இறைவன் கூறுகின்றான்:
* இறைநம்பிக்கை கொண்டோரே! இறைவன் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளை செலவு செய்பவனைப் போல நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், (மனம்) புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள். அவன்(செய்யும் செலவுக்கு) உவமை, மண் மூடிய ஒரு வழுக்குப் பாறையைப் போன்றதாகும். அதன் மீது பெருமழை பெய்து, (அதை மூடியிருந்த மண்ணை அடித்துக் கொண்டுபோய்) அதை வெறும் பாறையாக்கிவிட்டது. இத்தகையவர்கள் செய்யும் தான தர்மங்களால் எதையும் (எந்த நன்மையையும்) ஈட்ட முடியாது. மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நேர்வழி காண்பிப்பது இறைவனின் நியதி அல்ல!
* (இதற்கு மாறாக) யார் இறைவனுடைய திருப்தியை நாடி உளப்பூர்வமாக தங்கள் பொருள்களைச் செலவு செய்கின்றார்களோ அவர்களு(டைய தர்மத்து)க்கு உவமை, உயரமான பூமியிலுள்ள ஒரு தோட்டம் போன்றதாகும். அதில் பெருமழை பெய்யும் பொழுது தன்னுடைய கனிகளை அது இரு மடங்காகத் தருகிறது. அப்படி பெருமழை அதில் பெய்யவில்லை என்றாலும், லேசான தூறல் கூட அதற்குப் போதுமானதாகும். நீங்கள் செய்பவற்றையெல்லாம் இறைவன் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக