#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

18 ஏப்ரல், 2012

பேப்பர் கப் தயாரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பிரசாரத்தில் அசத்தும் இந்திய சிறுவன்





ஐக்கிய அரபு எமிரேட்டில் 10 வயது இந்திய சிறுவன் ஒருவன் “பேப்பர் கப்” தயாரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறான்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் இந்திய சிறுவன் அப்துல் முகீத் (வயது 10), சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயத்தில் தனது பிரசாரத்தை பேப்பர் கப் விநியோகிப்பதின் மூலம் செய்து வருகிறான்.
தினமும் காகித பைகள் தயாரித்து அவற்றை அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள், கடைகளில் கொடுப்பதை தனது அன்றாட பணியாக வைத்துள்ளான்.

சிறு வயதில் சமூக அக்கறையுடன் அப்துல் முகீத் செயற்படுவது, மக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து அப்துல் முகீத் கூறியதாவது, “பேப்பர் கப்” செய்து கடைகளுக்கு கொடுக்கும் வேலையை 8 வயதில் இருந்தே செய்து வருகிறேன்.
அப்பா எனக்கு கதைகள் சொல்வது போல சுற்றுப்புற தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சின்ன வயதிலேயே அடிக்கடி விளக்கி கூறுவார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்ற உணர்வு சிறு வயதிலேயே வந்தது. பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் பழைய பேப்பர்களை சேகரிப்பேன்.

பல்வேறு அளவுகளில் 10 முதல் 15 பைகள் செய்வேன். அதை அருகில் உள்ள கடைகளில் கொடுத்து விடுவேன். 2 ஆண்டுகளில் இதுவரை 4,500 பைகள் தயாரித்து கொடுத்துள்ளேன்.

நண்பர்களும், அயலவர்களும் என்னை செல்லமாக ‘பேப்பர் பேக் பாய்’ என்று தான் கூப்பிடுவார்கள்.

நான் தயாரிக்கும் பைகளை ‘அப்துல் முகீத் பேக்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.

ஒரு தொன் பேப்பரை மறுசுழற்சி செய்வதன் மூலம் 17 மரங்கள் பாதுகாக்கப்படுகிறது என்பதை பார்க்கும் எல்லாரிடமும் உணர்த்தி பைகளை கொடுப்பேன் என்று முகீத் கூறியுள்ளான்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து அபுதாபி, துபாய் உட்பட பல்வேறு நகரங்களில் முகீத் சிறப்பு பிரசார நிகழ்ச்சி நடத்தியுள்ளான்.

பல விருதுகள், பாராட்டு பத்திரங்கள், பதக்கங்கள் வாங்கியுள்ளான். ‘‘அப்பா, அம்மாவின் ஊக்கம் தான் என் சாதனைக்கு காரணம். சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து பணியாற்றுவேன்’’ என்று முகீத் உறுதியுடன் கூறியுள்ளான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக