
நீதிபதியை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ஏற்கனவே நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது 4 பேர் எங்களை மிரட்டியதால் பிறழ் சாட்சி (பல்டி சாட்சி) அளித்தோம். எனவே என்னையும் மகன் ஆனந்த் சர்மா, மகள் உமா மைத்ரேயையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நீதிபதி இரு தரப்பு வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டார். பின்னர் இந்த மனு மீது நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும். அப்போது பத்மா, ஆனந்த் சர்மா, உமா மைத்ரேயி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சங்கர்ராமனின் மகன் ஆனந்த சர்மா, எனது தந்தை கொலை குறித்து நானும், எனது தாயார் பத்மா, சகோதரி உமா மைத்ரேயி ஆகியோர் வாக்குமூலம் அளித்தோம். அதில் உண்மையான வாக்குமூலத்தை அளித்தோம். ஆனால் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது, எங்களை 3 ரவுடிகள் மிரட்டினார்கள். இதனால் உயிருக்கு பயந்து நாங்கள் 3 பேரும் சாட்சியத்தை மாற்றிக் கூறினோம். எனவே தான் எங்கள் 3 பேரிடமும் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று இப்போது நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக