










அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 10-12-2010 வெள்ளிக்கிழமையன்று தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 7 வது இரத்ததான முகாம் நடைபெற்றது. மண்டலத் தலைவர் சகோ.அப்துல் காதர் தலைமையிலும் முன்னாள் மருத்துவரணி செயலாளர் சகோ.அப்துல் ரவூஃப் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இம்முகாமில் 130 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு இறுதியில் 104 நபர்கள் இரத்ததானம் செய்தனர். நேரமின்மை காரணமாக நிர்வாகிகள் பலரும் இரத்தம் கொடுக்காமல், வந்திருந்த சகோதரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு அமீரகத் தலைவர் அப்துல் ஹாதி அவர்களும் து.தலைவர் ஹுஸைன் பாஷா அவர்களும் கலந்துகொண்டு மேற்பார்வையிட்டனர் மற்றும் தொழிலதிபர் சகோ.இளையாங்குடி அபுதாஹிர் அவர்களும் இந்த மனிதநேயப் பணியில் கலந்து கொண்டு தமுமுகவின் பணிகளை ஊக்குவித்தார். இந்த முகாம் துபை மண்டலம் சார்பாக இவ்வருடம் நடத்தப்படும் 4 வது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது, அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே). இம்முகாமில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது மாற்றுமத சகோதரர்களும் எகிப்து, பாகிஸ்தான், மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுச் சகோதரர்களும் கலந்து கொண்டனர். கடல் கடந்து வாழ்ந்தாலும் எங்கள் வசிப்பிடம் மாறலாம் ஆனால் எங்கள் வழித்தடம் மாறாது என்பதை தமுமுக துபை மண்டலத்தின் சிற்பபான சேவைகள் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.நன்றி.மையிதீன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக