அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
14 ஏப்ரல், 2012
சிரியா : இரு தரப்பும் ஒருவர் மீது அடுத்தவர் குற்றச்சாட்டு
சிரிய மோதலில் அழிந்த இடங்கள்
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில் ஒரு இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக அங்குள்ள எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
அங்கும் இங்குமாக கிளர்ச்சிகுழு துப்பாக்கிதாரிகள் சுடுவதாக கூறியுள்ள அரசாங்க தொலைக்காட்சி, ஐநாவின் சமாதானத் தூதுவரான கோஃபி அன்னான் அவர்களின் அமைதித் திட்டத்தை தடம்புரளச் செய்யும் நடவடிக்கையில் எதிரணியினர் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மத்திய நகரான ஹொம்ஸ் நகரில் எறிகணை தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை ஹமாவில் பல சிப்பாய்கள் கொல்லப்பட்டு ஒரு கேணல் கிளர்ச்சிக்காரர்களால் கடத்தப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக