திண்டுக்கல் தாருல் உலூம் யூசுஃபிய்யா அரபிக்கல்லூரி முதல்வரும்,சிறந்த மார்க்க பிரச்சாரகருமான மெளலானா கலீல் அஹமத் கீரனூரி ஹஜ்ரத் அவர்கள் 16.12.2010 இன்றுமாலையில் காலமானார்கள்.17.12.2010 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இவரின் சொந்த ஊரான திண்டுக்கல் கீரனூரில் நல்லடக்கம் நடைபெற இருக்கிறது.
இவரின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்திற்க்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.மறைந்த மெளலானா அவர்கள் லால்பேடை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் அல்லாமா அமானி ஹஜ்ரத் அவர்களிடம் கல்விப் பயின்றவராவார்.இவர் இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தப்லீக் ஜமாஅத்தில் சென்று பிரச்சாரம் செய்துள்ளார்.
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விழாவிற்க்கு தலைமை வகித்து சிறப்பித்து தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர்களான மகாபுபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப்,முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா சாஹிப் ஆகியோரின் உணர்ச்சி மிகு உருது சொற்பொழிவை எழுச்சி மிகு தமிழில் மொழிபெயர்த்தவர்.
பட்டமளிப்பு விழாவை ஒட்டி அன்று மாலையில் லால்பேட்டையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து முஸ்லிம் லீக் தலைவர்களின் உருது உரையை தமிழில் மொழிப் பெயர்த்தவர் மெளலானா அவர்களாவார்.
இவர் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இந்த ஆண்டுவரை தொடர்ந்து கலந்து கொண்டு பட்டமளிப்பு பேருரை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என பிரார்த்தனை செயிகிறோம்
1994ல் கீரனூரி ஹஸ்ரத் அவர்களிடம் மாணவனாக சேர்ந்தது முதல் இன்று வரை சுமார் 16 வருடடங்கள் ஹஸ்ரத் அவர்களுடன் பழகக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்களிடமிருந்து படித்தது ஏராளம். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சுன்னத்தான நோன்போடு நோன்பு துறக்கத் தயாரான நிலையில் வபாத்தாகி இருக்கிறார்கள். நல்ல மனிதர். நல்ல மரணம் அவர்களுக்காக துஆச் செய்யுங்கள். அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்க வேண்டும்
பதிலளிநீக்குஇப்படிக்கு
மாணவன்
H M M. இர்ஷாத் (பைஸி)
இலங்கை.
allah moulanavin kafrai visalamaga akki vaipanaga
பதிலளிநீக்கு