#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 ஏப்ரல், 2012

KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு -

 

கான்பெர்ரா:கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, (ஆஸ்திரேலியா குடும்பத்தினருக்கு) 83 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஃபாஸ்ட்புட் உலகின் புகழ்பெற்ற கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்கு(கே.எஃப்.சி) நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.

3ல் ஒரு இந்தியர்! பெரும் கஷ்டத்தில்


wellbeing-Index
டெல்லி: இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்கமும் மக்களை பெரும் பாடுபடுத்தி வருவதாக கேலப் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
கேலப் பைனான்சியல் வெல்பீயிங் இன்டெக்ஸ் (Gallup's Financial Wellbeing Index) எனப்படும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் குறியீட்டு எண் தொடர்பான கருத்துக் கணிப்பில் 3ல் ஒரு இந்தியர் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடுப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தங்களது பொருளாதாக நிலை மோசமாகியுள்ளதாக 31 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலமும் இதே போல இருக்கப் போகிறது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாக இருந்தது.

சென்னை இலங்கை தூதரகம் மீண்டும் முற்றுகை. ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு (படங்கள்)

சென்னை இலங்கை தூதரகம் மீண்டும் முற்றுகை. ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு  
இலங்கையில் தம்புள்ள நகரத்தில் உள்ள மசூதியை சிங்கள மதவெறி பிடித்த புத்த பிக்குகள் இடித்தனர். அதை அரசு ஆதரவுடன் ராணுவமும், காவல்துறையும் வேடிக்கை பார்த்தது. இதை கண்டிக்கும் விதமாக அப்துல் சையது தலைமையில் தமுமுக, மமக, மதிமுக போன்ற கட்சிகளும் மற்றும் பல் வேறு தமிழுணர்வு இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் சுமார் 1500 பேர் சென்னை மைலாப்பூரில் மாபெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு , ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்தனர். பின்பு பேரணியாக இலங்கை தூதரகத்தை நோக்கி முற்றுகையிட கிளம்பினர். அப்போது காவல் துறை அவர்களை தடுத்து கைது செய்தனர். சென்ற சனிக்கிழமை தான் வேறு ஒரு இஸ்லாமிய அமைப்பான இந்திய தவஹீத் அமைப்பு இலங்கையின் தூரகத்தை முற்றுகை இட்டது குறிப்பிடத் தக்கது.

28 ஏப்ரல், 2012

மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை மற்றும் நுழைவுத்தேர்வு





சமூகத்தின் தனித்துவ அந்தஸ்தைப் பெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.தகுதி,
மொத்தம் 5.5 வருட காலத்தைக் கொண்ட MBBS படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களது பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களைப் படித்திருப்பதோடு, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலைப் படிப்பு,மருத்துவ முதுநிலைப் படிப்புகள் பொதுவாக 3 வருட காலத்தைக் கொண்டவை. இப்படிப்பில் சேர, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்த MBBS பட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

520 ஆண்டுகளுக்குமுன்... உட்பூசலால் ஆட்சியை இழந்த முஸ்லிம்கள்



கி.பி. 710 ஆம் ஆண்டில் வலீத் பின் அப்தில் மலிக் கலீஃபாவாக இருந்த காலத்தில் அண்டலூசியாவில் (ஸ்பெயின்) முஸ்லிம்கள் நுழைந்தனர். அப்போது முஸ்லிம் படைகளின் தளபதியாக இருந்தவர் தாரிக் பின் ஸியாத். படைகளை வழிநடத்தியவர் மூசா பின் நஸீர்.
கி.பி. 755ல் கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானின் கொள்ளுப்பேரர் அப்துர் ரஹ்மான் பின் முஆவியா அண்டலூசியாவில் நுழைந்தார். அப்போது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த அவருடைய மாமன்மார்கள் அவருக்கு உதவினர். 

பாலியல் பயங்கரம்...!

பங்களாதேஷில் பயங்கரம் 
 மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி 
பங்களாதேஷில் பயங்கரம் பங்களாதேஷில் 18 வயதைத் தாண்டிய பெண்கள் யாரும் விபசாரத்தில் ஈடுபட்டால், அவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது. வயதுச் சான்றிதழ் காட்டினால் போதும்; காவல்துறை அவர்களைக் கைது செய்யாது. அப்படியே சிறையில் அடைக்கப்படும் இளம் பெண்கள் காவலர்களால் களவாடப்படுகிறார்களாம்.
பங்களாதேஷில் விபசாரிகள் மட்டுமே இருக்கும் ‘டோலாதேத்தா’ என்ற கிராமம்தான், உலகிலேயே மிகப் பெரிய விபசார விடுதிகயாகக் கருதப்படுகிறது. அங்கு 1600 பெண்கள் தினமும் 3 ஆயிரம் ஆண்களுக்குத் தங்கள் உடலை விற்கிறார்கள்.

27 ஏப்ரல், 2012

”இலங்கைத் தூதரகம் முற்றுகை ” - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு


சென்னை - இலங்கையின் தம்புல்ல ஜும்மா மசூதி தகர்க்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக வரும் சனிக்கிழமை (28/04/12) மாலை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

இது பற்றி அதன் பொது செயலாளர் இக்பால் தெரிவிக்கையில்,”கடந்த சில வருடங்களாகவே இலங்கையில் இஸ்லாமியர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் முதல் படியாக கடந்த சில மாதங்களுக்கு முன் அங்குள்ள தர்காவை தகர்த்துள்ளனர். அதனைக் கண்டிக்காமல் விட்டதின் காரணத்தால் புத்தபிக்குகளின் புனித பூமி என கூறி இன்று தம்புல்ல தொழுகை பள்ளியை தகர்த்துள்ளனர். இதனைக் கண்டிக்கும் விதமாக மாபெரும் முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளோம்” என்றார் .


 

இடைத்தேர்தல் - ஒரு ஓட்டுக்கு ரூ 5000?




சேலம் - சேலம் ஸ்ரீரத்தினவேல் கவுண்டர் திருமண மண்டபத்தில் பா.ம.க. சார்பில் பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில தலைவரும், பா.ம.க கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான கோ.க.மணி தலைமை வகித்தார்.
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வரவேற்றார்.  இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பெண்ணின் வயிற்றில் ஒன்பது குழந்தைகள்


கர்லா வனீஸ்ஸா பரீஸ் என்பது அந்தப் பெண்ணின் பெயர். கர்ப்பிணியான அவரை பரிசோதித்த போது அவருடைய வயிற்றில் ஒன்பது குழந்தைகள் வளர்ந்து வருவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.6 பெண்குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பரீஸின் வயிற்றில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த அப்பெண்ணின் வயிற்றில் 9 குழந்தைகள் வளர்ந்து வருவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பெண்மணி டெக்ஸாஸ் அருகில் உள்ள கோகுலியாவைத் சேர்ந்த கர்லா வனீஸ்ஸா பரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தற்போது மாநிலத் தலைநகர் சால்டில்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மே 20-ம் தேதி அளவில் குழந்தைகள் பிறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

24 ஏப்ரல், 2012

ஆன்லைனில் புகைப்படங்கள் சேமிப்பு களம்: கூகுளின் புதிய சேவை


கூகுள் ட்ரைவ் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் வேண்டிய தகவல்களையும், புகைப்படங்களையும் எளிதாக ஸ்டோர் செய்து கொள்ளலாம்.
புதிதாக கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த கூகுள் ட்ரைவ் சேவையின் மூலம், இதில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களுக்கு 5 ஜிகாபைட்ஸ் ஸ்டோரேஜ் வசதியை ஃப்ரீயாக பெறலாம். வேண்டிய தகவல்களை ஒரு சிஸ்டத்தில் ஸேடோர் செய்து வைத்தால், அதை அந்த சிஸ்டத்தில் தான் பார்க்க முடியும்.

சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு




Banana stem 
விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை. வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

பழம் சாப்பிட்டா உடல் ‘பிட்’ ஆகலாம்!



Apple  
உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒருவகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர்

சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கும் அரசுகள்! ஆட்சி செய்ய உரிமை இல்லை - நீதிபதி ராஜிந்தர் சச்சார்





சிறுபான்மை மக்களுக்கு நீதி வழங்காத அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என நீதிபதி ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தங்களது பல்சமூக பன்முகத்தன்மை பேணி பாதுகாப்பதோடு, மனித உரிமைகளைக் காக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென சச்சார் கேட்டுக் கொண்டார்.

21 ஏப்ரல், 2012

பதவி ஓர் அமானிதம்


பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.
அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான். இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்


தவணை முறையில் வெற்றி காண்போம்.
சரியான நேரத்தில் எதையும் நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது பற்றி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.
பல விதமான முறைகளில் – பிறப்பு முதல் இறப்பு வரை, கவலையில் இருந்து தற்கொலை வரை – சிலர் தங்கள் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பாட்டை நிறுத்தி விட வேண்டும், இல்லையேல் வயிறு பெருத்து சீக்கிரம் இறந்து விட நேரிடும்.
இது போலவே மதுபானம், பேச்சு போன்றவற்றையும் நிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

மாடிப்படி ஏறுங்க! இதயநோய் வராது!





Health Benefits of walking Up Stairs 
அபார்ட்மென்ட் வீடுகளிலோ, பணிபுரியும் அலுவலகங்களிலோ இப்பொழுதெல்லாம் யாருமே மாடிப்படியை உபயோகிப்பதில்லை. இதற்கு காரணம் அனைத்து இடங்களிலும் லிப்ட் வசதி உள்ளதால் ஒரு மாடி ஏறவே சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு லிப்ட் உபயோகிக்கின்றனர் பலரும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

மமக கருத்தை ஏற்று அமைச்சரின் உரையை திருத்திய முதலமைச்சர்



இன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறையின் மானியக்கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதில் அளித்து பொது பணித்துறை அமைச்சர் கே. வி. ராமலிங்கம் பேசுகையில்

"இந்துக்கள் ராமரை வணங்குவதுபோல், கிறிஸ்தவர்கள் இயேசுவை வணங்குவதுபோல், முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை வணங்குவதுபோல்.."

19 ஏப்ரல், 2012

சீனாவின் பிரம்மாண்ட அணைக்கு தொடரும் ஆபத்து: மேலும் ஒரு லட்சம் பேரை வெளியேற்ற திட்டம்


China Dam 
பெய்ஜிங்: சீனாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவினால் அப்பகுதியில் இருந்து மேலும் 1 லட்சம் பேரை அடுத்த 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

18 ஏப்ரல், 2012

தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை வேதனை தருகிறது: தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்!


Justice MY Eqbal
சென்னை:தமிழகத்தின் சில கிராமங்களில் ஜாதியின் பெயரால் இரட்டை டம்ளர் முறை நீடிப்பது வேதனை தருவதாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கூறியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 121-வது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

டெல்லி மாநகராட்சி : 16 வார்டுகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி!


டெல்லி மாநகராட்சி தேர்தலில், முஸ்லிம்கள், காங்கிரசின் நய வஞ்சகத்தனம், பாஜகவின் மத துவேஷம் என, சிக்கி தவித்த நிலையில்,
பலமான மாற்று கட்சி இல்லாததால், சமாஜ்வாடி, பி.எஸ்.பி, ஆர்.எல்.டி போன்ற உதிரி கட்சிகளுக்கு, வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம் முஸ்லிம் வோட்டுக்கள் மூன்றாக பிரிந்த போதும், கடந்த மாநகராட்சியில் 11 உறுப்பினராக இருந்த முஸ்லிம் கவுன்சிலர்கள் எண்ணிக்கை, தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. எனினும், பரவலாக எல்லா இடங்களிலும் உள்ள முஸ்லிம்கள், தொடர்ந்து காங்கிரசுக்கே வாக்களித்து வந்துள்ளனர். எனவே தான் டெல்லியில் உள்ள, 7 பாராளுமன்றத்தொகுதிகளில் ஒன்றில் கூட பாஜக, வரமுடியவில்லை. மொத்தமுள்ள 7 தொகுதளிலும் காங்கிரஸ் தான் வெற்றி பெற முடிந்தது. டெல்லியில் பாட்லா ஹவுஸ், போலி என்கவுண்டர் போன்ற விஷயங்களில், உறுதியான நடவடிக்கை எடுக்காமல், முஸ்லிம்களிடம் நயவஞ்சகமாக நடந்து வருவதால், முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரசை விட்டு விலகி நிற்க வேண்டிய நிலை உள்ளது.



 நன்றி. மறுப்பு .காம்

எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது முஸ்லிம் சமூகம்?


 கடப்பா : ஏப்ரல் 18, ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக, வதந்திகளை பரப்பி - வன்முறைகளை தூண்டி, முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படுத்தப்படுறது.
மறுபக்கம், இஸ்லாத்தின் அடிப்படைகளையே தெரியாமல், ஓரிறை கொள்கைகளை தெரியாமல், பல முஸ்லிம்கள், அறியாமையில் வாழ்ந்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது? தெலுங்கு வருடப்பிறப்பை, ஆந்திராவில் "உகாதி பண்டிகை" என்று, ஹிந்து சமூக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம், கோவிலுக்கு சென்று விசேஷ பூஜைகள் செய்வதும் அவர்களின் வழக்கம். குறிப்பாக பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்வதற்காக, பெண் பிள்ளை பெற்றவர்கள் கோவில்களுக்கு செல்வார்கள். இஸ்லாமியர்களை பொறுத்த வரை, அவர்கள் ஒரு இறைனை வணங்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கையில், எதற்காகவும் யாரையும் இணைத்துக்கொள்ளக்கூடாது என்பதும், முக்கிய விதியாகும். இன்னும் சொல்லப்போனால் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற வார்த்தையின் முதல் நோக்கமே, அல்லாஹ் ஒருவனைத்தவிர யாருக்கும், எவ்வித சக்தியோ ஆற்றலோ அதிகாரமோ இல்லை, என்பதை முழு மனதுடன் ஏற்றால் தான், அவர் இஸ்லாத்தில் இருக்க முடியும். ஆனால் இன்றைக்கு தங்களை இஸ்லாமியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர், குறிப்பாக ஆந்திர கிராமங்களில், அதிகளவு மக்கள் அறியாமையில் உள்ளனர்.


நன்றி. மறுப்பு .காம்

பேப்பர் கப் தயாரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பிரசாரத்தில் அசத்தும் இந்திய சிறுவன்





ஐக்கிய அரபு எமிரேட்டில் 10 வயது இந்திய சிறுவன் ஒருவன் “பேப்பர் கப்” தயாரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறான்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் இந்திய சிறுவன் அப்துல் முகீத் (வயது 10), சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயத்தில் தனது பிரசாரத்தை பேப்பர் கப் விநியோகிப்பதின் மூலம் செய்து வருகிறான்.
தினமும் காகித பைகள் தயாரித்து அவற்றை அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள், கடைகளில் கொடுப்பதை தனது அன்றாட பணியாக வைத்துள்ளான்.

17 ஏப்ரல், 2012

அமெரிக்க கல்வி வாரிய தேர்தலில் ரஹீலா வெற்றி!


 வாஷிங்டன், அமெரிக்காவின் மேரிலேன்ட் மாகாணத்தில் உள்ள, கல்வி வாரியத்துக்கு நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சா வழியை சேர்ந்த, 18 வயது மாணவி, ரஹீலா அஹ்மத், வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் முக்கிய கல்வி வாரியமாக கருதப்படும், இதில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 1,20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இந்த தேர்தலில் ரஹீலவுக்கு 34% வாக்குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட, ஜீனா ஜேக்கப் 25% வாக்குகளும் பெற்றனர். தோல்வி அடைந்த ஜீனா ஜேக்கப், கடந்த 5 ஆண்டுகளாக, இந்த பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியத்துக்கு, அமெரிக்க பட்ஜெட்டில் 160 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. ரஹீலா மேரிலேன்ட் பல்கலைக்கழக மாணவி ஆவார்.

மனித நேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்றது தேர்தல்கமிஷன்




இந்தியத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவு கிடைத்துள்ளது. 50 ஆயிரம் ஓட்டு வாங்கிய ஒருவர் வெற்றி பெற்றதாகவும், 49,900 வாக்குகள் வாங்கியவர் தோல்வி அடைந்ததாகவும் கூறும் ‘பிரிட்டிஷ் மாதிரி’ தேர்தல் முறை, சமத்துவ ஜனநாயகத்துக்கு எதிரானது. நூறு வாக்குகளில் தோல்வியடைந்த ஒருவருக்கு 49,900 பேர் அளித்த வாக்குகள் பயனற்றவை எனக் கருதுவது எந்தவகையில் நியாயம்? என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் நீண்ட விவாதத்தைத் தூண்டின.

உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை Dr ஜாவஹிருல்லா விவாதம்




தமிழ்நாட்டை,  இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தலமாகவும் விளங்க வைப்போம் என்று முதலமைச்சர் அவர்கள் தொலைக்நோக்குத் திட்டம் 2023 குறிப்பிட்டுள்ளார்கள், அந்தக் கனவை நனவாக்கும் நோக்கிலே தமிழக முதலமைச்சர் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மனிதநேய மக்கள் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துக் கொள்வதிலே மகிழ்க்சியடைகின்றேன்.

திருமணப் பதிவுச் சட்டம்: முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு!


Muslim personal law board opposes marriage registration actமத, இனப் பாகுபாடின்றி அனைத்துத்  திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எதிர்க்க உள்ளது.
முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் தலையிடுவதாக இந்தக் கட்டாயப் பதிவுச் சட்டம் அமைவதால் விரைவில் கூட உள்ள முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் கடும் எதிர்ப்புக்குரல் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது

15 ஏப்ரல், 2012

அழைப்புப் பணி





தங்களது தாயகத்தை விட்டு விட்டு அந்நிய பூமியில் வசிக்கக் கூடிய முஸ்லிம்கள், தற்பொழுதுள்ள கால கட்டத்தில் இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடிய முஸ்லிம்களாக தங்களை சொல்லாலும், செயலாலும் மாற்றிக் கொள்வது அவசியமானதொன்றாகும்.

ஏனெனில், இன்றைய மேலை நாட்டுச் சமூகம் இதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்காக ஒரு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நீங்களும், உங்களது பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும் இஸ்லாத்திற்குச் சான்று பகர வேண்டுமே ஒழிய, இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை ஏற்படுத்தி விடக் கூடாது. இதற்கான காரணம் மிகவும் பாரதூரமானது. பல புதிய சகோதரர்களிடம் உங்களை இஸ்லாத்தில் கவர்ந்த அம்சம் எது என்று கேட்கும் பொழுது, பலர் தங்களுடன் பழகும் நபர்கள் மூலமாக, அதைப் போலவே வணக்க வழிபாடுகள் மூலமாக ஈர்க்கப்பட்டதாக விளக்கமளித்திருக்கின்றார்கள்.

14 ஏப்ரல், 2012

சிரியா : இரு தரப்பும் ஒருவர் மீது அடுத்தவர் குற்றச்சாட்டு


சிரிய மோதலில் அழிந்த இடங்கள்
சிரிய மோதலில் அழிந்த இடங்கள்

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில் ஒரு இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக அங்குள்ள எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இரான்-உலக வல்லரசுகள் இடையிலான பேச்சுவார்த்தை


இரான்-உலக வல்லரசுகள் சந்திப்பு
இரான்-உலக வல்லரசுகள் சந்திப்பு

இரானின் அணுத்திட்டம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இரானுக்கும் ஆறு முக்கிய வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறுகின்றது.
பிராந்தியத்தில் அதிகரித்துவரும் குழப்பநிலைமையை கட்டுப்படுத்த இந்த சந்திப்பு உதவும் என்று அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ்,ரஷ்யா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் நம்புகின்றனர்.

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்!

அபுஜா: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார்.

நைஜீரிய நாட்டில் உள்ள ஓகுன் மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண்இடாகோ இது குறித்து வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நைஜீரியாவில் பிறந்துள்ள 70 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தாய்மார்கள் எய்ட்ஸ் நோயுடன் இருப்பதும், மேலும் மலேரியா , காசநோய் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

படைப்புக் கொள்கையைப் பற்றி சில ஆய்வுகள்!

//பெரு வெடிப்பு கொள்கை, குரானில் சொல்லப்பட்ட படைப்பு கொள்கையில் இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//- சகோ நரேன்!

'வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'-குர்ஆன் 40:57'படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்'-குர்ஆன் 79:27

உ.பி:எம்.எல்.சி பதவிக்கு இமாம் புகாரியின் மருமகன் மனு தாக்கல்!



Mulayam Placates Bukhari, Cleric's Son-In-Law To Get LC Seat
லக்னோ:டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் ஸய்யித் புகாரியின் மருமகன் உமர் அலி கான் உத்தரபிரதேச சட்டமேலவை(எம்.எல்.சி) உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அவர் மனு தாக்கல் செய்தார். சட்ட மேலவையில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் உறுதி அளித்துள்ளார்.

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும்!




“வானம் பிளந்து எண்ணையை ஒத்த மலரைப் போன்று சிவந்ததாக ஆகிவிடும் போது” -ஸூரா ரஹ்மான்-குர்ஆன் 55:37

11 ஏப்ரல், 2012

பாபா "ரம்" தேவ்


 தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை விமானப்பயனங்களில் கழிக்கும் சாமியார்கள், எந்த அளவுக்கு மது பிரியர்களாக உள்ளனர், என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
கூடவே இவர்களின் அசைவ உணவு பழக்கங்களையும் தெரிந்துக்கொண்டால், அப்பாவி மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

உயிருக்கு பயந்து பல்டி சாட்சி.. மறுவிசாரணைக்கு சங்கரராமனின் மனைவி, மகன் கோரிக்கை!

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக எங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும், என்று நீதிபதியிடம் சங்கரராமனின் மனைவி, மகன் மனு கொடுத்துள்ளனர். காஞ்சி சங்கரமட மேலாளரும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகியுமான சங்கரராமன் கொலை வழக்கு, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சி.எஸ். முருகன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் நேற்று முதல் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது. இந் நிலையில், சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் திடீரென நீதிமன்றம் வந்தனர்.

யூரோ பிரச்னையை தீர்க்க புது தீர்வளித்த 11 வயது சிறுவன்






ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென்று தனித்தனி நாணயங்களை வைத்திருந்தன.
ஒரே நாணயமாக இருப்பது வசதி பொருளாதாரமும் மேம்படும் என்பதால் யூரோ என்ற பொது நாணயம் கடந்த 1999ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் யூரோ நாணயம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹஜ் பயணத்துக்கு ஏப்., 16ம் கடைசி நாள்



சென்னை: ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்கான கால அவகாசம், ஏப்., 16ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் வழங்கி வருகின்றனர். விண்ணப்பங்களை வழங்க, ஏப்., 16ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, "ரேசி டவர் எண்.13/7, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34 என்ற முகவரியிலோ அல்லது 044 - 2822 7617, 2825 2519, 2822 7617 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். இதுகுறித்து, ஹஜ் குழு அலுவலக ஊழியர் ஒருவர் கூறியதாவது: 

பன்றிக்காய்ச்சல் சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி கவன ஈர்ப்பு தீர்மானம்




சுமார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு H1N1 Swine Flu Influenza என்று சொல்லப்படக்கூடிய இந்தப் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்திலே மிகப்பெரிய ஒரு பீதி ஏற்பட்டு, பாதிப்புகள் ஏற்பட்டன. இப்போது மீண்டும் தமிழ்நாட்டிலே பன்றிக் காய்ச்சல் தலைதூக்கி, மக்களுக்கு ஆங்காங்கே பாதிப்புகள் வரக்கூடிய சூழலில், தமிழக அரசு அதுகுறித்து துரிதமாக சில நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதை பாராட்டுகிறேன்.

10 ஏப்ரல், 2012

ஹைதராபாத் கலவரம் : நடந்தது என்ன? தீர்வு தான் என்ன??


 கோவிலில் மாட்டு கறியை தூக்கி போட்டதாக கூறி, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் பயங்கரவாதிகள்,
முஸ்லீம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, கல் வீசி தாக்கியதில் பத்து வீடுகள் எரிக்கப்பட்டதோடு, பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால், 12 நபர்கள் படு காயமடைந்துள்ளனர். 

ஓர் வபாத் செய்தி


மானியம்ஆடூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மர்ஹும் சஹாபுத்தீன் மகனும் முஹம்மத் அனஸ் சகோதரர்மான ஹலிபுல்லாஹ் அவர்கள் ஞயார்ட்டுக்கிழமை சார்ஜாவில்   தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

09 ஏப்ரல், 2012

சவூதி: 18 வருடங்கள் சம்பளமில்லாமல் அடிமையாகவும் அநாதரவாகவும் இருந்த தமிழர் மீட்கப்பட்டார்


18 years tamil slave without salary rescued from saudi arabiaசவூதியில் கடந்த பதினெட்டு வருடங்களாக அடிமையாகவும், அநாதரவாகவும் அலைகழிக்கப்பட்ட அப்பாவி தமிழகத் தொழிலாளி ஒருவருக்கு ஒருவழியாகத் தீர்வு கிடைத்துள்ளது.
சவூதியின் ஹைல் மாகாண ஆளுநர் இளவரசர் சவூத் பின் அப்துல் முஹ்சின் என்பவருடைய தலையீட்டால் பெரியசாமி என்னும் அந்தத் தமிழர் கஃபீல் எனப்படும் பொறுப்பாளரிடமிருந்து 85,000 ரியால்களை ஒட்டுமொத்தச் சம்பளமாகப் பெற்று ஊர்திரும்ப வழி ஏற்பட்டுள்ளது.  ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தில் அவருக்கான இத்தொகையை ஷாம்லி காவல் நிலையத்தார் ஒப்படைத்துள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சிரியா அரசு புதிய நிபந்தனை




சிரியாவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி பஷர் அல் அசாத் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம், ஓராண்டை கடந்த போதிலும் இன்னமும் அவர் பதவி விலக மறுத்து வருகிறார்.
போராட்டக்காரர்களை இராணுவம் கொன்று வருகிறது. இதனால் ஏற்படும் கலவரங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

குஜராத் : 23 முஸ்லீம்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 23 பேருக்கு தண்டனை, 23 பேருக்கு விடுதலை

Gujarat
                   



அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் 23 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 23 பேரை குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு 2002-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியன்று ஆனந்த் மாவட்டத்தின் ஓதே கிராமத்தில் 23 பேர் பதுங்கியிருந்தனர். 23 பேரும் பதுங்கி இருந்த இடத்துக்கு தீவைத்த ஒரு கும்பல் அனைவரையும் எரித்துக் கொன்றது.

08 ஏப்ரல், 2012

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம். Daily Motion மற்றும் Yahoo வில் அருவருக்கத் தக்கவற்றை பார்த்தவர்களுக்கு ஆப்பு வைக்கும் பேஸ்புக்.


சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

இஸ்ரேல் அரசை தனிமைப்படுத்த வேண்டும்,கவிஞர் குந்தர் கிராஸ்





ஜேர்மனியைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிஞர் குந்தர் கிராஸ், தனது கவிதை மூலம் தாம் இஸ்ரேல் அரசை தனிமைப்படுத்த விரும்புவதாகவும், இஸ்ரேல் என்ற நாட்டை அல்ல என்றும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அரசு மேற்கொண்டிருக்கும் அணு ஆயுத திட்டம் குறித்து மேற்கு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கொள்கைகளால் இஸ்ரேலுக்கு மேலும் மேலும் எதிரிகள் சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேலை எவ்வளவு சிதைக்க வேண்டுமோ அவ்வளவு சிதைத்துவிட்டார் நெதன்யாகு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு குந்தர் கிராஸை விமர்சித்துள்ளது. அதே நேரத்தில கிராஸின் கருத்துகளை ஈரான் வரவேற்றுள்ளது. 84 வயதாகும் குந்தர் கிராஸ் தி டின் டிரம் எனும் நாவலுக்காக 1999-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.