
துபாய் : துபாயிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸல் கைமா அமீரகம். ராஸல் கைமாவில் இயங்கி வரும் இந்தியப் பள்ளியில் இந்தியா, யு.ஏ.இ., உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2010-11 ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பல்வேறு நாட்டைச் சோ்ந்த மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர். இப்பள்ளியில் படித்துவரும் தமிழத்தைச் சோ்ந்த மர்ஜூக் ரஹ்மான் என்ற மாணவரும் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றார். ஜூனியர் பிரிவில் லாங்க் ஜம்ப்பில் முன்னோடியாய் வந்து தங்கப்பதக்கம் வென்றார்.இவர் கடந்த டிசம்பர் 3ம் தேதி நடந்த யு.ஏ.இ., தேசிய நாள் கொண்டாட்டத்தில், மாணவர்களுக்காக நடந்த போட்டியிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொ்ந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூராகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக