#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

08 ஏப்ரல், 2012

சொராஸ்டர்(பார்சீ) மதம் ஓர் பார்வை.


                                                          சொராஸ்டிரிய மதச்சின்னம்
  1. உலகம் தோன்றிய காலத்திலிருந்து எத்தனையோ மதங்கள் பிறந்து வளர்ந்து மறைந்து இருக்கின்றன. அவைகளில் சில கருவிலேயே சிதைந்தும் இருக்கின்றன. சில மதங்கள் பிறந்து எழுந்து நடந்து ஓடி வல்லரசாக நிமிர்ந்து நின்று, பிறகு மறுபடியும் வீழ்ச்சியை நோக்கி வீழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகின்ற சொராஸ்டிரா மதமும் ஒன்று.

  1. சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி. பண்டைய ஈரானிய மொழியில் சொராஸ்டர் (Zoroaster) என்ற இயர்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு .எனினும் இன்றைய வடக்கு ஈரானில் கி.மு.628ஆம் ஆண்டில்(கி.மு.628-கி.மு.551) இவர் பிறந்தாகத் தெரிகிறது .இவருடைய இளமைக் கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவர் தாம் உருவாக்கிய புதிய மதத்தை போதிக்க தொடங்கினார்.
     
                                                                     சொராஸ்டர் (Zoroaster)
அத்வைதமும் (Monotheism) துவைதமும் (Dualism) இணைந்த ஒரு கவர்ச்சிகரமான கலவையாகச் சொராஸ்டிரா இறைமையியல் அமைந்துள்ளது. இவர்களின் போதனைப்படி, ஒருவனே தேவன். அவனை அவர் ‘அஹுரா மாஜ்டா’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘ஒர்மஜ்டு’)  என்று அழைக்கின்றனார். ‘மெய்யறிவுப் பெருமான்’ (The wise Lord) என்று இதற்கு பொருள். அவன் நேர்மையினையும், வாய்மையினையும் ஊக்குவிக்கிறான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் ‘அங்ரா மைன்யூ’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘அஹ்ரிமான்) என அழைக்கின்றார்கள்.இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.
  உண்ம உலகில் நன்மையை ஆதரிப்பதா,தீமையை ஆதரிப்பதா என்பதை ஒவ்வொரு தனிநபரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையுடையவர். இவ்விருதரப்புகளுக்கிடையிலான போராட்டம் தற்போதைக்கு மிக நெருங்கிய போராட்டமாக இருந்த போதிலும், நீண்ட காலக் போக்கில் நன்மையே வெல்லும் என்று சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். மறுமை வாழ்விலும் அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.
அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார். 
                   விஷ்டாஸ்பா மன்னரிடம் ஆதரவு பெறுவது போன்ற ஒவியம்.
அதன் பின்பு  இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது. 
                                                                         மகா சைரஸ்அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது. 
                                          சொராஸ்டிரா பார்சீகளின் புனித தீப்பிழம்பு 
                                              தீப்பிழம்பை வணக்குகிறார்கள்
சொராஸ்டிரார்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன. 


         கோபுர உச்சியில் பிணங்கள் கழுகுகளால் தின்னப்பட்டு கிடக்கும் காட்சி
ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள்.எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர். 


                                           மும்பையில் சொராஸ்டரா பார்சீகள்                              
இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.

                                                      தீப்பிழம்பை வணங்கும் முறை இவர்களில் பெரும்பாலும் மும்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர்.ஈரானிலும் சொராஸ்டிர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை.எனினும்,அங்கு இன்று சுமார் 40,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக