* (இந்நயவஞ்சகர்கள்) இறைவனையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்று
கின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே அன்றி வேறில்லை; எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை.
அவர்களுடைய நெஞ்சங்களில் நோயிருக்கிறது.
(திருக்குர்ஆன்2:9)
* ""பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்'' என அவர்களிடம் சொல்லப்பட்டால், ""நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே!'' என அவர்கள் கூறுகிறார்கள்-
எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள் தாம்
குழப்பவாதிகளாவர்.
(திருக்குர்ஆன் 2:11,12)
* (நபியே) இந்நயவஞ்சகர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள்(எதற்கும் உதவாதவர்கள்). இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய் கருதுகின்றனர். இவர்கள் தாம் கடும் பகைவர்களாவர்.
(திருக்குர்ஆன் 63:4)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக