சமூகத்தின் தனித்துவ அந்தஸ்தைப் பெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.தகுதி,
மொத்தம் 5.5 வருட காலத்தைக் கொண்ட MBBS படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களது பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களைப் படித்திருப்பதோடு, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலைப் படிப்பு,மருத்துவ முதுநிலைப் படிப்புகள் பொதுவாக 3 வருட காலத்தைக் கொண்டவை. இப்படிப்பில் சேர, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்த MBBS பட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
சேர்க்கை,தகுதியுள்ள மாணவர்கள், நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். AIPMT(All India Pre Medical Test) எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை, இந்தியாவிலுள்ள பல மருத்துவ கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. இவைத்தவிர, வேறுபல மருத்துவ நுழைவுத் தேர்வுகளும் உள்ளன. அவை,
* AIIMS நுழைவுத் தேர்வு
* AFMC(Armed forces Medical college) நுழைவுத் தேர்வு
* AU AIMEE(Annamalai university All India Medical entrance examinations) நுழைவுத் தேர்வு
* BHU(Banaras Hindu university) நுழைவுத் தேர்வு
* DUMET(Delhi university Medical entrance test) நுழைவுத் தேர்வு
* Manipal PMT நுழைவுத் தேர்வு
* அகில இந்திய முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு
* டெல்லி பல்கலைக்கழக சிறப்பு நிபுணத்துவ நுழைவுத் தேர்வு
* மருத்துவப் படிப்பிற்கான முதுநிலைக் கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நுழைவுத் தேர்வு
* உத்திரப் பிரதேச முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு
மேற்கூறிய நுழைவுத் தேர்வுகளைத் தவிர்த்து, ஒவ்வொரு மாநிலமும், தனது எல்லைக்குள் அமைந்துள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.
நன்றி.மக்கள் மனசு
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக