

ராமநாதபுரம் : ""பெரியபட்டினம் படகு விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு அளித்துள்ள நிவாரணம் போதாது,'' என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: பெரியபட்டினம் விபத்துக்கு மாவட்ட நிர்வாகமே முழுப்பொறுப்பாகும். மீனவர்கள் தான் அனைவரையும் மீட்டுள்ளனர். இந்த விசயத்தில் அரசு இயந்திரம் செயல் இழந்துவிட்டது. இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியிருப்பது போதாது. தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை திருப்தியளிப்பதாக உள்ளது. குற்றசாட்டுகள் வரும் போது அதில் பாரபட்சம் தேவையில்லை. தேவைபட்டால் கருணாநிதியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தலாம். அ.தி.மு.க., கூட்டணியில் எங்களுக்கு சாதகமாக கருதப்படும் தொகுதிகளை கேட்போம், என்றார்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக