வழியாக நேற்று காலை முதல் வீராணம் ஏரிக்கு 8,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளாற்றில் 86 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் வெள்ளாற்று வழியாக, வீராணம் தண்ணீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு முன் மூடப்பட்ட வெள்ளியங்கால் ஓடை மீண்டும் திறக்கப்பட்டு 7,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வாய்க்காலில் மனவாய்க்கால் 10 ஆயிரம் கன அடி, மழை நீர் 3,000 கன அடி என மொத்தம் 20 ஆயிரம் கன அடி வெள்ளியங்கால் ஓடை வழியாக, பழைய கொள்ளிடம் ஆற்றில் செல்வதால் கொள்ளிடக்கரை கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளியங்கால் வழியாக கூடுதல் நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் வீராணம் ஏரிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்ற என்ன செய்வதென தெரியாமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

நன்றி.தினமலர்

தும்மலின் போது….

நபி (ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (‘யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக’ என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘இவர் (தும்மியவுடன்) ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 6221 அனஸ் (ரலி).

பிறரைப் புகழ்ந்து பேசுதல்.

ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்றார்கள்.
புஹாரி : 2662 அபூபக்ரா (ரலி).

நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருப்பதையும் அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, ‘நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கி விட்டீர்கள் – அல்லது துண்டித்து விட்டீர்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 2663 அபூ மூஸா (ரலி). நன்றி.இஸ்லாம்குரல்

முதியவரை முற்படுத்துதல்.

‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 246 இப்னு உமர் (ரலி).

நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.)

புஹாரி : 3567 ஆயிஷா (ரலி).

நன்றி.இஸ்லாம்குரல்

வீரமும் கோபமும்


ஹதீஸ் 45. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: பலசாலி என்பவன் (எதிரியை) கீழே வீழ்த்துபவன் அல்லன். மாறாக கோபத்தின்பொழுது யார் தன்னைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் தான் பலசாலி! நூல்: புகாரி, முஸ்லிம்

அரபுகளிடத்தில் அஸ் ஸுரஆ என்பதன் அசல் பொருள், மக்களை அதிகமாக கீழே வீழ்த்துபவன் என்பதாகும்.

ஹதீஸ் 46.
ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நான் நபி(ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது இரு மனிதர்கள் பரஸ்பரம் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டது. அவருடைய நரம்புகள் புடைத்து விட்டன. அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் ஒரு வார்த்தையை அறிவேன். அதை அவர் சொன்னரெனில்அவரது கோபம் அகன்றுவிடும். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அவர் சொன்னால் இவரது கோபம் போய்விடும்! அப்பொழுது மக்கள் அந்த மனிதரை நோக்கிச் சொன்னார்கள்: விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் நீ அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு நபியவர்கள் சொல்கிறார்கள்’ நூல்: புகாரி, முஸ்லிம்

தெளிவுரை

கோபம் கொண்ட மனிதனின் உள்ளத்தில் ஷைத்தான் தீ மூட்டிச் சூடேற்றுகிறான்! அதனால் கோபம் கொண்டவனின் முகம் சிவந்து விடுகிறது. நரம்பு – நாளங்களெல்லாம் புடைத்துப் பருத்து விடுகின்றன! அப்பொழுது நிதானமிழந்து போகிறான்! என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பது கூட அவனுக்குத் தெரிவதில்லை!

இதனால்தான் ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை பகருங்கள் என்றபொழுது நபி(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். அவர் மீண்டும் எனக்கு அறிவுரை பகருங்கள் என்றார். அதற்கும் நபியவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். மூன்றாவது தடவையும் அந்த மனிதர் எனக்கு அறிவுரை பகருங்கள் என்றபொழுதும் நபிகளார்(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றே சொன்னார்கள்! (நூல்: புகாரி)

சண்டை – தகராறு என்று வரும்பொழுது மக்களை கீழே வீழ்த்தி விடுபவன் வீரன் அல்லன் என்று இங்கே விளக்கப்படுகிறது. ஆனால் வீரன் – பலசாலி என்று மக்கள் புகழ்வதோ அந்த மனிதனைத்தான்! உண்மையில் வீரன் யாரென்றால், கோபத்தின்பொழுது தன் மனத்துடன் போராடி கோபத்தை அடக்குகிறானே அவன்தான்! உண்மையில் அதுதான் வீரச்செயல்! அதுதான் பாரதூரமான – கஷ்டமான காரியம்! எல்லோராலும் அது முடியாது. மனத்தை வென்றடக்கி அதன் தீய தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளானே அவனால்தான் அது முடியும்! அப்படிப்பட்ட மனிதனைத் தான் வீரன் என்று புகழவேண்டும் என நபியவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்!

இந்த வகையில் கோபத்தை அடக்கவும் மனத்தைக் கட்டுப்படுத்தவும் இந்நபிமொழி ஆர்வமூட்டுகிறது. மனத்தைக் கட்டுப்படுத்தாமல் அதன் தீய தூண்டுதல்களின் பின்னால் சென்றுகொண்டிருந்தால் பேரிழப்புதான் ஏற்படும். பிற்பாடு மனம் வருந்தும் நிலைதான் வரும்!

இதனை அன்றாடம் நாம் காணலாம். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபப்படுவார்கள். மிகச்சாதாரண விஷயத்திலும் ஆத்திரம் கொண்டு அவசரப்பட்டு மனைவியைக்கூட மணவிலக்கு சொல்லி விடுகிறார்கள்! அது மணவிலக்கின் கடைசித் தவணையாக இருக்கும்! அதனால் கணவனும் மனைவியும் நிரந்தரமாகப் பிரிய வேண்டியதாகி விடுகிறது! பிறகு ஐயோ! அறியாத்தனமாக மணவிலக்கு செய்து விட்டேனே என்று புலம்பிக்கொண்டு திரிகிறார்கள்!

இன்னும் சிலர் கோபத்தின் வேகத்தை தன் மகன் மீது அல்லது மனைவி மீது காட்டுவார்கள். கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்கி விடுவார்கள்! அதனால் சிலபொழுது முரட்டுத்தனமான அந்த அடிகளைத் தாங்கமுடியாமல் அவர்கள் இறந்தே போய்விடுகிறர்கள்! வேறு சிலர் உணர்ச்சி வசப்பட்டு தமது உடமைகளையே அழித்து விடுகிறார்கள்! ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டம் என்று சொல்வார்களே அதுபோல இவ்வாறு பற்பல நிகழ்ச்சிகளை நாம் காண்கிறோம். அல்லது கேள்விப்படுகிறோம்!

இதனால்தான் கோபம் உள்ள நேரத்தில் தீர்ப்பு வழங்கக்கூடாது என்று நீதிபதியைக்கூட தடுத்துள்ளார்கள் நீதி நபி(ஸல்) அவர்கள். (நூல்: புகாரி) ஏனெனில் பிரச்னை குறித்து ஆழமாகச் சிந்திக்க விடாமல் கோபம் அவரைத் தடுத்து விடுகிறது! அப்பிரச்னையில் ஷரீஅத் அளிக்கும் தீர்ப்பு என்ன என்று ஒப்பு நோக்கி ஆராய்வதற்கு ஆத்திரம் அவரை விடுவதில்லை! எனவே கோபத்துடன் தீர்ப்பு அளித்து அது அசத்தியத்தின்படி அமைந்து அதனால் அவர் அழிவுக்குள்ளாகி விடலாம்!

இத்தகைய கோபத்தை அடக்கிட வேண்டும். அதற்கான வழியைத்தான் இங்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள். அதுதான்: அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது! ஆம்! முன்னர் சொன்னது போன்று – கோபத்தின் பொழுது மனத்தில் தீயை மூட்டுவது ஷைத்தான்தான்! எனவே அவனது பகைமையை நினைவில் கொண்டுவந்து – அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினால் மனம் அமைதிப்படும் என்பது திண்ணம்!

அறிவிப்பாளர் அறிமுகம் – ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அவர்கள்

ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அவர்கள் இறைமார்க்கப் பற்றும் பயபக்தியும் மிக்கவராக இருந்தார்கள். தமது குலத்தாரிடையே உயர் அந்தஸ்து அவர்களுக்கு இருந்தது. பத்று யுத்தத்தில் கலந்துகொண்ட அன்னார் கொலை செய்யப்பட்டார்கள். அப்பொழுது அவர்களது வயது 93 ஆகும். அன்னாரிடம் இருந்து 15 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!


நன்றி.இஸ்லாம்குரல்

குழப்பங்கள்.

''எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கிற பல விஷயங்களைக் காண்பீர்கள்'' என்று (அன்சாரிகளிடம்) நபி(ஸல்) அவர்கள் கூறியது.

'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும்! ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஜுனாதா இப்னு அபீ உமய்யா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அன்னாரிடம் (நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை எங்களுக்கு) அறிவியுங்கள்; அதனால் அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிப்பான்'' என்று சொன்னோம். அதற்கு உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்'' என்றார்கள். 'நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

குழப்பங்கள் தோன்றுதல்.

அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்'' என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்: யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.

ஸுபைர் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், 'நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும்வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்'' என்று கூறிவிட்டு, 'இதை நான் உங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்றார்கள்.

நம்மை எதிர்த்து ஆயதம் ஏந்துபவர்.

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும், அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.

'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குழப்பம் ஏற்பட்டுள்ளபோது கிராமத்திற்குக் குடிபெயர்தல்.

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார் : நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் 'இப்னுல் அக்வஃ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்'' என்று சொன்னேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் (மதீனாவிலிருந்து) வெளியேறி 'ரபதா' என்னுமிடத்திற்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்தார்கள். அப்பெண் மூலம் அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. அங்கேயே வசித்துவந்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள், தாம் இறப்பதற்குச் சில நாள்கள் முன்புதான் (அங்கிருந்து திரும்பி வந்து) மதீனாவில் தங்கினார்கள்.

அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்கு வேதனை வழங்கும்போது...

ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...?

ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்: நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப் பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது.

நெருப்பு கிளம்புவது.

ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாதவரை மறுமை நாள் வராது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகமாக 'தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.

இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாதவரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகி, காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமைநாள் வராது. மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமைநாள் வராது. அப்போது செல்வன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாதவரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, 'அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை மறுமை நாள் வராது. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.

இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நன்றி. முக்தசர் சஹிஹுல் புகாரி

எங்கே நிம்மதி? அது இங்கே!



எங்கே நிம்மதி? அது இங்கே!

எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அங்கே எனக்கோர் இடம் வேண்டும்....
என்றான் முந்தைய நாட்களில் ஒரு கவிஞன்.

எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அதை நான் தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லை.
இது இந்நாளில் வாழும் ஒரு கவிஞனின் வார்த்தை.

கடலின் ஆழத்திற்கு நீந்திச் சென்று, அங்குள்ளவற்றை படம் எடுத்து பாமரனுக்கும் காட்டு
அறி யலாளர்களாலும் எங்கே நிம்மதி என்பதை சொல்ல முடியவில்லை. வானத்தின் உயரே செவ்வாய்க் கிர கத்து காட்சிகளை பூமியில் இருந்தே கண்டு வியக்கும் விஞ் ஞானிகளாலும் எங்கே நிம்மதி என்று கண்டுபிடித்துச் சொல்ல இயலவில்லை.

வெண்ணையைக் கையிலே வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைந்தானாம் - முட்டாள் களைப் பார்த்து தமிழில் கூறும் பழமொழி இது. இந்தப் பழமொழியை உண் மைப்படுத்துவது போலவே
இன்றைய மனிதனின் நிலை உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில் நிம்மதியைத் தேடி அலை கிறார்கள். பல்வேறு வழிமுறை களை தேர்வு செய்கிறார்கள். விளைவு ....

புகைப்பழக்கம்
""சற்றே இளைப்பாறுங்கள் சார்மினார் புகையுங்கள்'' என்றும், ""ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி - ஒரே ஒரு சிசர்ஸ் சிகரெட்'' என் றும் விளம்பரம் செய்யப் படுவதைப் பார்த்து விட்டு, புகைப் பிடித்தலின் மூலம் நிம்மதியை தேடுபவர்கள் ஏராளம். புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுவோம் என்று கூறிக் கொண்டே, நுரையீரலையும், கல்லீ ரலையும் புண்ணாக்கிக் கொண்டு - இருமலோடும், காச நோயோடும் போராடிக் கொண்டு இருக்கிற நிம்மதியையும் தொலைத்தவர்ளே ஏராளம்.

போதை
மது, கஞ்சா, அபின் போன்றவை மூலம் போதையில் மிதக்கலாம். அதன் மூலம் தன்னிலை மறக்கலாம். தற்காலிகமாவது சற்றே நிம்மதி யைப் பெறலாம் என்று எண்ணி மயங்கியவர்கள் ஏராளம். முடிவு நிம்மதியை மட்டும் அல்லாமல், மானத்தையும், வருமானத்தையும் இழந்து வாழ்வில் அல்லல் படுபவர்களே ஏராளம்.

உழைப்பு
உழைப்பே உயர்வு தரும் என்று வேலையில் முழுமையாக கவனம் செலுத்துபவர்களுக்காகவது நிம்மதி கிடைத்ததா? என்றால் இல்லை. முதலாளி தரும் ஊதி யத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அங்க லாய்த்துக் கொண்டு நிம்மதியைத் தேடும் தொழிலாளர்கள்
தொழிலாளிகள் பிரச்சனை பெரும் பிரச்சனை என்று கூறிக் கொண்டே முதலாளிகளும் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். நிம்மதியைத் தேடி ஓடுகிறார்கள்.

வீட்டில்...
தொழில் நிறுவனங்களில் நிம் மதி இல்லை. வீட்டுக்குச் செல் வோம், மனைவி மக்களோடு சற்று நேரம் நிம்மதியாக இருப் போம் என்று வீட்டுக்கு வந்தால், வாடகை பாக்கி, கரண்ட் பில், ரேசன் பிரச் சனை, பள்ளிக்கூடம் பீஸ் கட்ட வேண்டும், மளிகைக் கடையில் பாக்கி என்று பல்வேறு பிரச்சனை கள் தலைவிரித்து ஆடிக் கொண்டு இருக்கின்றன. வீடு பலருக்கும் சுடுகாடு போல தோற்றம் அளிக் கிறது.

கடை வீதி
அலுவலகத்திலும் நிம்மதி இல்லை, வீட்டிலும் நிம்மதி இல்லை, சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வருவோம். அதன் மூலம் கொஞ்சம் நிம்மதி கிடைக் கும் என்று கடை வீதிகளில் நடந் தால், அவசரம் அவசரமாக செல் லும் மக்கள் கூட்டம், சப்தம், கூச் சல், நெரிசல், சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறம், போக்குவரத்து இடையூறு மறுபுறம்... சில நேரங்களில் சாவு கிராக்கி வீட்டில் சொல்லிவிட்டு வந்து விட்டாயா? என்று சபிக்கும் ஆட்டோ, பஸ் டிரைவர்களின் சாபம்... எங்குமே நிம்மதியில்லை என்று புலம்ப வைக்கிறது.

கடற்கரை
கடை வீதிகளைத் தாண்டி கடற் கரைக்கும் செல்வோம், நிம்மதியாக கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே காற்றை அனுபவிக்க லாம் என்று முடிவெடுத்து, கற்கரை மணலில் காலை வைத்தால் அங்கும் சுனாமி பீதி, சுண்டல்காரன் தொல்லை, காதலர் சேட்டை, காமுகர் வேட்டை என்றும் கடல் உள்வாங்கி விடுமோ என்ற பீதியும் மனதை அலைபாய வைக்கிறது. நிம்மதியை கெடுக்கிறது.

கிராமங்கள்
நகர்ப்புற வாழ்வு நரக வாழ்வாக உள்ளது. எனவே நான் கிராமத்திற்கு சென்று "செட்டில்' ஆகிவிடப் போகிறேன். கிராமப்புற வாழ்வில் மட்டுமே நிம்மதி கிடைக்கும் என்ற முடிவெடுத்து கிராமத்தில் குடியேறி னால் அங்கும் மதக் கலவரம், சாதிக் கலவரம், அரிவாள் கத்தி, கம்பு என்று தூக்கிக் கொண்டு அலை கிறார்கள். பயங்கர மான வாழ்க் கையாக கிராம வாழ்க்கை ஆகிவிட் டது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

விண்ணில்
நகர்ப்புறத்திலும் நிம்மதியாக நடக்க முடியவில்லை, கிராமப்புறத் திலும் பயமற்ற வாழ்வு இல்லை, நிம்மதி என்பது வானத்திலாவது கிடைக்குமா என்று பார்த்தால் - அங்கும் விண்கலம், சேட்டிலைட் தொந்தரவு தாங்க முடியவில்லை. அவனவன் அணுகுண்டு வெடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் நிலை. ஓசோன் என்னும் வளி மண்டலத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று கூப்பாடு வேறு.

வலியவன் - எளியவன்
இருவேளை உணவு உருப்படி கிடைக்காத ஏழைகள், வசதி உள்ளவன் மாட மாளிகையில் குளிர்சாதன அறையில் நிம்மதியாக இருக்கிறான். நமக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறான். பண வசதி படைத்தவனோ, குளிர் சாதன அறையில் பட்டு மெத்தை யில் படுத்தும் கூட மாத்திரை இல்லாமல் வாழ முடியவில்லையே, வாழ்க்கையில் எங்குதான் நிம்ம தியோ என்று ஏக்கப் பெரு மூச்சில் தூக்கம் வராமல் தவிக்கிறான். இரும்புப் பெட்டியில் உள்ள பணத்தை பாதுகாக்கவே அவனுக்கு நேரம் போதவில்லை.

பிரபல்யங்கள்
பாமரர்களும், பரம ஏழைகளும் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள், பிரபல்யமானவர்களாவது நிம்மதி யாக இருக்கிறார்களா? என்று பார்த்தால், பதில் இல்லை என்பது தான். இந்தியாவிலேயே இவர்தான் சூப்பர் ஸ்டார் என்று மற்றவர்க ளால் புகழப்படுபவர்களும் கூட இமயமலை உச்சியிலாவது நிம்மதி கிடைக்குமா? என்று ஏங்கும் நிலை.

ஆட்சியாளர்கள்
குடிமக்களுக்குத்தான் நிம்மதி இல்லை, குடிமக்களை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்காவது நிம்மதி கிடைத்ததா? என்றால் இல்லை. ஆட்சியாளர்களால் பயமின்றி சுதந்திரமாக நடமாடவே முடிய வில்லை. குண்டு துளைக்கும் காரில் செல்ல வேண்டி உள்ளது, சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாக கொண்டாட முடியாத அவல நிலை.

காட்டில்
ஆசாபாசங்களும், சொந்த பந் தங்களும் தான் நிம்மதி கெடுவதற் குக் காரணம். ஆசாபா சங்களையும், நாடு நகரங்களையும் துறந்து, துற வறம் மேற்கொண்டு, காட்டுக்குச் சென்று விடுவோம். அங்குள்ள இலை தலைகளை அணிந்து காய் கனிகளை சாப்பிட் டுக் கொண்டு நிம்மதியாக வாழ்வோம் என்று எண்ணி காடுகளுக்குள் சென்றால், அங்கும் நிம்மதி இல்லை. ஏனெனில் காடு கள் என்பது பயங்கரவாதி களின் பதுங்கும் இடமாகவும், தீவிரவாதி களின் பயிற்சிப் பாசறைகளாகவும் மாறிவிட்டது.

மயானம்
கூச்சல் குழப்பம் எதுவும் இல் லாத நிலையை "மயான அமைதி' என்பார்கள். அந்த மயானத்தி லாவது சற்று நேரம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து மயா னத்தை நோக்கினால், அது பேய், பிசாசு கதைகளுக்கான ஊற் றுக் கண்ணாடியாகவும், சாராய சாம் ராஜ்யவாதிகளின் கூடாரமாக வும் திகழ்வதையே பார்க்க முடி கிறது.

எங்கே நிம்மதி?
உண்மையிலே நிம்மதி என்பது தேடி அலையக்கூடிய ஒன்றா, எல்லை இல்லை. சில வகையான பயிற்சிகளின் மூலமாகவும், தியா னங்களின் மூலமாகவும் தான் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்று பிரல்யமான மனோதத்துவ நிபுணர் களும் யோகா பயிற்சியாளர்களும் கூறுகின்றனர். இன்றைய அறிவியல் உலகமும் அதனை சரிகண்டுள்ளது.

இஸ்லாம்
இறை மார்க்கமான இஸ்லாம், தியானத்தின் மூலமும், சில பயிற்சி யின் மூலமாகவும் தான் நிம்மதியை அடைய முடியும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவுபடுத்தி விட்டது.
அல்லாஹ் கூறுகிறான்...
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் (திக்ரு செய்வதால்) அவர்களுடைய உள்ளங்கள் அமைதியைப் பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 13:28


இந்த வேதத்தில் இருந்து உமக்கு அறிவிப்பட்டதை எடுத்து ஓதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநாட்டு வீராக. நிச்சயமாக தொழுகை மானக் கேடானவற்றை விட்டும், தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக அல் லாஹ்வை நினைவு கூர்வது (திக்ரு செய்வது) மிகவும் பெரியதாகும்.
அல்குர்ஆன் 29:45

நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டதும், நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும், அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (திக்ரு செய்யுங்கள்)
அல்குர்ஆன் 4:103


மனிதர்கள், அல்லாஹ்வை (திக்ரு செய்வது) நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்று வதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும், அவர்களது வியாபாரங்களோ, கொடுக்கல் வாங்கலோ பாராமுகம் ஆக்காது. உள்ளங்களும், பார்வைகளும் தடுமாறக் கூடி யஅந்த (மறுமை) நாளை மட்டும் அஞ்சுவார்கள்.
அல்குர்ஆன் 24:37


(அல்லாஹ்வுடைய அடியார்களாகிய) அத்தகையோர், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களது விலாப்புறங்கள் மீது சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூர்(ந்து திக்ரு செய்)கிறார்கள். வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பை சிந்தித்து, ""எங்கள் ரட்சகனே! இவற்றை எல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகாதூய வன், நரக நெருப்பின் வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (என்று பிரார்த்தனை செய்வார்கள்)
அல்குர்ஆன் 3:191


நிம்மதிக்கு வழி
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், இறை நினைவு மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு நிம்மதி கிடைக்கும் என்பதை தெளிவாகக் கூறுகிறான். அதிலும் குறிப்பாக திக்ரு, தொழுகை, பிரார்த்தனை செய்வது தான் சிறந்த இறை நினைவு என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

""அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் மட்டுமே உங்கள் அமைதி பெறுகின்றன.'' (அல்குர்ஆன் 13:28)

நன்றி- தௌஹீத் மாத இதழ்.

01 டிசம்பர், 2010

அயோத்தி தீர்ப்பு -நியாயவான்களின் கொ்நதளிப்பு( டிசம்பர் 6 அன்று பொது மக்களிடம் வினியோகம் செய்ய வேண்டிய பிரசுரத்தின் மாதிரி)

அயோத்தி தீர்ப்பு: நியாயவான்களின் கொந்தளிப்பு
(தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அச்சடிக்கப்பட்டு பொது மக்களிடம் டிசம்பர் 6 அன்று வினியோகிக்கப்பட வேண்டிய பிரசுரத்தின் மாதிரி)


அயோத்தி தீர்ப்பு

அயோத்தி தீர்ப்பு ! (கேலிப்படம் நன்றி வினவு இணையத்தளம்

மதசார்பின்மையில் ஒட்டையை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு!

நீதியரசர் ராஜேந்தர் சச்சார்

-ராஜேந்தர் சச்சார் (ஒய்வுப் பெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி)


இந்தத் தீர்ப்பு பல விஷயங்களைப் பாதிக்கச் செய்திருப்பதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையிலேயே ஒட்டையை ஏற்படுத்திவிட்டது. 'பள்ளிவாசலை உடைத்து அழியுங்கள்...!' என்று கூறுவதைப் போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை எட்டுவதற்கு நம்பிக்கை ஒர் அடிப்படையாக இருக்கக்கூடாது.


இந்த விஷயத்தில் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாம் எங்குச் செல்வது? எதை நோக்கிச் செல்வது? ஒரு குற்றத்தை யாரும் மறந்து விடக்கூடாது. ஒரு குற்றத்தைச் செய்து விட்டு எவரும் தப்பி ஒடவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் கடமை. முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது அவர்களுக்குள்ள உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான சட்டம் சொலவது என்னவென்றால் ஒரு மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்துக்களைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லை என்பது தான்! ஆனால் இங்கோ பாபர் பள்ளிவாசலை இடித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது

ராஜீவ் தவான்

-ராஜீவ் தவான் (மூத்த வழக்குறைஞர்)
பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினருக்கும் சரி சமமாகக் கூட நிலம் பிரித்துத் தரப்படவில்லை. இஸ்லாமியருக்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கும், இரு பங்கு இந்துக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது. தார்மீக நீதியும் கிடையாது. அது மட்டுமின்றி இத்தீர்ப்பு நிலத்திற்கு உரிமை கோரிய ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.


இந்த தீர்ப்பு ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் வரலாறே தவறாகிவிடும். இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளைத் தாலிபான்கள் சிதைத்ததுடன் வெளிநாட்டவர்கள் ஒப்பிடுகின்றனர். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும் நீதி வழங்க மதச்சார்பற்ற நிர்வாகத்தால் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் தேவையாகும்.


வன்முறையை நியாயப்படுத்தும் தீர்ப்பு


-ரொமீலா தாப்பர், கே.எம்.ஸ்ரீமாலி, கே.என். பணிக்கர், அமியா குமார்பட்சி, விவன் சுந்தரம், சி.பி. சந்திரசேகர் உள்ளிட்ட 61 வரலாற்றாசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:


அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு கடந்த அக்டோபர் 30ம் தேதி அளித்த தீர்ப்பில் வரலாறு காரண காரியங்கள் மதசார்பின்மையின் மாண்புகள் போன்றவை கையாளப்பட்டிருக்கும் விதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்ட இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் எந்தச் சான்றும் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டிருப்பது தவறான கணிப்பு என்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிப்பதில் நீதிபதிகளின் இந்தக் கணிப்பு ஒரு வாதமாக முன்வைக்கப்படும் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகும். சட்டம் சமத்துவத்தின் அனைத்துக் கொள்கைகளுக்கும் இது எதிரானதாகும். தீர்ப்பின் மிகமிக ஆட்சேபணைக்குரிய பகுதி வன்முறை மற்றும் படைபலத்தை நீதிமன்றம் சட்டபூர்வமாக்கியிருப்பது தான்.

நீதி பரிபாலனத்தின் சாதாரண நெறிமுறைக்கு முரணான தீர்ப்பு

அந்திஅர்ஜுனா


-அந்தி அர்ஜூனா (மூத்த வழக்குறைஞர், உச்சநீதிமன்றம்)


பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது நின்ற இடத்தை இப்போது தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது போல் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குமா? அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக விடப்பட்டுள்ள அம்சம் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சண்டித்தனத்தை கண்டிக்காதது தான். சர்ச்சைக்குரிய 2.72 ஏக்கர் நிலம் காலியான இடம் என்பது போல் நீதிபதிகள் கருதியுள்ளார்கள்...1992 பள்ளிவாசல் இடிப்பை இந்த தீர்ப்பு நியாயபடுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய இரு தரப்புகளில் ஒன்று வழக்கு தொடுக்கும் போது இருந்த நிலையை தனது வசதிக்கேற்ப சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மாற்றிவிட்டால் (இந்த வழக்கில் இந்துத் தரப்பு), நீதிமன்றம் அந்த வன்செயலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நீதிமன்றங்களில் நிலவும் சாதாரண நீதி பரிபாலன முறையாகும். ஆனால் அவ்வாறு செய்வது இந்த வழக்கில் உள்ள நிலையை போல் சாத்தியமில்லை என்றால் சட்டத்தை தன் கையில் எடுத்துச் செயல்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படும் வகையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் நீதி பரிபாலனத்தின் இந்த அடிப்படையை கூட உணராது தீர்ப்பு அளித்துள்ளது.

தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை இந்த தீர்ப்பு

பி.எஸ். அப்பு


-பி.எஸ். அப்பு (முன்னாள் தலைமைச் செயலாளர் பீகார்)


மூன்று நீதிபதிகளும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்றும் பள்ளிவாசலுக்கு வெளியில் 100 எட்டு தூரத்தில் உள்ள ராம் சபூட்ரா (திண்ணையை) இந்துக்கள் பயன்படுத்தினர் என்றும் கருதியுள்ளனர். எனவே இந்த விவாகாரத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை முஸ்லிம்களிடமும், ராம் சபூட்ரா மற்றும் சீதா கி ரோசி (சீதையின் சமையல்கட்டு) இருந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைப்பதும் தான் நியாயமான, சாத்தியமான, நீதியான தீர்ப்பாக இருக்கும். திரேட்டா யூகத்தின் மிகப் பெரும் கதாநாயகனான ராமர், 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் சமாதியான ராமர், பள்ளிவாசலின் கும்பத்தின் கீழ் தான் பிறந்தார் என்று சொல்வது தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காத்து சட்டத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

வரலாற்றுக்கு அவமானம் கற்பிக்கும் தீர்ப்பு



டி.என். ஜா





-டி.என்.ஜா (வரலாற்றாசிரியர்)
வரலாற்று சான்றுகளை புறந்தள்ளும் வகையில் நம்பிக்கைகளை அனுமதிக்க கூடாது. என்ன நடந்துள்ளது என்றால் நம்பிக்கை பகுத்தறிவை வென்று விட்டதாக தோன்றுகிறது. வரலாற்றை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நம்பிக்கை. இந்தத் தீர்ப்பு உண்மைக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதியலுக்கும் இழைக்கப்பட்டுள்ள ஒரு அவமானம். தலைநகர் டெல்லியில் அனுமான் கோயில்களின் எண்ணிக்கை திடுதிடுப்பென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உரிமை இல்லாத நிலங்களில் கட்டப்படும் இந்த எண்ணற்ற அனுமன் கோயில்களால் எழும் பிரச்னைகளையும் ராமர் கோயில் பிரச்சினையோடு சேர்த்துத் தீர்க்கும் பொறுப்புக்கு அரசம் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் ஆளாகப் போகின்றன.

ஜனநாயகத்திற்கான தகுதிகளை இழந்து நிற்கிறோம்


நானி பல்கிவாலா


-நானி பால்கிவாலா (பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் பிறந்தாரா அங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் 1994ல் நரசிம்மராவ் அரசு கருத்துக் கேட்டப் போது எழுதியது)


நம்பிக்கைகள், வரலாறு, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகளில் முடிவெடுக்க நீதிமன்றத்தை நாடுவதற்கு விரும்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இது குறித்து மிக்க ஆவலுடன் இருக்க நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது (ஜனநாயகத்திற்கான) எல்லா தகுதிகளையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது.

முஸ்லிம்களை போல இந்துக்கள் அமைதியாக இருப்பார்களா?

குல்திப் நய்யார்


குல்தீப் நய்யார் (அரசியல் விமர்சகர்)


பாப்ரி பள்ளிவாசல் தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எங்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதன் பெருமை முழுக்க முஸ்லிம்களுக்கே போய் சேரும். இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களும் அவர்களே. அதற்குக் காரணம் உள்ளது.


பொதுவாக, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் எண்ணியபோதும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அத்தீர்ப்பில் திருப்தி அடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாகவே நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில், இப்போது மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.


ஒருவேளை, இத்தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக வந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று ஊகித்துப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைப் போல் அமைதியாக இருந்திருப்பார்களா? தீர்ப்பு அவர்களுக்கு முழு அளவில் சாதகமாக இல்லாதிருந்தும்கூட தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். எனவே, இத்தீர்ப்பை அவர்கள் தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொண்டனர் என்றோ, அதனால் முஸ்லிம்களின் அச்சம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றோ கருதுவதற்கு இடமில்லை. தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இரு தரப்பினரும் கையாண்ட அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்பதை அனைவரும் அறிவர்.


சிறுபான்மை சமூகத்தினர், சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறும் போது பெரும்பான்மை இந்து சமுதாயம் அப்படி ஏதும் உறுதி கூற முன்வரவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1992ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.

தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது.

ரோமீலா தாப்பர்

-ரொமீலா தாப்பர் (வரலாற்று ஆசிரியர்)


இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங்பரிவார் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கோருவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துக்களை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்புச் செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்?


வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையைப் புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.

அநீதியின் வெளிப்பாடு

ஹர்ஷ் மந்தர்



-ஹர்ஷ் மந்தர் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக சேவகர்)
இந்த தீர்ப்பு நடுநிலையானது என்றும் நேர்மையானது என்றும் சில விமர்சகர்கள் கூறுவது எனக்கு வினோதமாக இருக்கின்றது. நாம் இனி பழையவற்றை மறந்து முன் செல்ல வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீதிக் கிடைப்பதை அனுபவிக்காத வரையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இயலாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த வழக்கு குற்றவியல் ரீதியாக யார் தவறு செய்தார்கள் என்பதை நிர்ணயிக்கும் வழக்கு அல்ல என்பது உண்மை தான். அனால் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராமர் கோயில் கட்டும் இயக்கத்தின்; முக்கிய அடிப்படைகள் அனைத்தையும் கொள்கையளவில் ஏற்கும் வகையில் அமைந்துள்ளது....ராமர் கோயில் இயக்கத்தின் போர் பரணியாக 'அந்த இடத்தில் தான் ராமர் கோயில் கட்டுவோம்' என்பதே. நம்பதகாத வரலாறு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலும், ஏமாற்று மற்றும் அடக்குமுறையின் அடிப்படையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சாசனச் சட்டத்திற்கு சவால் விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்த, அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்த ஒரு இயக்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!

சித்தார்த் வரதராஜன்


-சித்தார்த் வரதராஜன் (தி ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியர்)
16வது நூற்றாண்டில் அயோத்தியில் தான் துளசிதாசர் ராம் சரித் மனாஸ் நூலை எழுதினார். எனினும் அதில் ராமர் பிறந்த இடம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் அதன் பின் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து இப்போது ராமர் பிறந்த இடத்தை லக்னோ நீதிமன்றம் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்திருக்கின்றது!


இந்தியாவில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அனைத்து வகையான நம்பிக்கைகளும் இருக்கலாம். ஆனால் சட்டத்தில் எது தவறு எது சரி என்பதைத் தீர்மானிப்பதற்கான நடுவராக அந்த நம்பிக்கை மாறிவிடக்கூடாது. அதே போல், வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதும், நீதி வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது.

அகழ்வாராய்ச்சி சான்றுகளை மறுதலித்த தீர்ப்பு
டி.கே. ராஜலட்சுமி (பிரண்;ட்லைன் மாதமிருமுறையின் செய்தியாளர்)


இந்து கோயில் இருந்த இடத்தில் தான் பாபரி பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று மூன்று நீதிபதிகளில் இருவர் கூறியிருப்பது இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் நடத்திய அகழ்வாராய்ச்சியின் போது வெளியான அனைத்து சான்றுகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. அகழ்வாராய்ச்சியின் போது அங்கு மிருக எலும்புகளும் பரவலாக கிடைத்ததும், சுர்க்கி (முஸ்லிம்கள் பயன்படுத்திய ஒரு வகையான கட்டுமானப் பொருள்) மற்றும் சுன்னாம்புக் காரை ஆகியவையும் அங்கே பரவலாக கிடைத்ததும் அந்த இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாக அமைந்துள்ளன. பள்ளிவாசல் கோயிலின் மீது கட்டப்பட்டது என்ற வாய்ப்பையும் அவை மறுதலிக்கின்றன.


நன்றி.தமுமுக.காம்